ஒன்ஸ் மோர் -திரைவிமர்சனம்

மதிப்பீடு 4-/5

❤️மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமான ‘ஒன்ஸ்மோர்’. வெற்றி பட்டியலில் இணைந்துள்ளது.

❤️கதைக்களம்

ரகு (அர்ஜுன் தாஸ்) என்ற இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் வரும் காதல் அனுபவங்களை இத்திரைப்படம் பேசுகிறது., கல்லூரிப் பருவம் மற்றும் முதிர்ந்த பருவம் என இரண்டு காலகட்டங்களில் அவனுக்குக் கிடைக்கும் காதலும், அதனால் ஏற்படும் மாற்றங்களும் எதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளன.
முதல் காதல் தோல்வி காரணமாக சூசைடுக்கு முயற்சிக்கும் ரகுவரன் (அர்ஜுன் தாஸ்), தனது நண்பர்களின் உதவியுடன் மீட்கப்படுகிறார். இதற்கு மேல் தனது வாழ்க்கையில், காதல், கல்யாணம் எல்லாம் இல்லை என சோகமே உருவான நபராக வேலை பார்த்துக் கொண்டிருக்க 8 ஆண்டுகள் கழித்து அவரது கல்லூரியின் ஜூனியராக இருந்த அஞ்சலி (அதிதி ஷங்கர்) ரகுவரனை சந்திக்க சோகமாக இருக்கும் ரகுவரனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அஞ்சலிக்கு ரகுவரன் ஓகே சொல்லி திருமணத்துக்கு ரெடியாக முதல் காதலியான இந்திராவிடமிருந்து (சோனா ஒலிக்கல்) போன் கால் வருகிறது. ரகுவரனுக்கும் இந்திராவுக்கும் இடையே என்ன நடந்தது? இருவரும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இந்திராவின் என்ட்ரி ரகு – அஞ்சலியின் வாழ்க்கையில் என்ன செய்தது? என்பது தான் ஒன்ஸ் மோர் ” ஆழமான கதை நாயகன் மனவேதனையில் சிக்கிக் கிடப்பது, எட்டு ஆண்டுகளாக அந்த வலியிலிருந்து முழுமையாக வெளியே வர முடியாமல் தவிப்பது, அவருடைய வாழ்க்கைக்குள் கல்லூரி ஜூனியரான அஞ்சலி வருவது. அவள் ரகுவின் வாழ்க்கையில் மீண்டும் காதலையும் சந்தோஷத்தையும் கொண்டு வருவது, படத்தில் சுவராஸ்யமான திருப்பங்கள்.

காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.

ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம்.

“கல்யாண பரிசு” படம் போல, மூவர் காதலும் ரசிக்க வைக்கிறது.

❤️அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ், படத்தின் மிகப்பெரிய பலம். வழக்கமாக பார்க்கும் அவரது கரகரப்பான குரல், தீவிரமான உடல்மொழி கொண்ட கதாபாத்திரங்களிலிருந்து விலகி, உடைந்துபோன, அமைதியான, காதலைத் தேடும் மனிதராக நடித்திருக்கிறார். குறிப்பாக அதிக வசனம் இல்லாத காட்சிகளில் முகபாவனைகள் மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்துவது சிறப்பு.
எட்டு பிள்ளைகள் வேண்டும். என்று சொன்னவள் எட்டு வருடங்களாக, தவிக்க விட்டு போய்விட்டாளே!!.. என்று அவர் புலம்பும் காட்சியும் சரி, அஞ்சலியின் காதலை ஏற்று அவரை மணம் முடிக்க சம்மதிப்பதும் சரி, வித்தியாசமான கோணங்களில் நடித்திருக்கிறார்.
நடனம் ரசிக்க வைக்கிறது.

❤️அதிதி ஷங்கர்
படத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பவர். அஞ்சலி கதாபாத்திரத்தின் உற்சாகமும் குறும்பும் திரையில் நன்றாக வேலை செய்கிறது. அர்ஜுன் தாஸ்–அதிதி ஷங்கர் ஜோடியின் கெமிஸ்ட்ரியும் படத்திற்கு முக்கியமான பலமாக அமைந்திருக்கிறது.

