தொழிலதிபரின் மகனான டான் (துல்கர் சல்மான்) பணக்கார வாழ்க்கையில் சுகபோகமாக வாழ்பவர். ஆனால் சூதாட்டம் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் betting மீது இருக்கும் ஆர்வம் அவரை கடன் மற்றும் பிரச்சினைகளுக்குள் தள்ளுகிறது. ஒரு விபத்துக்குப் பிறகு அவருக்கு வேறு ஒருவரின் கை பொருத்தப்படுகிறது.
அதன் பிறகு தொடங்குவதுதான் படத்தின் வித்தியாசமான பகுதி—தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அந்த கை, மிஷ்கின் (டேவிட் )வில்லனை கொல்லத் துடிக்கிறது! அந்தக் கைக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் முக்கிய மர்மம்.
ஆண்டனி வர்கீஸ் எப்படி வந்தார்? அவருக்கும் துல்கர் சல்மானுக்கும் என்ன சம்பந்தம்?
துல் கருக்கும்! மிஸ்கனுக்கும்! எப்படி பகை ஏற்பட்டது?
மருத்துவராக வரும் கையாடு லோகர் ஏன் துர்கரை காப்பாற்ற நினைக்கிறார்?
துல்கரை கேட்காமல் அவருக்கு தொந்தரவு செய்யும் அந்த கை அவரை என்னென்ன செய்தது?
என்பதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.
முதல் பாதி – கிரிக்கெட் betting, பணம், விபத்து, புதிய கை என தொடர்ந்து வரும் திருப்பங்கள் நல்ல விறுவிறுப்பை கொடுக்கின்றன.
இரண்டாம் பாதி கதை பழிவாங்கும் பாதைக்கு மாறும்போது ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் சற்று அதிகரிக்கிறது.
⭐
துல்கருக்கு இது வழக்கமான காதல் ஹீரோ வேடம் அல்ல. ஒருபுறம் தனது உடலை கட்டுப்படுத்த முயலும் மனிதர்; இன்னொருபுறம் தன்னிச்சையாக செயல்படும் கையுடன் போராடும் கதாபாத்திரம்.
குறிப்பாக தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் காட்சிகளில் துல்கரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அதே நேரத்தில் படத்தின் முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் இன்னும் அதிகரித்தது என்று சொல்லும் அளவிற்கு படம் வேகமாக போகிறது.
🔥 ஆண்டனி வர்கீஸ் – மிகப்பெரிய பிளஸ் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும்” விக்கி கதாபாத்திரம் துல்கருக்கு இணையாக முக்கியத்துவம் பெறுகிறது. படத்தின் உண்மையான ஹீரோவாகவே ஆண்டனி வர்கீஸ் என்பது போல அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அதை உள்வாங்கி அவரும் சிறப்பாக நடித்தி இருக்கிறார்.
😈 மிஷ்கின் டேவிட் ஆபிரகாம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது உடல்மொழியும், வித்தியாசமான அணுகுமுறையும் ரசிக்க வைக்கிறது.
தன்னை காரில் துரத்தி வந்து தாக்கும் துல்கர் சல்மான் யார் ?அவர் சவால் விட்டு என்ன செய்யப் போகிறார்? என்று கொக்கரிக்கும் பொழுதும்!! ஆண்டனி வர்க்கீஸை!! துவம்சம் செய்யும் பொழுது, மிஷ்கின் மிரட்டி இருக்கிறார்.
❤️கயாடு லோஹர் அழகான மருத்துவராக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். நாயகனுக்கு உதவும் பாத்திரத்தில், சூப்பராக நடித்திருக்கிறார் . சம்யுக்தா வரும் காட்சிகளில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.
ஜெயசுதா துல்கரின் அம்மாவாக வந்து ஒரு சில காட்சிகளில் மனதில் இடம் பிடிக்கிறார்.
யோகி பாபு கடைசி காட்சியில் வந்து கலகலப்பு ஏற்படுத்துகிறார்.
🎵 தொழில்நுட்பம் இயக்கம்: நஹாஸ் ஹிதாயத் கிரிக்கெட் உலகில் நடக்கும் பெட்டிங் மோசடி பெற்று தெளிவாக எழுதி, இயக்கி இருக்கிறார்.
இரும்பு கை மாயாவி கதையை ஞாபகப்படுத்துகிறது .துல்கர் கதாபாத்திரம்.
ஆரம்பத்தில் கலகலப்பாக படத்தைக் கொண்டு சென்று கிளைமாக்ஸ்ல் எமோஷனல் கலந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.
🔥ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
சூதாட்டங்களுக்கு இடையே நடக்கும் பந்தயம் மற்றும் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் கிரிக்கெட் மைதானம் ,என்று கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கடும் உழைப்பை கொட்டி, படமாக்கி இருக்கிறார். கண்களுக்கு விருந்து.
🔥இசை: ஜேக்ஸ் பிஜாய் குறிப்பாக ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும் படத்தின் ஆக்ஷன் மற்றும் fantasy காட்சிகளுக்கு நல்ல பலம்
🔥எடிட்டிங்: சாமன் சாக்கோ
சிறப்பாக இருக்கிறது படத்தொகுப்பு ஒரு பத்து நிமிடம் இன்னும் கூட குறைத்து இருக்கலாம். இருந்தாலும் கதைக்கு தேவை என்பதால் காட்சிகள் விறுவிறுப்பாக சொல்கிறது.
🔥சண்டைக்காட்சிகள்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்
துல்கர் சல்மான் படத்தில் இப்படி ஒரு அனல் தெறிக்கும் சண்டை காட்சிகள் இதுவரை வந்ததில்லை. இந்த படத்தில் அன்பறிவு மாஸ்டர்ஸ் அசத்தியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
🔥மொத்தத்தில்:
“I Am Game” ஒரு வித்தியாசமான fantasy-action thriller. துல்கரின் ஸ்டைல், ஆண்டனி வர்கீஸின் நடிப்பு, மிஷ்கினின் வில்லத்தனம், ஜேக்ஸ் பிஜாயின் BGM ஆகியவை படத்தின் பலம்.
ஒரு வரியில் சொன்னால்: “சூதாட்டத்தில் தொடங்கி, ஒரு கையின் பழிவாங்கலில் முடியும் வித்தியாசமான கேம்!” 🎬🔥
🔥மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்.
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா ❤️
.
