அமரம்–திரை விமர்சனம்

கதை களம்

கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் “முப்பாறை”மலைவாழ் கிராமத்தில் வாழும மக்களின் ஒருவர் அருகன், (தேஜஸ் ராஜன்) இவரும், மொசாட்(மரியன் ஜார்ஜ்), சேர்ந்து கூலிக்கு கொலை செய்து வருபவர்கள்.நாயகி ஷர்மிளாவின்(ஐரா) அப்பா, லெனின் பாரதியை கொலை செய்யும் பொழுது நாயகி அதை பார்த்து விடுகிறார்.எம் எல்.ஏ விடம், என் அப்பாவை கொலை செய்த அந்த கொலை காரனை, என் கையால் கொல்ல வேண்டும்!!. என்னை “முப்பாறை கிராமத்திற்கு அழைத்து போக சொல்கிறார்.

முப்பாறை மலை கிராமத்தில் நாயகனை சந்தித்து, நாயகி தன் வஞ்சத்தை தீர்த்து கொண்டாரா?

நாயகனிடம், நாயகியின் அப்பாவை கொலை செய்ய சொன்னது யார்? என்ற உண்மையை நாயகி கண்டு பிடித்தாரா? என்ன நடந்தது? என்பது தான், கதை களம் 2005 ல் நடக்கும் மூன்று காலகட்டங்களில் ஒரு காதல் கதை!

இந்தப் படத்தின் முக்கியமான சுவாரஸ்யம் மூன்று வெவ்வேறு காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகள் வழியாக கதை நகர்கிறது. காதல், மனித உணர்வுகள் மற்றும் சமூகப் பின்னணி ஆகியவற்றை இணைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட/மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை களம்

அடர்ந்த வனப்பகுதி, இயற்கைச் சூழல், செம்மரம் கடத்தல் தொடர்பான காதலுடன், ஆக்ஷன் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் இப்படம் பேசி இருக்கிறது.

படப்பிடிப்பு 40 நாள் புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணியிலும், எண்ணூர் கடற்கரையிலும் படப்பிடிப்பு சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள்.

நடிகர் & நடிகைகள்

❤️தேஜஸ் ராஜன் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நெஞ்சில் ஈரமின்றி நேச குணமுமின்றி அஞ்சாத ஒருவனாக வருகிறார் தேஜஸ் “அருகன்”என்ற கதாபாத்திரத்தில் அடிதடி, வெட்டுக்குத்து, என கூலிக்கு கொலை செய்து வாழும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. இப்படிப் போகிற அவனுக்குள்- வீரம் மட்டுமே ஓங்கி நிற்கிறது. ஷர்மிளா. . தன் அப்பாவை கொன்று குவித்த வரை கண்டு பழி வாங்க வந்தவளை தன் அம்மா வாக.. நினைக்கிறான். அவள் விடுவதாக இல்லை. துரத்துகிறாள் வருத்துகிறாள் உறுத்துகிறாள். பாசத் தீயைக் கொளுத்துகிறாள். அதை உள் வாங்கி தேஜஸ் நடித்திருக்கிறார்..

அதனால் ஹீரோவுக்கு வெறும் காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் உடல் உழைப்பு தேவைப்படும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைய இருக்கிறது.அதில்சிறப்பாக நடித்திருக்கிறார்.

குறைவான வசனம் தான் .அதையும் மலை வாழ் மக்கள் பாஷையில். நன்றாக பேசி இருக்கிறார்.

❤️இப்படத்தில் ஐரா, கதாநாயகியாக நடித்துள்ளார்.. வழக்கமான ‘ஹீரோவுடன் இரண்டு பாடல்கள்’ என்ற கதாநாயகி பாத்திரமாக இல்லாமல், கதையோடு தொடர்புடைய முக்கியமான பாத்திரமாக நன்றாக நடித்திருக்கிறார்.

❤️வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் கைதேர்ந்த வித்தைக்காரர். ஜார்ஜ் மரியம் , இந்த படத்தில் அவர் நன்றாக நடித்திருக்கிறார். மொசாட் என்று கதாபாத்திரத்தில் நடித்து கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகிறார்.

❤️சாய் தீனா, விஜய் என்ற கதாபாத்திரத்தில் செம்மரம் கடத்துவது, கூலிக்கு ஆள் வைத்து கொலை கொலை செய் வது என்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

❤️நாகிநீடு, எம். எல். ஏ வாக தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு நண்பனையே கொலை செய்து, நண்பன் மகளை தன் மகனால் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்படும் கொடூரமான வேடத்தில் வில்லனாக சிறப்பாக நடத்தி ருக்கிறார்.

❤️ஹரிஷ் பெராடி சால்வா என்று கதாபாத்திரத்தில் முன்னாள் ஐ பி எஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் திருப்பம்.

❤️கல்கி இந்த படத்தில் காமெடியில் சிறப்பான கலகலப்பான வேடத்தில் கலக்கி இருக்கிறார்.

❤️சுரேஷ் மேனன் பத்திரிக்கையாளர் லெனின் பாரதியாக, ஒரு சில காட்சிகள் வந்தாலும் உயிரோட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.மற்றும்— இந்த படத்தில் 330-க்கும் மேற்பட்ட நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் .