❤️சோனா ஒலிக்கல்

கதையின் முக்கியமான கடந்தகால காதல் பாத்திரத்தில் வருகிறார். நடிப்பிலும் திரை இருப்பிலும் கவனம் ஈர்த்தாலும், அவரது கதாபாத்திரத்திரம் பலம்
அவருடைய நடிப்பில் குறிப்பாக காதல், பிரிவு, மனக்குழப்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் கவனம் பெறுகின்றன.

🎭
டிராவிட் செல்வம் முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் இப்ராஹிம் ஆக நடித்துள்ளார். கதையின் பிரதான காதல் முக்கோணத்திற்கு வெளியே இருந்தாலும், ரகுவின் வாழ்க்கைப் பயணத்துடன் தொடர்புடைய பகுதிகளில் இவரது பங்களிப்பு இருக்கிறது.

🎭 அனுஷா பிரபு – சார என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் துணைக் கதாபாத்திரமாக இருந்தாலும், படத்தின் உறவுகள் மற்றும் உணர்ச்சிப் பின்னணியை உருவாக்கும் நடிகர் குழுவில் இடம் பெறுகிறார்

🎭 சித்ரா லட்சுமணன்

படத்தின் துணை நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருடைய கதாபாத்திரம் முக்கிய காதல் கதையைவிட துணைச் சம்பவங்களுக்கே அதிகமாக பயன்படுகிறது.

👩‍⚕️ தேவதர்ஷனி, லாவண்யா என்ற counsellor கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரகுவின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் பாத்திரமாக இவர் வருகிறார். ரகுவின் சோகத்திலேயே வசதியாகத் தங்கிவிட்ட மனநிலையைப் பற்றி அவர் பேசும் காட்சிகள் கதையின் கருவுக்கு முக்கியமான இடம் பிடிக்கிறது.
படத்தின் முக்கிய நடிப்பு பலம் எல்லாம் இருந்தாலும்,
அர்ஜுன் தாஸ்–அதிதி ஷங்கர் ஜோடிதான். ஆனால் சோனா ஒலிக்கலின் இந்திரா கதாபாத்திரம. மனதுக்கு இதமாக இருந்தது.

❤️தொழில்நுட்ப கலைஞர்கள் .

🎥 ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்.
அரவிந்த் விஸ்வநாதனின் கேமரா வேலை படத்தின் காதல் மற்றும் மென்மையான உணர்வுகளுக்கு முக்கிய துணையாக இருக்கிறது. அர்ஜுன் தாஸின் தீவிரமான முகபாவனைகளுக்கும், அதிதி ஷங்கரின் துடிப்பான திரை இருப்புக்கும் ஏற்ப visual tone அமைக்கப்பட்டுள்ளது. : இது action-heavy படம் அல்ல; கதாபாத்திரங்களின் உணர்வுகளை camera மூலமாக அழகாக பதிவு செய்வதே ஒளிப்பதிவின் முக்கிய நோக்கம்.
அதை சிறப்பாக செய்துள்ளார்.

✂️ எடிட்டிங் – Nash

படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். 137 நிமிடங்கள் ஓடும் படத்தில் காதல், கடந்தகாலம், புதிய உறவு என பல அடுக்குகளை இணைக்க வேண்டியிருப்பதால் editing முக்கியமான பணி.

முதல் பாதியின் feel-good flow நன்றாக இருக்கிறது editing-ன் positive point

🎵 இசை – ஹேஷம் அப்துல் வாஹாப்

இவர்தான் படத்தின் மிகப்பெரிய technical attraction, பாஸ்! ❤️
மலையாளம் மற்றும் தெலுங்கில் கவனம் பெற்ற ஹேஷம் அப்துல் வாஹாப், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் மொத்தம் 13 பாடல்கள் உள்ளன. காதல் படத்திற்கு தேவையான melody + youthful energy + emotional score ஆகியவற்றை இசை தாங்கிச் செல்கிறது.

🔊 Sound Design –

ரஞ்சித் வெங்கடேஷ் sound design செய்துள்ளார்.

❤️ மேலும் M. சரவணகுமார் sound பணிகளில் இடம்பெற்றுள்ளார்.

❤️ T. உதயகுமார் Dolby Atmos mix செய்துள்ளார்.

காதல் படத்தில் sound design அதிகமாக வெளிப்படாமல், காட்சியின் உணர்வுடன் கலந்து செல்ல வேண்டும். இந்தப் படத்திலும் அதுதான் அணுகுமுறையாகத் தெரிகிறது.

