லவ் (Love Oh Love) திரைப்படத்தின் பிரஸ் மீட் (செய்தியாளர்” *சந்திப்பு) மற்றும் டீசர் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது

.🧶இந்த நிகழ்வில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
மிக சிறப்பாக நடை பெற்றது.

:🧶இயக்குநர்: மகேஷ் ராஜேந்திரன் தயாரிப்பாளர்கள்: தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்ஜெயன் (Creative Entertainers and Distribution) இயக்குனர்கள் திரு. கே. எஸ் ரவிக்குமார், திரு ஆர் .கே செல்வமணி, நூறு சாமி படத்தின் இயக்குனர் சசி,இயக்குனர் கஸ்தூரிராஜா, இயக்குனர் ரவி மரியா, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,

நடிகை வனிதா என பலரும் கலந்து கொண்டனர் .கலந்து கொண்டு இந்த படத்தை பற்றி மிகவும் பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். படம் நிச்சயம் நன்றாக வந்திருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள் வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கிறது.

🧶நடிகர்கள்: பவிஷ் நாராயண் (நாயகன்), நாக துர்கா (நாயகி)
மற்றும் படத்தில் ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.

.கதைக்களம்

🧶:தற்காலத்தில் காதலில் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான சிக்கல்களைப் பற்றிய ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.காதலுக்காகச் செலவு செய்து, கிரெடிட் கார்டு வரம்பை மீறும் நாயகனின் கதை, நகைச்சுவையாகவும் அதே நேரம் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்படுகிறது.இதில் ஆண் மற்றும் பெண் இருவரின் பார்வையில் இருந்தும் காதலின் அழுத்தங்கள் விவரிக்கப்படுகின்றன.

🧶முக்கிய ஹைலைட்ஸ்:
செல்வராகவன் மற்றும் கே.எஸ். ரவிகுமார் ஆகியோர் இப்படத்தில் அழுத்தமான கருத்துகளைப் பேசும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

🧶இசையமைப்பாளர் ‘Foxn’ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் (Kamala Theatre) நடைபெற்றது.

🧶லவ் ஓ லவ் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 10 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

🧶நடிகை வனிதா அவர்கள் பேசும் பொழுது….. சந்தோசமாக இருக்கு .லக்கி டைரக்டர் ,டைட்டில் நல்லா இருக்கு. மலையாள ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கொடுங்க எங்களையும் கொஞ்சம் பாருங்க பவிஸ் ரொம்ப பிடிக்கும் .வெரி க்யூட், தினேஷ் சார், தனஞ்செயன் சார், தேங்க்யூ ,படம் பார்க்க ஆவலா இருக்கு படம் நல்லா வந்திருக்கு, லவ் ஓ லவ் ஜூலை 10 ஆம் தேதி எல்லோரும் பார்க்கலாம் .
ரிவியூ கொஞ்சம் பார்த்து எழுதுங்க தியேட்டருக்கு வருவதற்கு முன்னாலே ரிவ்யூ போடுறீங்க. கொஞ்சம் கருணை காட்டுங்க என்றார் .

🧶படத்தின் நாயகன் பவிஷ் பேசும் பொழுது, மகேஷ் சார் கதை நல்லா நரேட் பண்ணினார் காபி ஷாப்பில் தான் எனக்கு சொன்னாரு. மூணு காபி குடிச்சேன் சிரிச்சிட்டு இருந்தேன். எல்லோரும் திரும்பி திரும்பி பார்த்தாங்க. படம் நல்லா வந்திருக்கு. இந்த படத்தில் பெரிய இயக்குனருடன் ஒர்க் பண்ணியது மிகப்பெரிய பாக்கியம். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சார். நிறைய கத்துக் கொடுத்தார். செல்வா சார் நடிக்கும்போது எமோஷனல் இருந்தது .தேங்க்யூ செல்வா சார் மியூசிக் யாருன்னு கேட்டேன். பிரதிப் பிரதீப் னு சொன்னாங்க கடைசில போஸ்டர் பார்த்தால் ஃபாக்ஸன் னு போட்டு இருந்தாங்க பாக்ஸின் ரெண்டு பேருனு சொன்னாங்க பாடல் நல்லா வந்திருக்கு. சண்டை பயிற்சி மாஸ்டர் அபிஷேக் வந்தார்னா, ஜாலியா விடுவேன். நாகதுர்க்கா நல்ல பர்பாம் பண்றாங்க நான் ஒரு வாரம் ரிகர்சல் எடுத்திட்டு டான்ஸ் பண்ணா அவங்க பார்த்தவுடன் டான்ஸ் ஆடுனாங்க இந்த படம் நல்லா வந்திருக்கு .

 

🧶கலைப்புலி தாணு அவர்கள் பேசும்பொழுது…. இன்ப நாளிது இனிய நாளிது தினேஷ் , தனஞ்ஜெயன் சேர்ந்து பண்றாங்க 20 கோடி பட்ஜெட்னா 10 கோடி ஆகிடுவார்
தனஞ்செயன்
அந்த அளவுக்கு திட்டமிட்டு படம் பண்ணுவாரு வியாபாரத்திலும் கெட்டிக்காரத்தனமாக பண்ணுவார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி தரும் பவிஷ் அழகும், ஆளும நிறைந்த நாயகனாக தெரிகிறார் .காதல் என்றுமே மாறாது! இந்த காதல் வாழ்க நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் .

