இருமுடி கட்டு” திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

“☘️இருமுடிகட்டு”. ரவி தேஜா–பிரியா பவானி சங்கர் கூட்டணியில், சிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படம் வழக்கமான ரவி தேஜா மாஸ் படமாக இல்லாமல், அப்பா–மகள் பாசம், குடும்ப உறவு, ஐயப்ப பக்தியை, மையமாகக் கொண்டிருக்கிறது.
ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’.
கமர்ஷியல் வெற்றி படமாக வந்துள்ளது.

☘️சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படத்தை
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி, மற்றும் ஒய் .ரவி சங்கர் இணைந்து தயாரித்துள்ளனர்

☘️கதை களம்

ரவி தேஜா ஒரு கோபக்கார, மதுப் பழக்கமுள்ள குடும்ப மனிதராக வருகிறார். ஆனால் அவரது மகள் மீது அளவில்லாத பாசம் கொண்டவர். மகளின் வேண்டுகோளுக்காக மதுவை விட்டுவிட்டு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொள்வது, கதையின் முக்கிய திருப்பமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணத்துக்குப் பிறகு அவருடைய வாழ்க்கையிலும் குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்கள்தான் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதி.
பொல்லூரு கிராமத்தில் டெம்போ ஓட்டுநர் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார்.
மகள் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் நாயகன் மகளுக்கு தைரியம் சொல்லி எது நடந்தாலும், தன்னிடம் சொல்ல வேண்டும் .என்று சொல்லி வளர்க்கிறார்.
மகளும் தன்னம்பிக்கை பெண்மணியாக வளர்கிறார்.
அவரது வாழ்க்கையில் ,
ஆட்டோ ஓட்டுவது, வாழைத்தோட்டத்தில், பழத்தை சந்தையில் விற்பனை செய்வது,ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடுவது,
என்று வாழ்ந்து வருகிறார்.ஆனால் மாலை கழற்றியதும், குடிப்பார்
இரவு பகலாக, .
அவருக்கு சபரிமலைக்கு கூட்டி செல்லும் குரு சாமி சாய் குமார் குடும்பம்.ரவிதேஜாகுடும்பம். இவர்கள் இருவர் குடும்பமும் அன்பை செலுத்துகிறார்கள்
இதற்கு இடையே, சுவாசிகா, அரசு பள்ளியில் டீச்சர் ஆக இருக்கிறார். நன்றாக படிக்காத மாணவிகளை, மிகவும் கண்டிஷன் செய்து வறுத்து எடுக்கிறார்.
அந்த ஊர் எம்.எல்.ஏ (ரமேஷ் இந்திரா) பள்ளி மாணவிகளுக்கு பேருந்து வசதி செய்து தருகிறார்.
ஆத்தூருக்கும் ,
தாமரை குளத்துக்கும், நடுவில் நான்கு ரவுடிகள், கஞ்சா குடித்துவிட்டு, பள்ளி செல்லும் பெண்களை கிண்டல் செய்தும், தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அனுஷா ,என்ற ஒரு மாணவி மரணம் அடைகிறார்.
அந்த ஊரைச் சேர்ந்த வில்லன் மகன் நாகு, கொல்லப்படுகிறான்.
யார் இந்த கொலைகளை செய்தது?
பின்னணியில் என்ன நடந்தது?
சுவாசிகா, தன் வீட்டில் பள்ளி மாணவிகளுக்கு ஸ்பெஷல் கோச்சிங் நடத்துகிறார்!!.
இதன் பின்னணியில்
என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது படம்.

☘️*ரவி தேஜா*

இதுவரை ரவி தேஜாவிடம் ,பார்த்த அதிரடி, பஞ்ச் டயலாக், மாஸ் ஹீரோ இமேஜ் ஆகியவற்றை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு சாதாரண குடும்ப மனிதராக நடித்திருக்கிறார்.
குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகள், குற்ற உணர்வு, மனமாற்றம், பக்தி சார்ந்த காட்சிகள் ஆகியவற்றில் அவரது நடிப்புதான் படத்தின் உணர்ச்சி மையமாக இருக்கிறது.
சபரிமலைக்கு மாலை போடுவது, மகள் மீது பாசம் காட்டுவது, எதிரிகளை பந்தாடுவது, அந்த ஊரில் இருக்கும் பெண் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைப்பது ,என்று ரவி தேஜா இந்த படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
நான்கு வருடம் கழித்து தனக்கு குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு சபரிமலை ஐயப்பன் பெயரில் மணிகண்டன் என்று பெயர் சூட்டி
பாச மழை பொழிவது, நெகிழ்ச்சி!! கிளைமாக்ஸ் காட்சியில் ,ரவி தேஜா உருக வைத்து விடுகிறார். இவருக்கு இந்த ஆண்டின் ஒரு சிறந்த வெற்றி படமாக அமைந்திருக்கிறது
ரவி தேஜா படம் என்றாலே மாஸ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரவி தேஜா தெரியவில்லை, குறிப்பாக ,திரிநாத் என்ற கதாபாத்திரமாக தான் தெரிகிறார். அந்த அளவுக்கு நடிப்பில் ஒன்றிப்போயிருக்கிறார். அப்பா-மகள் சென்டிமென்ட் காட்சிகளில்
ஒன்ற செய்து விடுகிறார்.