🎨 கலை இயக்கம்

ராஜ் கமல் art direction கவனித்துள்ளார். கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழல், வீடுகள், கல்லூரி/நகர்ப்புறப் பின்னணி போன்றவற்றை இயல்பாக உருவாக்குவது இந்தப் படத்தின் visual world-க்கு முக்கியமானது. அதை சிறப்பாக செய்துள்ளார்.

👗 Costume Design

நவதேவி ராஜ்குமார் costume design செய்துள்ளார். குறிப்பாக அதிதி ஷங்கரின் கதாபாத்திரம் இளமைத் துடிப்புடன் இருப்பதால், அவரது உடைகள் character personality-க்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அர்ஜுன் தாஸ் உடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது சோனாலி உடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது.

💃 நடன அமைப்பு – அப்சர்

அப்சர் choreography செய்துள்ளார். படத்தின் பாடல்கள் காதல் கதையோடு இணைந்திருப்பதால், dance வெறும் பாடல் காட்சியாக இல்லாமல் கதாபாத்திரங்களின் chemistry-யை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுகிறது.

🎨 Colourist –

அருண் சங்கமேஸ்வர் colourist ஆக பணியாற்றியுள்ளார் இதனால் காதல் காட்சிகளின் mood, கதாபாத்திரங்களின் emotional state, கடந்தகாலம்–நிகழ்காலம் ஆகியவற்றுக்கு இடையிலான visual feel-ஐ வேறுபடுத்த உதவுகிறது.

🎬 இயக்குநர் – விக்னேஷ் ஸ்ரீகாந்த்,

எல்லாவற்றுக்கும் மேலாக, இது விக்னேஷ் ஸ்ரீகாந்தின் முதல் இயக்கப் படம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்லாமல் பாடல் வரிகளிலும் அவர் பங்களித்துள்ளார். அவருடைய முக்கியமான முயற்சி , அர்ஜுன் தாஸ் போன்ற intense image கொண்ட நடிகரை feel-good romantic heroவாக மாற்ற முயற்சித்திருப்பது.

மொத்தத்தில் , கதை வசனம் சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார் . இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் இருவரின், கலவையாக ஒரு அருமையான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில்
🎥 Camera – ⭐⭐⭐⭐
✂️ Editing – ⭐⭐⭐½
🎵 Music – ⭐⭐⭐⭐½
🔊 Sound – ⭐⭐⭐⭐
🎨 Art – ⭐⭐⭐½
👗 Costumes – ⭐⭐⭐½
🎬 Direction – ⭐⭐⭐½
Technical team-ல் ஹேஷம் அப்துல் வாஹாபின் இசையும், அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் படத்தின் முக்கிய பலங்கள் என்று சொல்லலாம். இசை, visuals, performances ஆகியவற்றை குறிப்பாகப் பாராட்டபடுகிறது.

அடுத்ததாக “ஒன்ஸ் மோர்” படத்தில் அர்ஜுன் தாஸ்–அதிதி ஷங்கர் காதல் காட்சிகளில் அவர்களுடைய chemistry நன்றாக வேலை செய்திருக்கிறது,

சோனா ஒலிக்கல் கதாபாத்திரம் திருப்பத்தை கொடுக்கிறது

❤️மொத்தத்தில் ஒன்ஸ்மோர் வெற்றி பட்டியலில்

❤️மக்கள் தொடர்பாளர் யுவராஜ் ,அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் 🔥☘️
Lyrics : Vignesh Srikanth

பாடல்கள் எல்லாம் இயக்குனரே எழுதியிருக்கிறார் பாடல்கள் சுகமாக இருக்கிறது.
முக்கிய பலங்கள்

🎵 இசை – படத்தின் மிகப்பெரிய பலம்.

🎤 பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுடன் நன்றாக இணைகின்றன.

❤️ காதல் காட்சிகளில் அதிகப்படியான நாடகத்தன்மை இல்லாமல் மென்மையா காட்டப்பட்ட முக்காதல்களில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது ‘ரகு, அஞ்சலி காதலே. சோனாலி கல்லூரிக்காலத்தில் வரும் காதலே இளைஞர்களால் கொண்டாப்படுகிறது..❤️☘️