இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ (The Odyssey) ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை நவீன தொழில்நுட்பத்தின் உச்சமான IMA X 70mm வடிவில் திரைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான சினிமா கலைப்படைப்பு.படம் பற்றிய சிறப்பம்சங்கள்
:கதைக்களம்:
கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம், ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது நாட்டிற்கும் குடும்பத்திற்கும் திரும்ப போராடும் ஒடிசியஸின் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டது. மனித உணர்வுகள், போர் ஏற்படுத்தும் மனவலி, மீட்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை பிரம்மாண்டமான காட்சிகளுடன் நோலன் சொல்லியிருக்கிறார்.படம் மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.
கிரேக்க படைகளுக்கு ஆதரவாகச் செல்லும் இத்தாகாவின் குறுநில மன்னனான ஒடிசியஸ், 10 ஆண்டுகள் இடைவிடாத போரில் இறுதியாக ட்ரோஜன் குதிரையை உருவாக்கி அதில் தன் வீரர்களுடன் ஒளிந்துகொள்கிறார். பின், அது பரிசுப்பொருள் என நம்பும் ட்ராய் வீரர்கள் அதனைக் கோட்டைக்குள் இழுத்துச் செல்கின்றனர். அங்கு திட்டமிட்டபடி ஒடிசி தன் வீரர்களுடன் ட்ராய் நகரை வெல்கிறான். பல ஆண்டுகள் நடந்த போர் முடிவுற்றதும், ஒடிசியஸும் அவனது வீரர்களும் நாடு திரும்ப படகுகளில் ஏறுகின்றனர். ஆனால், அவர்களால் நினைத்து போல் செல்ல முடியவில்லை. கடலின் கடவுளான பொசைடான், ஒற்றைக் கண் கொண்ட ராட்சச உருவத்தை எதிர்கொள்வது, சூனியக்காரியின் மந்திர வலையில் சிக்குவது என இயற்கையாலும் அதனை மீறிய அமானுஷ்யங்களையும் சந்திக்கும் ஒடிடி, தன் நாட்டிற்குத் திரும்புகிறானா, இல்லையா? அங்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் தன் மனைவி, மகனைக் காண்கிறானா? என்கிற கதையில்
பிரம்மாண்டமான IMAX காட்சிகள், கடல் சாகசங்கள், சைக்கிளோப்ஸ் உள்ளிட்ட புராணக் காட்சிகள், லுட்விக் கோரன்சனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன..
இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தன்னுடைய பார்வையையும் தத்துவ சிந்தனையும் இதில் இணைத்திருக்கிறார்.
.இயக்கம் & திரைக்கதை: வெறும் சாகசப் படமாக இல்லாமல், போரினால் ஏற்பட்ட குற்ற உணர்வு, மன உளைச்சல் மற்றும் உயிர்வாழ்தலின் வலி ஆகியவற்றை நோலன் தனது வழக்கமான நேர்த்தியுடன் திரையில் மிக ஆழமாக விவரித்துள்ளார்
மேட் டேமன் தனது அமைதியான, ஆழமான நடிப்பால் ஒடிசியஸின் மனப் போராட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். சில இடங்களில் படம் மெதுவாக நகர்ந்தாலும், இறுதிவரை பார்வையாளர்களை ஈர்க்கும் காவிய அனுபவத்தை வழங்குகிறது
டிரோஜன் போருக்குப் பிறகு, பேரரசர் ஒடிசியஸ் (மேட் டாமன்) பல ஆபத்தான சாகசங்களைக் கடந்து
மனசாட்சியுடன் போராடும் ஒரு தலைவனின் வேதனையை அச்சு அசலாகவும் வெளிப்படுத்துகிறார்.
பெனிலோப்பாக அன்னா ஹாத்வே மற்றும் டெலிமேச்சஸாக டாம் ஹாலண்ட் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் (அன்னே ஹாத்வே) மகனையும் (டாம் ஹாலண்ட்) சேரத் துடிக்கும் பத்து ஆண்டு கால நீண்ட பயணத்தில்
பலவிதமான அனுபவங்களை சந்திக்கிறார் நாயகன் அது அத்தனையும் படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது
.தொழிற்நுட்பம்:
லட்விக் கோரன்ஸின் பின்னணி இசை மற்றும் ஹோய்ட் வான் ஹோடமாவின் ஒளிப்பதிவு பார்வையாளர்களைப் பழைய கிரேக்க யுகத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஒடிசி தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் மனைவியிடம் மகனிடம் மறைத்து எதிரிகளை பந்தாடும் பொழுது திரையரங்குகளில் கரகோஷம் விண்ணை பிளக்கிறது.
கடல் அலையில் சிக்கி படகு சின்னா பின்னமாகும் பொழுதும்.
சூனியக்காரியிடம் சிக்கி வீரர்களை மீட்கும் பொழுதும்.
குதிரைக்குள் பதுங்கி இருந்து டிராய் வீரர்களை
வந்தாடும் பொழுதும்
மேட் டாமன்
சிறப்பான வெடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இயக்கம், திரைக்கதை: கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு: எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன்
இசை: Ludwig Göransson
ஒளிப்பதிவு: Hoyte van Hoytema
படத்தொகுப்பு: Jennifer Lame
திரையரங்குகளில்
இந்தப் படம் இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. IMAX 2D, Dolby Cinema, 4DX, MX4D மற்றும் சாதாரண 2D திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. காவியக் கதையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, திரையரங்கில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய திரைப்படமாக தி ஒடிசியஸ் திகழ்கிறது.
