மம்பட்டியான் ஸ்டார்ஸ் (Mammattiyaan Stars) திரை விமர்சனம்

மதிப்பீடு: ⭐⭐⭐⭐☆ (4/5)

🧶கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ் நகைச்சுவைத் தொடர் ஆகும். இந்தத் தொடர் பிரத்தியேகமாக ஜீ 5 (ZEE5) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கதைக்களம்:

🧶தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் இறுதிப் போட்டியை நேரில் காணத் துடிக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களான, நான்கு நண்பர்களின் பயணம் தான் இந்தத் தொடரின் கதை. இதில் நட்பு, நகைச்சுவை, மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன
தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை வரையறுக்கும் உற்சாகம், உணர்வு மற்றும் தோழமையை அழகாகப் பதிவு செய்கிறது.
மம்மட்டியான் ஸ்டார்ஸ்.
ஒரு கனவுப் பயணமாக தொடங்கும் இந்த அனுபவம், நட்பு, உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய அனுபவமாக. அந்தப் பயணத்தில், அவர்களின் உறுதியை சோதிக்கும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதோடு, இலக்கை விட பயணமே மறக்க முடியாததாக மாறக்கூடும் என்பதை உணர்கிறார்கள்.
வீட்டை விட்டு சென்னை வந்த நால்வரும் அந்த கிரிக்கெட் போட்டியை தனது தல “தோனியின் ஆட்டத்தை பார்த்தார்களா? இல்லையா? என்பது சுவராசமானமான பகுதி.
.இந்த வெப் தொடர் மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டுள்ளது

இயக்குனர்

🧶மம்பட்டியான் ஸ்டார்ஸ் வெப் தொடரை இயக்குனர் சுவீர் சுதாகர்.
,கிராமிய பின்னணி, ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களை கலந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில்
இயக்கி இருக்கிறார்.
தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது.அது
இயக்குனர் சாமர்த்தியம் .
கிராமத்து வாழ்க்கை, மொழி மற்றும் கலாச்சாரத்தை அழகாக பதிவு செய்துள்ளனர்
இயக்குனர்.
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் இதுவரை இவ்வளவு டீடைலாக சொன்னதில்லை கிராமத்து கடைகோடி வரை இந்த விஷயத்தை கொண்டு சென்றதில் இயக்குனரின் பங்கு மகத்தானது.
இளைஞர்கள் ரோட்டிலும் வயல் காட்டிலும் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த கிரிக்கெட் எவ்வளவு தூரம் பணம் சம்பாதிக்கிறது எத்தனை பேர் அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள் உலகம் முழுவதும் என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது.
இரண்டு எபிசோட்களில் திரைக்கதை, சற்று மெதுவாக நகர்கிறது.
நான்காவது எபிசோடில் இருந்து படம் ரெக்க கட்டி பறக்கிறது.
மொத்தத்தில்: ஆக்ஷன், கிராமிய உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு வெப் தொடராக மம்பட்டியான் ஸ்டார்ஸ் அமைகிறது. கிராமிய கதைகளை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கக்கூடிய தொடர்.
ரசிகர்களை ஏமாற்றாத தரமான வெப் தொடர்.
படத்தில் முக்கியமாக பெட்டிங் சீன் ,ஹை லைட் ஆக அமைந்துள்ளது.இந்த காட்சிகளை
:நவீன் ,ஷ்யாம் இருவரும் பெட்டிங்
காட்சிக்காக மெனக்கெட்டு இருக்கிறார்கள்
இயக்குனரோடு சேர்ந்து ,இதற்காக தனியாக பாராட்டலாம்.

🧶சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்
வாழ்த்துக்கள்.

🧶சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடர்
இன்று உலகத்தின்
ரிலேட்டிவ் கனெக்ட் செய்கிறது.

🧶வைபவ் முருகேசன்,
சின்னா என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் சாரு விடம் மீண்டும் காதலை சொல்ல துடிப்பது, நண்பர்களை விட்டுக் கொடுக்காமல் பழியை தானே ஏற்றுக் கொள்வது, தல” தோனியை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவது, கிராமத்தில் இயல்பாக கிரிக்கெட் விளையாடுவது, என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

🧶 லாவண்யா,
சாரு என்ற கதாபாத்திரத்தில்
தனக்கு பிடித்த வேலையை தேடிக் கொள்ளும் இன்றைய புதுமை பெண்ணாக, கிரிக்கெட் விளையாட்டை கை விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

,🧶வெங்கட் பாலமுரளி,
ஷக்கீல் “என்ற கதாபாத்திரத்தை
உள்வாங்கி அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

🧶ஜகவர் சாதிக்,
ஸ்டம்பிங் சிவா என்ற கதாபாத்திரத்தில் துருதுருவென, ஹலோ கந்தசாமி யின் மகனாக நன்றாக நடித்திருக்கிறார். காமெடிக்கு இவர் கேரண்டி.

🧶நான் கடவுள் ராஜேந்திரன்
விருமாண்டி ,என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பஞ்சாயத்து தலைவராக மம்மட்டியான் ஸ்டார்ஸ் ,கிரிக்கெட் குழு ஜெயிக்க கூடாது, என்று இறுதிவரை போராடி உயிரை விடும் கலகலப்பான கதாபாத்திரம்..

