விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஜூலை 3-ல் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றி விழா (Success Meet) சென்னையில் 9 தேதி நடைபெற்றது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு புதிய BMW கார் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்தார்.
வெற்றி விழாவில் ஹைலைட்ஸ் “கார் பரிசு:
படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ், விஷ்ணு விஷாலின் கடின உழைப்பைப் பாராட்டி BMW கார் ஒன்றை பரிசாக வழங்கினார்
.விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி:
“கட்டா குஸ்தி 1-க்கு பிறகு இரண்டு மூன்று வருடங்கள் சரியாய் அமையாததால் என்னை சினிமாக்காரர்கள் மறந்துவிட்டார்களோ என்று பயந்தேன். ஆனால், இந்த படம் ரூ.50 கோடி வசூலை நோக்கிச் செல்வதைப் பார்க்கும்போது என்னை மறக்கவில்லை என்று புரிகிறது” என உருக்கமாகத் தெரிவித்தார்
.ஐஸ்வர்யா லட்சுமி:
“இது மிகவும் அழகான தருணம், என்னுடைய ஒட்டுமொத்த குழுவும் இங்குள்ளது” என மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்
இயக்குனர் செல்லா அய்யாவு பேசுகையில்,
“விஷ்ணு விஷால் 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றியே சிந்திப்பவர். அவரது உழைப்புக்கு கிடைத்த தகுதியான பரிசு இது” என்று குறிப்பிட்டார்.
வெற்றி விழாவில் படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பகிர்ந்து கொண்டனர்:
இந்த படத்தின்
தயாரிப்பாளரான வேல் பிலிம்ஸ்
ஐசரி கணேஷ் அவர்களுக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஹீரோ விஷ்ணு விஷாலும் மிகுந்த ஹாப்பியாக பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொன்னார் .
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் டைரக்டர் செல்லா ஐயாவு.
ஐசரி கணேஷ் அவரதுமகள் இணை தயாரிப்பாளர் குஸ்மிதா கணேஷ்.
ஐஸ்வர் லட்சுமி .
பேபி சாரா, டீச்சர் மோக்ஷா, கருணாஸ், முனீஸ் காந்த் ,காளி வெங்கட், லிஸி ஆண்டனி, ஒளிப்பதிவாளர் பாஸ்கரன்
இசை அமைத்துள்ளார் சான்ரோல்டன்
உட்பட கலந்து கொண்டனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த அத்தனை கலைஞர்கள் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது.

இயக்குனர் செல்லா அய்யாவு பேசும் போது….
சென்னை சாலிகிராமத்தில் பிசியோதெரபிஸ் டாக்டர் ஆக இருந்த உண்மையை சொன்னார் .
வேல்ஸ் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்காமல் சவிதா காலேஜில் இடம் கிடைத்த கதையை சொல்லி கலகலப்பூட்டினார். இயக்குனர் செல்லா அய்யாவு
இந்த படம் ஆரம்பமாகி ரிலீஸ் ஆகி இப்பொழுது மாபெரும் ஹிட் அடித்துள்ளது. விஷ்ணு விஷால் அவருக்கு எல்லா புகழும் என்று டைரக்டர் செல்லா ஐயாவு பெருமிதம் பொங்க பேசினார் .
முனீஸ் காந்த் படப்பிடிப்பில் அவரை டயலாக் போட்டுக் கொள்வார் அது எனக்கு கொஞ்சம் படத்தின் புட்டேஜ் அதிகமாகிவிடும் என்று பயந்தேன்
இன்று கலகலப்பூட்டினார்.
பேபி சாரா பேசியது இந்த விழாவில் மிகவும் ஹைலைட்டாக இருந்தது துள்ளித்துள்ளி குதித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசு அனைவரையும் கவர்ந்தார். சாரா.
திரு ஐசரி கணேஷ் அவர்கள் பேசும் பொழுது….
வேல்ஸ் காலேஜில் இடம் கிடைக்காத செல்லா அய்யாவுக்கு, இப்ப வேல்ஸ் சினிமா கம்பெனியில் டைரக்டர் சான்ஸ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி .
பத்து படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் அதில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது இனி மாதம் ஒரு படம் வெளிவரும் என் இளைய மகள் தான் தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார் அவர் ஈடுபட்ட முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
இந்தப் படத்தின் முழு பொறுப்பையும் விஷ்ணு விஷால் எடுத்துக்கொண்டார் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் அவர் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் பட புரமோசனுக்கு சென்று மிகவும் கடுமையாக உழைக்கிறார் இப்படிப்பட்ட ஒரு கதாநாயகன் கிடைத்தால் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று விஷ்ணு விஷாலை மிகவும் பெருமையாக குறிப்பிட்டார்.
என்று பேசி செல்லையாவுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் அணிவித்து குஷிப்படுத்தினார்.
இந்த சந்தோஷம் போதாது என்று ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசளித்தார்.
படத்தில் நடித்த அத்தனை பேருக்கும், நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். ஐசரி கணேஷ்
பத்திரிக்கையாளர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி மனம் குளிர வைத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள்.
இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
படத்தின் புரமோஷன் சமயத்தில் நடிகர் சூரியுடன் (Soori) விஷ்ணு விஷால் நடத்திய வீடியோ அழைப்பும் வைரலானது. இதனால் இருவருக்கும் இடையே இருந்ததாக கூறப்பட்ட கருத்து வேறுபாடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. �
மொத்தத்தில் இந்த சக்ஸஸ் விழா படக்குழு அனைவருக்கும்
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.
35 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கும் இந்த படம் விரைவில் 50 கோடி வசூலை நெருங்கும், 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும், என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🌷
