🎬 E1 – திரை விமர்சனம்

⭐ மதிப்பீடு: 3.5 / 5

🎭 நடிகர்கள்

சதா நாடார் (Sadha Nadar), மோனிகா செலினா (Monica Selena), பேபி ஷிவ், ஜெயசிவா மற்றும் சபரி மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


📖 கதை களம்

ஆரம்பத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் முன்பு ஒரு வேன் வந்து நிற்கிறது. இந்த வேனில் இருந்து பாண்டியும், குமாரும் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.

அடுத்து குமார் ஒரு கொலையை செய்து, அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் E1 பிளாக்கில் இருப்பது போல காட்டுகிறார்கள். அவர் அங்கு எப்படி வந்தார்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

அந்த வீட்டில் நாயகி மோனிகா தன் கையில் குழந்தையுடன் இருக்கிறார். கணவர் அரவிந்த் வெளியூர் சென்றிருக்கிறார்.

இந்நிலையில், கொலைகாரன் குமார், நாயகியை மாட்டிக்கொள்கிறார்.

கொலையாளி குமார், “இந்த அப்பார்ட்மெண்டில் எல்லோரும் தூங்கிய பிறகு, நான் இந்த பிணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விடுவேன். அதுவரைக்கும் எதுவும் மூச்சு விடக்கூடாது. அப்படி எதுவும் செய்தால் உன் குழந்தையை கொன்று விடுவேன்” என்று மிரட்டுகிறார்.

அதனால் நாயகி பயந்து, அவன் சொற்படி கேட்கிறார்.

அந்த கொலையாளி யார்? எதற்காக அந்த வீட்டுக்குள் வந்தார்? என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் முக்கியமான மையப் பகுதியாகும்.


🎭 நடிப்பு

கொலையாளியாக சதா நாடார், குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் வில்லனைப் போல காட்சிப்படுத்தப்பட்டாலும், அவர் ஃபிளாஷ்பேக் காட்சியை சொல்லும்போது அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது.

படம் முழுக்க சதா நாடாரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. குறிப்பாக குமார் கதாபாத்திரத்தில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்து அந்த வீட்டில் இருக்கும் மோனிகா செலீனா, கொலைகாரன் குமாரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டமிட்டாலும், அவரிடம் சிக்கிக்கொண்டு திணறுகிறார்.

தன் குழந்தைக்காக கொலைகாரன் சொல்வதைக் கேட்டு, வீட்டுக்கு வரும் பக்கத்து வீட்டு ஆன்ட்டி, கொலை செய்யப்பட்டவரின் மகன், வாட்ச்மேன் உள்ளிட்டவர்களை சமாளித்து அனுப்புகிறார்.

இதனால் மோனிகா மீது அனுதாபப்படும் கொலையாளி குமார், தனது ஃபிளாஷ்பேக் கதையை சொல்லும்போது மோனிகாவின் கண்களில் ஈரம் கசிகிறது.

படம் முழுக்க இவரது நடிப்பு நன்றாக இருக்கிறது.

அதன் பிறகு வில்லனாக நடித்திருப்பவர், வேன் டிரைவர், குழந்தை சிவ் நாடார், பாண்டியாக நடித்திருப்பவர் என அனைவரும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


🎵 தொழில்நுட்பக் குழு

இசை

ஈ.ஜே. ஜான்சன் (EJ Johnson) இசையமைத்திருக்கிறார்.

படம் சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால், படம் முழுக்க பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடல் காட்சியும், சுதந்திரன் எழுதிய பாடலும் மிகவும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு

எம்.எஸ். மனோகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இருள் சூழ்ந்த வீடு, ஒரு குண்டு பல்பு வெளிச்சம் போன்ற காட்சிகளை நன்றாக படம் பிடித்துள்ளார்.

படம் முழுக்க இவருக்கு சவாலான காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை திறமையாக செய்திருக்கிறார்.


🎬 தயாரிப்பு

இந்தத் திரைப்படத்தை ‘கப்பிள் கிரியேஷன்ஸ்’ (Couple Creations) நிறுவனம் தயாரித்துள்ளது.