🧶 மற்றும் விவேக் பிரசன்னா,
இஸ்லாமிய பாயாக,
டீக்கடை நடத்தி கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

🧶சம்பத், கிரிக்கெட் சூதாட்டம் ஆடும் சேட்டு வேடத்தில் கலக்கி இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது.

🧶சரத் ரவி ஹாஸ்டல் வார்டனாக வந்து நான்கு பேரையும் கிரிக்கெட் சூதாடத்துக்குள் தள்ளிவிடும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் .

🧶 பரத் தன சேகர்
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு,
கிராமத்து அழகையும் சென்னை அழகையும் வயல்வெளிகளையும் பெட்டிங் நடக்கும் இடத்தையும் அழகாக படம் பிடித்திருக்கிறது.

🧶 பவித்ரன் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது காட்சிகளை சீராக செதுக்கியிருக்கிறார் தொடரின் வெற்றிக்கு படத்தொகுப்பாளர் ஒரு காரணம்.

🧶 தமிழ்செல்வன் BFA கலை இயக்கம்
பெட்டிங் நடக்கும் இடம்.
நாயகர்கள் தங்கும் இடம், நாயகியின் வீடு, நாயகன் வீடு என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் நன்றாக பணிபுரிந்து இருக்கிறார்.

🧶ஒப்பனை யாளர்
இயல்பான ஒப்பனையை கொடுத்திருக்கிறார் நடித்த அனைவருக்கும்.

🧶மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா(AiM)

🧶மொத்தத்தில்
ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் அங்கு ஏற்படும் அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை.

🧶 பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏமாறுவது,
பெட்டிங் கில், சம்பத் ராம் சம்பாதித்துக் கொண்டு ஏமாற்றுவது,
இப்படி பல காட்சிகள் இயல்பாக இருக்கிறது.

🧶 நாயகி லாவண்யா சித்தி வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் மாட்டிக் கொள்வது எதார்த்தம்.

🧶 எதற்காக கஷ்டப்பட்டு சென்னைக்கு வந்து தல தோனி “யின்
ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த நான்கு பேருக்கும் டிக்கெட் ஃப்ரீ யாக கிடைத்தும், அம்மாவின் செயினை திருடிக் கொண்டு வந்த அந்த நான்கு இளைஞர்களுக்காக அதை இலவசமாக கொடுத்துவிட்டு ஊர் திரும்பும் பொழுது சின்னாவின், கேரக்டர், இமயமலை அளவு எழுந்து நிற்கிறது

🧶. பஞ்சாயத்து அலுவலகத்தில் ,80 ஆயிரம் ரூபாய் இருக்கும் பொழுது தங்களுக்கு சேர வேண்டிய 30 ஆயிரம் ரூபாய் மட்டும் திருடிக் கொண்டு அது வீடியோவாக எடுத்துக்கொண்டு வருவதும் ரசிக்கும்படி இருந்தது.

🧶 கர்நாடகவைச் சேர்ந்த ராகவ், தங்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தும் கூட, தல தோனியை ,விட்டுக் கொடுக்காமல் வாதாடி ,பஞ்சாப் அணி 15 ஓவரில் வெற்றி பெறும் என்று பெட்கட்டும் இடம் சுவராஸ்யமான பகுதி.

🧶 சின்னாவின் தந்தையாக வரும் கார்த்திகேயன் மகனுக்காக அழுது புலம்பும் காட்சி.

சிவாவின் அப்பாவாக வரும் ஹலோ கந்தசாமி மகனிடம் வெள்ளந்தியாக பேசும் காட்சி.

சீட்டாடும் அப்பாவாக வரும் ஷக்கிலின் அப்பா, இந்த மூன்று பேரும் அம்மாக்களும்,
சாருவின், அம்மாவும்,
துணை கதாபாத்திரங்களாக இந்த வெப் தொடரில் உயர்ந்து காணப்படுகிறது.
கிராமங்களில் இது போன்ற அப்பாவும், அம்மாவும், இருப்பதை இந்த வெப் தொடர் எதார்த்தமாக எடுத்துக்காட்டுகிறது.
🧶 கிராமத்தில் வீட்டிலோ, அல்லது பொது இடத்தில் கிரிக்கெட் பார்க்கும் இளைஞர்கள்,
செண்டிமெண்ட் பார்ப்பது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு தாத்தாவை இடம் மாற்றி உட்கார வைப்பது,
படுத்துக்கொண்டு பார்ப்பவரை நிமிர்ந்து உட்காரச் சொல்வது.
கணவன் ,மனைவி சேர்ந்து கிரிக்கெட் பார்க்கச் சொல்வது. என்று மூவரும் செய்யும் ரகளை ரசிக்க வைக்கும் காட்சிகள் .நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் காட்சி கள்.

🧶 ஜீ 5 “ஒரு தொடரை வெளியிடுகிறது. என்றால் நிச்சயம் அதில் தரமான, மனதுக்கு நெருக்கமான, காட்சிகள் பாராட்டக்கூடிய கதைக்களம் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.