🧶தயாரிப்பாளரும் நடிகருமான சித்திரா லட்சுமணன் பேசும்போது, இனிய காலை வணக்கம் இந்த மேடையில் 24 பேர் பேச வேண்டி இருக்கு, தனஞ்ஜெயன் விளக்கமா பேசிட்டு போயிட்டாரு. மொத்தமா அவரே சொல்லிட்டாரு, மற்றவர்கள் எல்லாம் ஆமா ஆமா பேசினா மட்டும் போதும். நாகதுர்காவை யூடியூப் சேனலுக்கு போக வேண்டாம்னு சொன்னாரு. நாகதுர்கா அட்வைஸ் கேட்காதீங்க ,
youtube மூலமா தான் நீங்க வந்து இருக்கீங்க, தினேஷுக்கும் தனஞ்செயன் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் .

🧶இயக்குனர் ரவி மரியா அவர்கள் பேசும்பொழுது, நான் என் மகனை வைத்து இந்த கதையை படமாக்க மகேஷை இயக்குனர் ஆர் கே செல்வமணி இடம் கூட்டிக்கொண்டு போனேன்.
தனஞ்செயன் சாரிடம் கதை கொடுத்து விட்டேன்
என்று சொன்னார். கதை சொல்வதில் என் குருநாதர் எஸ். ஜே சூர்யா, செந்தமிழன் சீமான்
இருவரும் சொன்னால் அப்படி ஒரு அட்டென்ட் இருக்கும். கிரியேட்டிவா இருக்கும். அதேபோல இயக்குனர் மகேஷ் சொல்வார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்

🧶 தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பேசும் போது…

நல்ல டீம் அமைவது அதிர்ஷ்டம் ,யூத் புல்லா படம் வந்திருக்கு, மகேஷ் ராஜேந்திரனுக்கு நன்றி! எட்டு பேர் கிட்ட கதை சொல்ல சொன்னேன் வியாபாரத்துக்கு கூட கதை சொல்ல சொன்னேன் கதையை கேட்ட திங்க்” மியூசிக் பாராட்டினாங்க, நம்பிக்கை கொடுத்தாங்க. ஒவ்வொரு பாடலும் இன்வால்மென்ட் ஆகி அவர்களே கூட இருந்து சிறப்பாக கொண்டு வருவதற்கு உதவினார்கள். இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் மிகப் பெரிய பிரச்சனை வியாபாரம் தான். சேட்டிலைட்
ஓடிடி எல்லாரிடமும் போய் கேட்டோம் இரண்டாவது பிளாட்பாரம் அமோசன் வாங்கிட்டாங்க.

படம் பார்த்தாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க .ஆனா ஒரே ஒரு கண்டிஷன் படம் ஜூலை 10த் வர முடியுமா? என்று கேட்டார்கள்! இல்லனா ஜனவரி வாங்க என்றார்கள். இரவு பகலா இந்த டீம் உழைச்சாங்க. முத்தரசன், பாலாஜி கடுமையா உழைச்சிருக்காங்க, நாங்க இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கோம் .இது யூத்துக்கான படைப்பு .புதுசா ரொமாண்டிக் படைப்பு .தமிழ் சினிமா இன்னைக்கு நல்லா வந்துட்டு இருக்கு. இயக்குனர் சசி ,இயக்கிய நூறு சாமி படம் பெரிய அளவில் போயிட்டு இருக்கு. எனவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் ,நல்ல கதையை ,ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், கைவிட மாட்டார்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

🧶 இயக்குனர் ஆர் கே செல்வமணி அவர்கள் பேசும்பொழுது,
லவ்ஓ லவ் இசை வெளியீட்டுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கஸ்தூரிராஜா என்னுடைய நெருங்கிய நண்பர் தன் மகனை இயக்குனர் ஆக்கினார்.
நடிகராக ஆக்கினார்.இப்போது பேரனை நடிகனாக்கி இருக்கிறார்.

ரவி மரியா மகனை வைத்து நாயகனாக நான் தயாரிக்க, படத்துக்கு 100 கதை கேட்டேன் .இந்த கை தான் பெஸ்ட் ஆக இருந்தது .மகேஷ் என் கிட்ட 1:30 மணி நேரம் கதை சொன்னார். கதை கேட்கும் பொழுதே படம் பார்ப்பது போல் இருந்தது. படம் மிக நல்லா வந்திருக்கு நாயகன், நாயகி எக்ஸ்ட்னாரி நல்ல கேரக்டர். மிகப்பெரிய படம் வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.

🧶மக்கள் தொடர்பாளர் ரேகா அனைவரையும் வரவேற்றார்.

ஆமா இந்த படம் பாக்ஸ் ஆஃப் ல்
மிகப்பெரிய வெற்றியடையும் வெற்றிக்கு கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷🙏🏾