குறைவான பட்ஜெட்டில், ஒரே அப்பார்ட்மெண்டில் கதை நடப்பது போல படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சின்ன பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை எடுத்திருக்கிறார்கள்.


🎥 இயக்கம்

இயக்கம்: சதா நாடார் & மோனிகா செலீனா

ஒரு வித்தியாசமான படத்தை, சமூகத்திற்கு தேவையான கருத்துடன் கணவன்–மனைவி இருவரும் குறைவான பட்ஜெட்டில் நிறைவான படமாக கொடுத்திருக்கிறார்கள்.

அமுதா என்ற குழந்தையின் புகைப்படத்தை கிளைமாக்ஸில் காட்டி, பார்வையாளர்களின் விழிகளில் ஈரம் கசிய வைக்கிறார்கள்.

இன்று நாடு முழுவதும் நடக்கும் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வரவேற்க வேண்டிய படம். இயக்குனர்களின் கருத்தும் வரவேற்க வேண்டிய ஒன்று.

இப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


🎬 இயக்குநர் சதா நாடார்

இந்தப் படத்தில் சதா நாடார் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோனிகா செலீனாவுடன் இணைந்து படத்தை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர், கலை இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், உடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் போன்ற முழுமையான தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள்.


👍 நிறை

ஒரே வீடு, ஒரே ரூம், ஒரு கொலைகாரன், பயந்த ஒரு குடும்பத் தலைவி என்று கதையை மிகச் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து படத்திற்காக எடுத்துக்கொண்ட கருத்து இன்று சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படும் கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில் கணவன்–மனைவி இருவருக்கும் பாராட்டுக்கள்.


👎 குறை

கொலையாளியிடம் சிக்கியிருக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் மோனிகா, வீட்டில் கரண்ட் வெளிச்சம் இல்லாமல் இருப்பது, அதை பார்த்து இரண்டு ஆன்ட்டிகள் அந்த வீட்டை வந்து பார்க்கிறோம் என்று வலுக்கட்டாயமாக உள்ளே வந்து தேடுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

அது செயற்கையாக இருக்கிறது. அப்படி ஒரு அப்பார்ட்மெண்டில் யாரும் அவ்வளவு எளிதாக நுழைய மாட்டார்கள்.

அடுத்து, கொலைகாரன் தன்னுடைய ஃபிளாஷ்பேக் காட்சியை சொல்லுவது போல காட்டுவதைவிட, கிளைமாக்ஸ் காட்சியில் கடிதம் எழுதிவிட்டு போகிறார்; அந்தக் கடிதத்திலேயே எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டு அவர் போயிருந்தால், அந்த கதாபாத்திரத்தின் கம்பீரம் அப்படியே இருந்திருக்கும்.

இயக்குனர் அதை காட்டாமல் விட்டது ஏனோ?

அடுத்து, கொலையாளியின் மகன் நாயகி மோனிகாவின் வீட்டு கதவைத் தட்டி, தன் அப்பா எங்கே என்று கேட்கிறார். அப்பாவின் செல்போனுக்கு போன் செய்கிறார். அப்பாவின் செல்போன் மோனிகா வீட்டில் ரிங் ஆகிறது.

அதன் பிறகு, கொலையாளியின் மகன் வாட்ச்மேனிடம் சொல்லி, அந்த அப்பார்ட்மெண்டின் செக்யூரிட்டி வந்து வெளியே நின்று விசாரித்துவிட்டு போவது போல காட்டியிருந்தால், இன்னும் கொஞ்சம் கதையில் வலு சேர்க்கும் வகையில் இருந்திருக்கலாம்.

ஒரு அப்பார்ட்மெண்டில் அவ்வளவு சாதாரணமாக யாரும் நுழைந்து விட முடியாது.

அதே சமயம், கொலையாளி குமார் எப்படி பிணத்துடன் வாட்ச்மேனை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பினார் என்பதையும் காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

மற்றபடி, படத்தில் எந்தவித ஆபாசமும், அருவருப்பும் இல்லாமல் டீசன்டாக கதையை சொல்லிய வகையில், இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்.


📢 மக்கள் தொடர்பாளர் சரண்