இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள, அருள் வான் திரை படம்.மலைவாழ் மக்களின் கல்வியையும், ஒரு மாவட்ட ஆட்சியரின் ,மனித நேயத்தையும் சொல்லும் படம்.
அவர் முன்பு தேன்,
போன்ற இயற்கை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட படங்களை இயக்கியவர். இந்தப் படத்திலும் அதே பாணியை இன்னும் பெரிய அளவில், மலைவாழ் மக்கள் கல்வியறிவு, அவசியத்தை கொண்டு வந்துள்ளார்.
கதை களம்
🧶அருள்வான் “ஒரு சாதாரண கிராமக் கதை அல்ல. மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, குறிப்பாக கல்வி உரிமை என்ற முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டதாக உருவாகியுள்ளது. மேலும் இது உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கதை. மலைவாழ் மக்கள் வாழும் பூங்குடி கிராமத்தில் வாழும்
கந்தன், (ஆர்வ்)
மரமள்ளி, (ரம்யா பாண்டியன்)
இவர்களின் மகள் குறிஞ்சி, (கிருத்திகா)
குறிஞ்சியின் பார்வையில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
அடர்ந்த மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் ஒரு சிறுமி தனது கல்விக்காகப் படும் கஷ்டங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.:பழங்குடியின சிறுமியாக நடித்திருக்கும் கிருத்திகாவின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது
ரம்யா பாண்டியனின், அப்பா” மூப்பர்
இவர் படிப்பறிவு இல்லாததால் ஃபாரஸ்டர் ஜான் பாண்டியனிடம், கைநாட்டு வைத்து ஏமாந்து போகிறார்.
இதனால்” குறிஞ்சி படிக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறாள். அதற்காக கலெக்டரை தேடி தனியாக தேனி மாவட்டத்திற்கு வருகிறாள்.
பல கழுகு பார்வையில் ,சிக்கி கார் விபத்தில் ரோட்டில் கிடக்க, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அதன் பிறகு கலெக்டரை குறிஞ்சி சந்தித்தாரா?
குறிஞ்சியால் கிராமத்துக்கு கல்வி அறிவு கிடைக்ததா?
என்பதை மனிதநேயத்தோடு சொல்லி இருக்கிறது. “அருள்வான்”
படத்தின் மையக் கருத்து பழங்குடியின குழந்தைகளின் கல்வி உரிமை. ஒரு சிறுமியிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பல தடைகளை எதிர்த்து போராடும் மாவட்ட ஆட்சியர்
இவர்கள் இருவர் தான் படத்தின் மையம்.. இது வெறும் அதிகாரியின் கதை அல்ல, சமூக மாற்றத்தைப் பற்றிய,
மனிதநேயம் உள்ள கலெக்டர் முத்துவேல் , குறிஞ்சி அவளால் அந்த கிராமத்துக்கே கல்வி அறிவு எப்படி கிடைத்தது? என்பதை சொல்லும் படம்..
🧶அருள்நிதி, நேர்மையான மாவட்ட ஆட்சியர் முத்துவேல்,என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர் வந்த பிறகு படத்தின் உயரம் எவரெஸ்ட் சிகரமாக நிமிருகிறது.
அவ்வளவு ஒரு அற்புதமான கதாபாத்திரம
அருள்நிதி நடித்திருக்கும் மாவட்ட ஆட்சியரின் பெயர் “முத்துவேல்”. இது கற்பனைக் கதாபாத்திரம் மட்டும் அல்ல; 1950-களில் வாழ்ந்த ஒரு உண்மையான மாவட்ட ஆட்சியரின் பணியால் ஈர்க்கப்பட்டு இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வேடம் வழக்கமான “ஹீரோ” கதாபாத்திரத்தைப் போல இல்லாமல் . ஒரு அரசு அதிகாரியின் நேர்மையையும் மக்களின் நம்பிக்கையையும் திரையில் நம்பகமாகக் காட்ட பட்டுள்ளது.
அருமையான கதாபாத்திரம் நீண்ட நாள் நினைவில் இருக்கும் கதாபாத்திரம்.
