ஜனநாயகன் திரை விமர்சனம்

மதிப்பீடு: ⭐⭐⭐⭐☆ (4/5)**

👑 மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் திரையுலகப் பயணத்தின் நிறைவுப் படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’, இயக்குநர்
எச். வினோத் இயக்கத்தில் அரசியல், ஆக்ஷன், உணர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் மாஸ் எண்டர்டெய்னராக வந்துள்ளது. படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நாசர், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் தியேட்டரில் விசில் சத்தமும் ,ஆரவாரம் தெறிக்க விடுகிறார்கள். ஒவ்வொரு சண்டை காட்சிகளில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகிறது.
ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக வந்துள்ளது வெற்றி பட்டியலில் ஜனநாயகன்.

கதைக்களம்

🧶ஒரு சாதாரண மனிதன் சமூக அநீதிகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எதிர்த்து மக்களுக்காக எப்படி எழுந்து நிற்கிறான் என்பதே கதையின் மையம்.
எச். வினோத்தின் பாணியில் சமூக கருத்துகளும், விஜய்யின் மாஸ் தருணங்களும் இணைந்துள்ளன
சிறையில் கைதியாக இருக்கும் விஜய்
(தளபதி வெற்றி கொண்டான்)
போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் தன் மனைவி பிரிந்து
மகள் விஜியுடன்
வாழ்ந்து வருகிறார்.
தளபதியின் அம்மா
(ரேவதி)
இறக்கும் தருவாயில் மகனை பார்க்க விரும்புகிறார்.
கௌதம மேனன் இதற்கு உதவுகிறார்.
பிறகு ஒரு விபத்தில் கௌதம மேனன் இறந்து போக…
அதற்கு நன்றி கடனாக,
கௌதம் மேனனின் விருப்பப்படி அவரது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட துடிக்கிறார் விஜய். அவருக்கு தொடர் பயிற்சிகள் அளித்து அவரை ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இந்த கதையை
நிழல்கள் ரவி பிளாஷ்பேக் ஆக சொல்கிறார்.
தேர்தல் நாளில் மக்கள் ஒரு விஷயத்துக்காக பயப்பட அவர்களின் பயத்தைப் போக்க சொல்லப்படும் கதையாகவே ஜன நாயகன் தொடங்குகிறது. சிறையில் கைதியாக தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) ஓபனிங்கில் சண்டைக் காட்சியுடன் எம்ஜிஆர் ரெஃபரன்ஸ் உடன் என்ட்ரி தருகிறார். போலீஸ் அதிகாரியான கெளதம் மேனனுக்கு உதவியாக சிறையை தளபதி கட்டுப்படுத்த அவருடன் நட்பாகிறார்.

இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் பல கொலைகளை அரங்கேற்றி அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார்.
அவர் யார்? அவர் பின்னனி என்ன என்பது ஃபிளாஷ் பேக்கில் விரிகிறது.
இதற்கிடையில்
இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைகிறார்.
பாபி தியோல்

இந்த சூழலில் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய பாபி தியோல் முடிவு செய்கிறார்.
இதன் உள்ளே நரேன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருப்பு முனையாக வருகிறது.

மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் விஜய் பற்றி தெரிந்து பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார்.

பாபி தியோல் யார்? அவரது பின்னணி என்ன? விஜய்க்கும், அவருக்கும் உண்டான மோதல் என்ன? இந்தியாவில் அவர் செய்யத் துடிக்கும் சதி திட்டம் என்ன? இதை விஜய் முறியடித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

தளபதி

ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய். ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும் தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார்.

விஜியை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும் பாசமான காட்சியில் கண் கலங்க வைக்கிறது.
பிரகாஷ் ராஜ் தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). உடன் இப்படியான சூழலில், அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்…? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா?
என்பதை படம் முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார் தளபதி.
நாயகனாக முதல்வர் விஜய். புதிய ஹேர் ஸ்டைல், பக்குவப்பட்ட நடிப்புடன் கலக்குகிறார். ஆக் ஷன் சீக்வன்சில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அவர் பேசும் அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ‘தளபதி கச்சேரி’ பாட்டில் முதல்வர் விஜயின் டான்ஸ் கலக்கல் ரகம்.
விஜய் – ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் படம் முழுக்க அதிரடி தான்.

🧶பாபி தியோல் – வலுவான வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.
சன்டை காட்சி அனல் தெரிக்கிறது
வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில் உள்ளிட்டோரும் நடிப்பு நன்றாக இருக்கிறது.

