யாத்திசை படத்தின் விமர்சனம்

படத்தின் ஒளிப்பதிவு ஆடை வடிவமைப்பு ஒப்பனை திரைக்கதை நடிப்பு இயக்கம் என பலவகை பிரிவுகள் ஆஸ்கார் கதவை தட்ட வாய்ப்பு உள்ளது.

இந்திய சினிமாவில் தற்போது சரித்திர காலம் போலும். தொடர்ந்து கிட்டத்தட்ட அனைத்து மொழிகளும் பீரியட் படங்கள் வருகிறது.
பாகுபலி, பொன்னியின் செல்வன், ஷாகுந்தலாம் என பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த வரிசையில் தமிழில் இப்போது வெளியாகியுள்ள வெற்றி படம் ‘யாத்திசை’

இந்த படம். 7 ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதைக்களத்தில், சோழ-பாண்டிய உறவை பற்றியது.

இந்த படத்தின் மேக்கிங் ஆடை வடிவமைப்பு காஸ்ட்யூம் டிசைனர் எல்லாம்

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது

யாத்திசை என்றால் தென் திசை பாண்டிய மன்னர்களின் வீரத்தைச் சொல்கிறது .

தமிழர்களாலும் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க முடியும்
என நிரூபித்துள்ளார்
இப்படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் இவர் தஞ்சை மண்ணைசார்ந்தவர் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.
நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

இதன் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் என்ன பாஷை பேசி இருப்பார்கள் என்பதை அறிந்து அதே பாசையில் பேசியும் நடிக்கவும் வைத்திருக்கிறார்.இயக்குனர்

இதன் கதைகள் நான்கு பாகங்களாக பிரிந்து இருக்கிறது இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் சண்டை காட்சிகள் ரசிக்க வைக்கிறது.இயல்பாக இருக்கிறது.

‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல் குடிகள் கதை எய்னர் என்று ஒரு பகுதி மக்கள் வாழ வழியின்றி கொத்தடிமைகள்போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்ல உணவு வேண்டும் நல்ல மாளிகையில் வசிக்க வேண்டும் தனக்கு பிறகு தங்கள் மக்கள் மாளிகையில் வசிக்க வேண்டும் தன் மகன் அரசனாக பிறக்க வேண்டும் என்று கனவு காண்கிறான் கொதி. அந்த கூட்டத்தின் தலைவன் போருக்கு பயப்படாதவன் வீரத்திற்கு வெற்றி வாகை சூடுபவன் தைரியமாக முடிவெடுப்பவன் அவன் தான் கொதி
பாண்டிய மன்னனின் தளபதி ரணவீரனை ஒழித்தால் தான் நாட்டை கைப்பற்ற முடியும் என்று திட்டமிடுகிறான் தனது படையில் உள்ள வீரர்களை சிறு சிறு குழுவாக பிரித்து பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் குடியேற வைக்கிறான்.

ரணவீரன் மலைக்கோட்டைக்கு சாமி கும்பிட வரும்பொழுது குறுகலான பாதை சிறு கூட்டம் கொஞ்சம் வீரர்கள் தான் வருவார்கள் அப்போது ரணவீரனை கொன்று விடலாம் என்பது கொதியின் திட்டம் ஆனால் நடந்ததோ வேறு ரண வீரன் தப்பி விடுகிறான்.

பெரும்பள்ளி மக்களோடு சேர்ந்து இழந்த நாட்டை மீட்க நாள் பார்த்து காத்திருக்கிறான் பெரும்பள்ளி மக்களின் தலைவி தன் மகளை திருமணம் செய்து கொடுத்து வெற்றியோடு போய் அனுப்புகிறாள்.

அப்போது கொதி சோழநாட்டுக்கு தன் மெய்காப்பாளனான துடி என்ற வீரனை அனுப்பி உதவி கேட்கிறான்.

அவன் படையோடு வரும்பொழுது ரணவீரனின் ஆட்கள் கையால் கொல்லப்படுகிறான்.
தான் போரில் தோற்பது உறுதி என்று தெரிந்ததும் கொதி ஒரு திட்டமிடுகிறான் அந்தத் திட்டம் என்ன அந்த திட்டத்தில் அவன் வென்றானா பாண்டிய மன்னனின் தளபதி ரணவீரன் வென்றானா இதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் இரண்டு மணி நேரம்தான் விறுவிறுப்பாக போகிறது காடுகளும் மலைகளும் அற்புதமான படப்பிடிப்பு .

தமிழன் சிறந்த வீரன் என்பதை ஞாபகப்படுத்துகிறார். மாவீரர் மேதகு பிரபாகரனையும் இந்த படத்தில் கோடிட்டுக் காட்டி இருப்பது இயக்குனரின் சிறப்பு.

அதிகாரம் கொண்டவனே என்று ஒரு நபரை பார்த்து இயக்குனர் சொல்லும் அந்த காட்சி யாரையோ குறிப்பிடுவது போல தெரிகிறது.