மாவட்ட ஆட்சியராக இயல்பாகத் தோன்றுவதற்காக, அதிகாரிகளின் உடல்மொழி, பேசும் விதம், அமைதியான அணுகுமுறை போன்றவற்றை கவனித்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் மிகைப்படுத்தப்பட்ட மாஸ் ஹீரோவாக இல்லாமல், நிஜ வாழ்க்கை அதிகாரியைப் போல இருக்க வேண்டும் என்பதில் இயக்குநரும், அருள்நிதியும் கவனம் செலுத்தி
யுள்ளார்கள்.
அருள்நிதிக்கு, இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் படமாகவும், பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
🧶கந்தன் (ஆரவ்)
ஒரு உண்மையான காட்டுவாசி, எப்படி இருப்பார்!! என்று காடர்மொழி பேசி, அவர்களின் உடல் மொழி, பொறுமை, பேசும் விதம் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜான் விஜய் மனைவியை தீண்டியதற்காக, கொதித்து எழுந்து போராடும் காட்சி.
மற்றும் மகளுக்கு கல்வியைப் பற்றி போதிக்கும் காட்சி, தைரியமான பெண்ணாக வாழ வேண்டும் என்று சொல்லும் காட்சி, சாமி ஆடும் காட்சி என்று பல இடங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
🧶மரமல்லி(ரம்யா பாண்டியன்)
காட்டுக்குள் வாழும் மலைவாழ் பெண்ணின் எளிமை, வெட்கம், இயற்கையோடு ஒன்றிப்போன வாழ்க்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பழங்குடியின பெண்ணாகவும், மக்களின் உரிமைக்காகப் போராடும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ரம்யா.
🧶படத்தின் ஹீரோ ; குரிஞ்சி”
(கிருத்திகா) தான்
அருள் நிதி,ஆரவ், ரம்யா பாண்டியன் மூவரும் அவளுடைய கதையில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே” .
துணிச்சல் மிக்க பெண்ணாக, அப்பாவிடம் கேள்வி கேட்பது, தாத்தாவிடம் அன்பு காட்டுவது ,எனக்கு திருமணம் வேண்டாம்!! என்று அம்மாவிடம்வாதாடு வது,
கலெக்டர் தேடி தனியாக பயணிப்பது ,என்று படம் முழுக்க அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்!! குருஞ்சியாகவே வாழ்ந்திருக்கிறார் கிருத்திகா.
.
🧶காளி வெங்கட், மலைவாழ் மக்களுக்கு உதவும் பத்திரிகையாளராக, தன்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
டிடிவி கணேஷ் சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் அருள் நிதியின் உதவியாளராக வந்து மலையேற்றத்தின்போது கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
கோடங்கி வடிவேலு டபேதிகராக வருகிறார்.
நிரோஷா ஒரு சில காட்சிகள் வந்தாலும் மருத்துவராக வந்து பொறுப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஜான் விஜய் பாரஸ்ட் ஆபீஸ் ஆக வந்து அயல்நாட்டுக்காரர்களுக்கு கூலிக்காரராக, காளான் போதையை உற்பத்தி செய்து கொடுத்து, மலைவாழ் மக்களுக்கு எதிரியாகவும் மிரட்டலாக நடித்திருக்கிறார்.
பருத்திவீரன் சரவணன் ஒரு காட்சி வந்தாலும் நல்ல ஃபாரஸ்ட் ஆபிஸராக மனதில் நிற்கிறார்.
🎵 இசை
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
“அல்லிப்பூவே” பாடல் மனதை மயக்கும் பாடல்
அதேபோல இந்த சாமியாட்டம் பாடலும் ரசிக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றியில் இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
படத்தின் இசை, மற்றும் பின்னணி
உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஏற்ற இசையும், கிராமிய சூழலுக்கு பொருந்தும் மெட்டுகளும் இந்தப் படத்தின் சிறப்பை கூறப்படுகின்றன .
:🧶ஒளிப்பதிவு – எம். சுகுமார் (M. Sukumar)
இயற்கைக் காட்சிகளை உயிரோட்டமாகப் பதிவு செய்வதில் பெயர் பெற்ற ஒளிப்பதிவாளர்.
இந்த படத்தில் மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை இயல்பான ஒளியில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
.
✂️ படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர் (Lawrence Kishore)
வேகமான மற்றும் விறுவிறுப்பான எடிட்டிங்கிற்கு பெயர் பெற்றவர்.