🎵 தொழில்நுட்பக் குழு

இயக்கம்,

💥கதை, திரைக்கதை, வசனம்: திருஅருள் கிருஷ்ணன் இயக்குநர்கள் கோகுல், மற்றும் ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். முதலில் பெரிய அளவிலான ஆக்ஷன் படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவும், பின்னர் சூழ்நிலைகளால் அந்த முயற்சி மாறி ‘அமரம்’ உருவானதாகவும் கூறியுள்ளார்.

படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். காடுகள், மலைகள் அங்கு நடக்கும் செம்மரக்கடத்தல் அரசியல்வாதியான ,எம்.எல்.ஏவின் கொடூர முகம், மலைவாழ் மக்கள் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். உண்மையான காதல் ஒன்று சேரும் என்று இப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் கிளைமாக்சில். திரைக்கதையின் ஒத்துழைப்பு, நூறு சதவீதம் இருப்பதால் படம் வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது.

சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து கதையை நகர்த்தி பயன்படுத்தியிருப்பது, கொஞ்சம் கூட ஆயாசம் கொடுக்காத திரைக்கதை, புற்களில் அமர்ந்திருக்கும் பனி போல இயல்பாய் படம் நெடுக படர்ந்திருக்கும் நகைச்சுவை, நாடகத்தனம் இல்லாத வசனங்கள் என ஒரு முழுமையான இயக்குனராக ஜெயித்திருக்கும் படம் இது.

குறைந்த பட்ஜெட்டில் அழகாக நெய்யப்பட்ட சேலை குறைகளாக பார்த்தால், தமிழ் சினிமா வழக்கப்படி சோகமாக முடித்தால் படம் ஹிட்டாகும் என்கின்ற பார்முலாவை இதிலும் பயன்படுத்தியிருப்பது, பார்த்து சலித்த ஹீரோ கதாபாத்திரம், சிற்சில இடங்களில் மிகையாய் தெரியும் சில காட்சிகள் என குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மறக்க வைக்கும் காதல் என்னும் அனுபவத்தை முழுமையாய் உணர வைக்கும் படைப்பு இது

நீண்டுயர்ந்த மலைகளும், பச்சை பசேல் காடுகளும் எப்பொழுதுமே நம் மனதை கொள்ளை கொள்பவை. ஒரு வித ரகசியத்தை, ஒரு தேடலை தன்னுள் ஒளித்து வைத்திருப்பவை. அதன் பின்னணியில் அழகான ஒரு காதல் கதை மற்றும் ஆக்ஷன் என்பதால் முதல் ரீலில் இருந்தே நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.

💥இசை: மிக்கி ஜே. மேயர்

குறிப்பாக மிக்கி ஜே. மேயர் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் கவனம் பெறும் விஷயம்.

காதல் + இயற்கை + ஆக்ஷன் + உணர்ச்சி என்று பல அடுக்குகள் இருப்பதால், இப்படத்தில் பின்னணி இசை மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

படத்தோடு பயணிக்கும் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு அனுமார் பலம்.

💥ஒளிப்பதிவு: பரத் குமார்.

கேமரா கண்கள் மூலமாக நம் கண்களுக்கு குளிர்ச்சியும், குளிரையும் ஊட்டும் ஒளிப்பதிவும், மீண்டு, ரம்மியமான மழையே போன்று படத்தோடு பயணிக்கும் ஆக்ஷன் காட்சிகளில் கேமரா கோணம் நன்றாக இருக்கிறது.

💥எடிட்டிங்: ஆர். ஸ்ரீராமர்.

கச்சிதமானமான படத்தொகுப்பு படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு மிக பெரிய பலம். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.சிறப்பு.

💥கலை: ஜனார்த்தனன்,

காட்டுக்குள் குடிசை வீடுகள் , மற்றும் எம் எல் ஏ வீடு என அசத்தியிருக்கிறார்.

💥சண்டைப் பயிற்சி: மிராக்கிள் மைக்கேல்

படத்தில் மிகப்பெரிய பலம் சண்டை காட்சிகள். ஆக்ரோஷமாகவும் ரசிக்கும்படியான சண்டைகளை அமைத்திருக்கிறார்.

💥நடனம்: பூபதி

நடனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். லாரியில் செல்லும் போது வரும் நடனம், மற்றும் ஆரம்ப காட்சியில் வரும் நடனம் அசத்தல் ரகம்.

💥பாடல்கள்: சினேகன், கே. சௌந்தரராஜன்

பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

💥தயாரிப்பு – C.R.ராஜன்.

❤️Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

💥படத்தின் டிரைலர் நடனம், சண்டை காட்சிகள், பாடல், காட்சிகள் மிகவும் ரசிக்க வைத்தது

❤️திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், நல்ல விறுவிறுப்பான படமாக வந்துள்ளது அமரம்☘️

☘️மொத்தத்தில் இந்த “அமரம்”திரை படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறது.சண்டைபிரியர்களுக்கு செம அசைவ விருந்து.💥☘️