🧶பிரகாஷ் ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

❤️பூஜா ஹெக்டே – கதைக்குத் தேவையான அளவில் தனது பங்கைச் செய்துள்ளார்
பூஜா ஹெக்டே படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் பிளவுசுடன் கிளாமராக வருகிறார். ஆனால் டூயட் எதுவும் இல்லை. குடும்ப விழா, கோவில் என எங்கே போனாலும் ஸ்லீவ்லெஸ் டிரஸ் என்று சைக்காலஜிக்கலாக கலக்கி இருக்கிறார்.

❤️மம்தா பைஜ் இவர்தான் கதையின் மையம் தன் அம்மா கண் முன்னால் இறந்து போக அந்த பயத்தில் வாழும் இவரை எப்படி தளபதி தைரியம் உள்ள பெண்ணாக மாற்றுகிறார் என்பது ஒன் லைன்
இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில்
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மம்தா
அந்த குழந்தைத்தனமான முகமும் அப்பாவி பேச்சும் சித்தா” என்று தளபதியை அழைக்கும் குழந்தைத்தனமும் ரசிக்க வைக்கிறது.

.
🧶நாசர் முதல்வராக வருகிறார் ரேவதி விஜய் அம்மாவாக நன்றாக நடித்திருக்கிறார் நரேன் கலில் “என்று சைன்டீஸ்டாக,
சிறப்பாக நடித்தி ருக்கிறார்.

.

⚡அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.
இசை
விறுவிறுப்பான காட்சிகளில் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

🧶இயக்கம்: எச். வினோத்
தளபதி ரசிகர்களுக்காக நல்ல “மாஸ் காட்சிகளையும் ,
எமோஷனல் கலந்த சித்தப்பா, மகள் என்ற பாச உணர்வையும் கலந்து காட்டியிருக்கிறார். நாயகனுக்கு விட வில்லனுக்கு அதிக பில்டப் கொடுத்து இப்படிப்பட்ட வில்லனை எப்படி நாயகன் வீழ்த்தப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அனல் தெரிக்கிறது .
படம் முழுக்க தளபதி ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் படத்தை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், ஆயிரம் பேர் 500 பேர் என்று பிரம்மாண்டமான கூட்டத்தைக் காட்டி இயக்கி இருக்கிறார். வினோத்தின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

🧶ஒளிப்பதிவு: பிரம்மாண்டமான காட்சிகள், தரமான ஃப்ரேம்கள்
படத்தை தூக்கி நிறுத்துகிறது.
சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
சத்யன் சூர்யன்

🧶எடிட்டிங்: விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற வேகம்.
பிரதீப் ராகவ் காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார்.

🧶அனல் அரசுவின் சண்டை காட்சிகள் அனல் தெரிக்கிறது. பிரம்மாண்டமாக இருக்கிறது. களை கட்டுகிறது சண்டை பயிற்சி.

🧶சேகர், சுதன் நடனப் பயிற்சி தளபதி கச்சேரி பாடலுக்கு களை கட்டுகிறது.

🧶காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி சிங்
சவுண்ட் மிக்சிங் செய்து இருக்கிறார் கண்ணன்

⚡ஒப்பணையாளராக நாகராஜன் பணியாற்றி இருக்கிறார் எல்லோருக்கும் ஒப்பனை நன்றாக இருக்கிறது.

🧶Vfx Supervisor: Monesh H
DI: Knack Studios
Colourist: Prasath Somasekar

🧶பிளஸ்:
விஜய்யின் மாஸ் தருணங்கள்
ஆக்ஷன் காட்சிகள்
அனிருத்தின் பின்னணி இசை
கிளைமாக்ஸ் உணர்ச்சி

👑Produced by: Venkat K Narayana
Co Produced By: Jagadish Palanisamy, Lohith.N.K

.
👑தீர்ப்பு:
“ஜன நாயகன்” என்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விடைபெறும் திரைப்படமாக அமைகிறது. மாஸ், ஆக்ஷன், உணர்ச்சி ஆகியவற்றை விரும்புபவர்களுக்கு திரையரங்கில் ரசிக்கக்கூடிய படம்.
:

👑மக்கள் தொடர்பாளர்கள்
திரு.ரியாஜ் கே. அகமது அவர்கள்.
திரு.பாராஸ் ரியாஸ் அவர்கள்.