☘️பிரியா பவானி சங்கர்
காவேரி, என்ற மனைவி ,மற்றும் தாய் கதாபாத்திரத்தில், நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் வெறும் ஹீரோயின் என்று இல்லாமல், குடும்பத்தின் உணர்ச்சிப் பின்னணியில் முக்கிய இடம் பெறுகிறது. அவரே இந்தக் கதாபாத்திரம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று கூறியிருக்கிறார்.
அது உண்மையில்
இருக்கிறது.
து. அமைதியான குடும்பத் தலைவியாக, குடிக்கும் கணவனை கண்டிப்பது ,மகள் மீது பாசம் பொழிவது , என்று நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

☘️ மகளாக நடித்த பேபி நக்ஷத்ராவும் சிறப்பாக நடித்துள்ளார்.
பேபி நக்ஷத்ரா,
ரவிதேஜா மகளாக மணிகண்டன் என்ற பெயரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மங்கலஷ் ஞானம் செய்யும் காட்சியில் உருக வைத்து விடுகிறார் .படம் முழுக்க ஒரு தைரியமான பெண் குழந்தையாக பெண் குழந்தைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார்.ரவிதேஜா, இவர் கள்
இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம்.நல்ல நடிப்பு.

☘️சாய் குமார் ,
குருசாமி, கோப் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் கனிவான குருசாமி யாக நடித்திருக்கிறார். நல்ல கதாபாத்திரம் அருமையான நடிப்பு.

☘️சுவாசிகா, அரசு பள்ளி ஆசிரியராக ஆரம்பத்தில் மிரட்டியவர், படத்தில் இறுதிவரை கம்பீரம் குறையாமல் நடித்திருகிறார்.

☘️எம்.எல்.ஏ-வாக ரமேஷ் இந்திரா, வில்லனாக அஜய் கோஷ்
மீசாலா லக்ஷ்மண், உள்ளிட்டோர்
தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

☘️. தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்குநர் சிவா நிர்வாணா ,நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். சில த்ரில்லிங் திருப்பங்கள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் யூகிக்க முடியாத அளவுக்கு அமைத்துள்ளார்
எமோஷனல் மேக்கிங் படத்தை தூக்கி நிறுத்துகிறது
ஒரு நல்ல கதையை எடுத்திருந்தாலும், அது வழக்கமான கதைதான். ஆனால், அவர் கதையை சொன்ன விதம் சுவாரஸ்யமாக உள்ளது. அப்பா-மகள் சென்டிமென்ட் மற்றும் ஐயப்ப பக்தி தொடர்பான காட்சிகள், படத்திற்கு ப்ளஸ்
ஐயப்ப பக்தர்களின் பின்னணியில் ‘. பெண் பிள்ளைகளை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும்
என்று சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

🎵 ஜி.வி. பிரகாஷ் இசை
இப்படத்திற்கு பலம். படத்தின் பக்தி சார்ந்த உலகத்தையும், குடும்ப உணர்வுகளையும், இணைக்கும் வகையில் இசை அமைந்துள்ளது
ஐயப்பன் பாடல்கள் படத்திற்கு உதவியுள்ளன. மற்ற பாடல்கள் தாளம் போட வைக்கிறது .

🎥ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா
கிராமத்து அழகை அற்புதமாக காட்டியுள்ளார் சண்டை காட்சிகளில், கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. ஐயப்பன் பாடல்களில் அருமையான ஒளிப்பதிவு.

பிரவீன் புடி,யின்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது .எல்லா இடத்திலும், படம் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு .கை கொடுத்திருக்கிறது.

☘️மேலும் இது ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் என்பது முக்கியமான விஷயம்.
⭐ சிறப்பம்சங்கள்.
கதையின் பலம்: அப்பா–மகள் உறவு + மனமாற்றம்
ரவி தேஜாவின் பலம்: வழக்கமான மாஸ் இமேஜை விட்டு இயல்பான நடிப்பு,
பிரியா பவானி சங்கர்: குடும்ப உணர்வுகளுக்கு நல்ல துணை.
இசை: பக்தி மற்றும் உணர்வுகளை இணைக்கிறது.
இயக்கம்: சிவா நிர்வாணாவின் வழக்கமான உணர்வுப்பூர்வமான அணுகுமுறை
ஆனால் முதல் பாதியில் குடும்ப உணர்வுகள் அதிகமாகவும், இரண்டாம் பாதியில் பக்தி/மனமாற்றம் அதிகமாகவும் செல்வதால், முழுக்க மாஸ் என எதிர்பார்த்து செல்லும் ரவி தேஜா ரசிகர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம்.
மொத்தத்தில்: இது “ரவி தேஜாவின் மாஸ் படம்” என்று பார்ப்பதைவிட, “ஒரு தந்தையின் மனமாற்றப் பயணம்” என்பது உண்மை.
உணர்வும் குடும்பப் பாசமும் பிடிக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும.

☘️கிளைமாக்ஸ் , காட்சிகள் செமையாக இருக்கின்றன .

.☘️கேமரா ஒர்க் நேர்த்தியாக உள்ளது.

☘️சண்டைக் காட்சிகள் அனல் தெரிக்கிறது.

நடனம் ,ஒப்பனை, வி.எப்.எஸ் காட்சிகள், மற்றும்
கலர் கரெக்ஷன்,
என எல்லாம் ஒரு வெற்றிப் படத்துக்கு தானாகவே அமைந்து விடுகிறது. அப்படி இந்த படத்தின் வெற்றிக்கு, அனைத்தும் கை கொடுத்ததால் ,
படம் வெற்றி பட்டியலில்☘️💥