கோயில் நடனம் ஆடும் பெண்கள் அழகோ அழகு அழுக்கான மனிதர்கள் இருட்டில் வாழும் மனிதர்கள் இவர்கள் மத்தியில் இந்த பெண்கள் வரும் காட்சிகளில் பளிச் சென்று தெரிகிறார்கள்

புதுமுகங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு சிறப்பான படைப்பை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். இந்த படத்தில் முதல் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடிக்க முடியாமல் போன சில பிரபல நடிகர்கள் நிச்சயம் நல்ல படத்தை கோட்டை விட்டு விட்டோம் என்று வருத்தப்படுவார்கள்

இசையமைப்பாளர் சக்ரவர்த்தி … இது பீரியட் படம் என்பதால் மிகவும் நுணுக்கமான இசையயை கொடுத்துள்ளார்.

இசையில் பழங்குடி மக்களின் அந்த சத்தத்தை மிக்ஸ் கலந்து கொடுத்து படத்துக்கு விறுவிறுப்பை தந்து இருக்கிறார்

நடிகை சுபத்ரா பெரும்பள்ளிமக்களின் தலைவியாக வந்து சிறிது நேரம் அடித்தாலும் சிறப்பான வீரமான நடிப்பை தந்திருக்கிறார்

தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் மிகவும் துணிச்சலோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறார் அவர் தன்னம்பிக்கைக்கு தமிழர்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு நல்லதொரு படைப்பை தந்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள்

*இயக்குநர் தரணி ராசேந்திரன் …
1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வந்து சவாலாக இயக்கி உள்ளார்.

அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. .
என்பதை புரிந்து கொண்டு சமரசம் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கிறார்

இப்படத்திற்கு முழு உயிர் கொடுத்து இருப்பவர்கள் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் ஒரு படத்திற்கு உதவி இயக்குனர்கள்

25 பேர் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள்
அதிக உதவி இயக்குனர்கள் பணி புரிந்த படம் சமீபத்தில் இந்த படமாக தான் இருக்கும் அத்தனை பேருடைய உழைப்பும் படத்தில் நன்றாக தெரிகிறது

நீர்வீழ்ச்சி மழையேற்றம் அடர்ந்த குகை பெரும் பள்ளி பெரும் பள்ளம் அரபிக் கடல் சோழநாடு நெல் விளைந்த பூமி மனிதனை காவல் கொடுக்கும் பலிபீடம் அழகான கோவில் சிற்பம் அழகான நாட்டியம் அற்புதமான குளக்கரை வீரம் சேர்ந்து தமிழர்கள் இப்படி எல்லா வகையிலும் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் பட தொகுப்பாளரும் ஆடை வடிவமைப்பாளரும் அரங்கை நிர்மாணிப்பவர்களும் ஒப்பனையாளர்களும் பணிபுரிந்த அத்தனை போர் வீரர்களும் நாயகன் விஜய் சேயோனும்
சதீஷ் மித்ரன் ராஜலட்சுமி மற்றும் பல நடிகர்களும் படத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்துகிறார்கள்

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் இந்த படத்தை வாங்கி வெளியிடுவது மிகச் சிறப்பு
வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் கம்பெனியும் வாங்கி வெளியிடுவது படத்திற்கு கிடைத்த கௌரவம்

நடிகர் விஜய் சேயோன்
நடிப்பு நன்றாக இருக்கிறது இறுகிய முகம் தொலைநோக்க பார்வை வெற்றி அடைந்தே தீர்வது என்ற இலக்கு கட்டு மஸ்தான உடல் பரசுராமன் வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் அந்த பாவனை ஒப்பனை எல்லாமே ரசிக்க வைக்கிறது

: சரித்திர படமாக உருவாகியுள்ள ‘யாத்திசை’ பல காலம் நின்று பேசப்படும் படமாக இருக்கும்

புதுமுகங்கள் ஷக்தி மித்ரன்,
இவரதுநடிப்பு நன்றாக இருக்கிறது
வீரம் சிறந்த தமிழனாக இரு வீராப்போடு போரிடும் அந்த காட்சிகள் நன்றாக இருக்கிறது

படத்தில் நடித்திருப்பவர்கள் ராஜலட்சுமி, சமர், மின்னல் முரளி, செம்மலர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் பார்க்கும்பொழுது நாமும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வையே படம் ஏற்படுத்தியது

: யதிசாய், அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவாளர்களாக
அருமையாக ஒலிப்பதிவு செய்துள்ளனர் இவர்கள் நிச்சயம் ஆஸ்கார்

கதவை தட்ட வாய்ப்பு உள்ளது

யாத்திசை சரியான இயக்கம்
சரியான ஒளிப்பதிவு சரியான நடிகர் நடிகைகள் தேர்வு சரியான லொகேஷன் தேர்வு சரியான இசை தேர்வு சரியான ஆடை வடிவமைப்பு தேர்வு என எல்லா வகையிலும் கவனமாக பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர்
இப்படத்தின் பட்ஜெட் 7 கோடி என்கிறார்கள் இவ்வளவு நேர்த்தியான தரமான படைப்பை இந்த குறுகிய பட்ஜெட்டில்
தந்திருப்பது வியக்க வைக்கிறது 300 கோடி 400 ஒரு கோடி என்று
செலவு செய்து எடுக்கும் படம் கூட சில விஷயங்களில் நம்மை தவறாமல் போய்விடும் ஆனால் இந்த யாத்தி இசை பல காலம் பேசப்படும் தமிழர்களின் பெருமையை ஓங்கி ஒலிக்கும் இயக்குனருக்கும் அதன் குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்