நாள் ஒன்றுக்கு தான் 100 முதல் 120 சிகரெட்டுகள் பிடித்ததாக டைனோசர்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழா முடிந்தது எல்லாரும் போய் தண்ணி அடிங்க என்று மிஸ்கின் பேசினார்
தயாரிப்பாளர் பேசும்பொழுது இயக்குனருக்காக இந்த படம் தயாரித்தேன் என்ன ஆனாலும் ஏற்றுக்கொள்வேன் நிச்சயம் வெற்றி அடையும் என்றார்
இயக்குனர் பேசும்பொழுது நடிகர் உதய கார்த்தி கௌதம் வாசுதேவமேனனிடம்
அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனராக வேண்டியவர் இந்த படத்தில் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார் 10 படத்திற்கு பிறகு எப்படி நடிக்க வேண்டுமோ அதை 9 முறை ரெகவர் எடுத்து பத்தாவது படத்தை முதல் படத்திலேயே நடித்திருக்கிறார் என்றார்
நடிகர் அருண் விஜய் பேசும் போது எங்க வீட்டுப் பிள்ளை உதய கார்த்தி என்றார்
நடிகர் விஜயகுமார் பேசும்பொழுது இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
சின்னத்திரை தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் பேசும் பொழுது படம் நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள் என்றார்
மற்றும் நிறைய பேர் மேடையில் வந்து வாழ்த்தி விட்டுப் போனார்கள் போனிகபூர்
மும்பையில் இருந்து வந்து இந்த படத்தை வாழ்த்தி விட்டு சென்றார்
5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான டைனோசர் படம் நிச்சயம் வெற்றி அடையும் இந்த படத்தின் டிரைலர் அனைவரின் கவனத்தை ஈர்த்தது பரபரப்பான வட சென்னை கதைகளம் வெற்றிக்கு உறுதி
திருமலை படத்தை இயக்கிய இயக்குனர் ரமணா பேசும் பொழுது தொண்டை இல்லாமல் பேசுகிறேன் தமிழ் அவ்வளவு முக்கியம் கலாச்சாரமாக முக்கியம் இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்றார் மேலும் இப்படத்தில்
‘டைனோசர்ஸ்’. இந்த படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் அருண் விஜய், விஜயகுமார், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கு. சினிமா நிகழ்ச்சி மாதிரி இல்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் அனைவரும் உறுதியாக பேசினார்கள். சினிமா தொழில் என்பது கொஞ்சம் பணத்தை போட்டு கொஞ்சம் பணத்தை எடுக்கும் தொழில் கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக பேசியதை பார்த்தால் அவர் சினிமாவில் தான் கடைசி வரை இருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது.
கடந்த இரண்டு நாளைக்கு முன்பு நான் என் அடுத்த படத்திற்கு கதை எழுதிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த படக்குழு என்னை பார்க்க வந்தார்கள். அதில் இந்த படத்தின் இயக்குநர் மாதவனின் முகத்தை பார்த்தேன். நிறைய சிகரெட் புகைப்பவர் போல் இருந்தது. அப்போவே படம் ஹிட் என்று தெரிந்து விட்டது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், நான் முதல் படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடித்தேன். அஞ்சாதே படத்திற்கு எல்லாம் 120 சிகெரெட் அடித்தேன். அந்த டென்ஷன் இருந்தால் தான் இயக்குநர். டைனோசர்ஸ் ரொம்ப வித்தியாசமான தலைப்பு. அதற்கு கீழ் உள்ள சப்-டைட்டில் “Die No sirs”- என்ன அர்த்தம் என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என மிஷ்கின் கூறினார்.
புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ளார்
தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் திரைப்படம் டைனோசர்