டிராமா மற்றும் உணர்ச்சிக் காட்சிகளின் ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்கும்படி படத்தைத் தொகுத்துள்ளார்
🎨 கலை இயக்கம் – லால்குடி இளையராஜா
பழங்குடியின கிராமங்கள், அரசு அலுவலகம் மற்றும் மலைப்பகுதி சூழலை இயல்பாக உருவாக்கியுள்ளார்
படத்தின் யதார்த்தமான தோற்றத்திற்கு இவரது கலை இயக்கம் முக்கிய பங்காற்றியுள்ளது.
🧶இயக்குனர் கணேஷ் விநாயகன் இயற்கையின் உண்மையான அழகை பிடிக்க பல மாதங்கள் இடங்களை தேடி தேர்வு செய்து ள்ளார். கடினமான படப்பிடிப்பு
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சாலை வசதியே இல்லாத மலைப்பகுதிகளில் படமாக்கியிருக்கிறார்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்உடன் சுமார் 18 நாட்கள் டென்ட்களில் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு
பல இடங்களுக்கு 4 கிலோமீட்டருக்கும் மேல் நடந்து சென்று
இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி, மிகவும் சவாலான சூழலில் உழைத்துள்ளார்
படத்தில் எல்லைப் பகுதிகள், நீர்வீழ்ச்சி சுற்றுவட்டாரங்கள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி
அவர் குறிப்பாக மலைப் பகுதிகளையும், பனிமூடிய பள்ளத்தாக்குகளையும் தேர்வு செய்ததற்குக் காரணம், பார்வையாளர்கள் ஒரு கனவு உலகிற்குள் சென்ற உணர்வைப் பெற வேண்டும் என்பதுதான். பல காட்சிகளை ரசித்து எடுத்துள்ளார்.இயக்குனர்.
மலைவாழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து 50 வருடம் ஆகியும், இன்னும் கல்வி கிடைக்கவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். விலங்குகள் அந்த மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்வதில்லை. மனிதர்கள் தான் தொந்தரவு செய்கிறார்கள் என்ற அரிய கருத்தையும் கூறியிருக்கிறார் .
மனிதநேயம் உள்ள ஒரு அரசு அதிகாரி முயற்சி செய்தால், பல ஐ.பி.எஸ் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்க முடியும் என்று ஒரு வெற்றிகரமான பாதையை காட்டி இருக்கிறார்..
குறிஞ்சி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படத்தை மோட்டிவேஷன் நிறைந்த கருத்தை கொண்ட கதையை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் ,மலை வாழ் மக்களைப் பற்றிய இயக்குனர் பார்வையில்,
, மலைவாழ் மக்கள் மிகவும் அப்பாவிகள்; அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை முறையிலிருந்தே தனது கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டிஉள்ளார்
🎬 நகரக் கதைகளை விட காடுகளிலும் மலைகளிலும் சொல்லப்படாத ஆயிரக்கணக்கான கதைகள் இரு”க்கிறது என்பதை ‘இந்தபடத்தில் காடு, மலை மனிதர்கள் என்று இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பேசும்
படைப்பாற்றல் தந்துள்ளார்.
ஒரு பெண் குழந்தையால் அந்த சமூகமே தலை நிமிர்ந்து நிற்க வைத்த ஒரு காவிய கல்வி படைப்பை தந்துள்ளார்.வாழ்த்துக்கள் சார்.
பல விருதுகள் அள்ளிக்கொண்டு வரும் இந்த படத்திற்கு வாழ்த்துக்கள்.
இந்தப் படத்திற்காக உழைத்த ஒப்பனையாளர். சண்டை பயிற்சியாளர்கள். நடனப் பயிற்சியாளர்.
கலர் கரெக்ஷன், மற்றும் டி ஐ செய்தவர்கள்,
என்ன பலரும் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு வெற்றி படமாக அமையும்.
சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறது
அவருக்கு வாழ்த்துக்கள்.
🧶மக்கள் தொடர்பாளர்
திரு.நிகில்முருகன்
அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல திரைப்படத்தில்
மூலம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த தயாரிப்பாளர் ஜி சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
