சமரா திரைப்பட விமர்சனம்

இது சயின்ஸ் படமாக வந்துள்ளது. செம மேக்கிங் அசத்தல் திரைக்கதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் ஆக வந்துள்ளது

இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா”. ரஹ்மான் டாக்டர் ” பரத் சஞ்சனா திபு பினோஜ் வில்லியா ராகுல் மாதவ் கோவிந்த் கிருஷ்ணா விவியா சாந்த் வீர் ஆரியன் தினேஷ் லம்பா
சோனாலி சூடான் டேரிஷ் சினாய் டாம் பிஷால் பிரசன்னா நடித்துள்ளனர்
படத்தின் பலம் ஒளிப்பதிவு – சினு சித்தார்த் இமாச்சலப் பிரதேசத்தின் அழகான பனிப் பொலிவையும் திகிலான காட்சியும் ஒளிப்பதிவில் கொண்டு வந்துள்ளார்

இசை – தீபக் வாரியர் பின்னணி இசை – கோபி சுந்தர் பின்னணி இசையில் செம மிரட்டல் படத்தின் உயிர்நாடி பின்னணி இசைதான்

பாடல்கள் – எடிட்டிங் –பாப்பன் ஸ்டண்ட் – தினேஷ் காசி ஆக்ஷன் காட்சிகளுக்காக மெனக்கிட்டு இருக்கிறார் தினேஷ் காசி நடனம் – டேனி பவுல் தயாரிப்பு – ஆ.மு. சுபாகரன், அனுஜ் வர்கீஸ். கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப். ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லரை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நாளைய தலைமுறைக்கு வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நன்றாக இயக்கியிருக்கிறார்

காட்சி அமைப்புகளும் கதைக்களமும் ஜெர்மனியில் நடக்கும் காட்சிகளும் படத்திற்கு வியப்பை ஊட்டுகிறது இயக்குனர் அடுத்த பாகத்திற்கு லீடூ கொடுத்துள்ளார் ரஹ்மான் கையில் ஒரிஜினலும் பரத் கையில் டூப்ளிகேட் இருக்கும் அந்த சமாரா. நாட்டு மக்களை என்ன செய்யப் போகிறது என்பதை ஆர்வத்துடன் முடித்திருக்கிறார்

சரி இந்த படத்தின் கதை என்ன வாங்க பாக்கலாம்

இமயமலைப் பகுதியில் ஒரு பனி பள்ளத்தாக்கில் இரண்டு கொலைகள் நடக்கின்றன
அதற்கு காரணமானவர்கள் யார்

. மேலும் ஒரு தீவிரவாதி தப்பியோடியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த பயங்கரவாதி உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
அப்படி என்றால் அவர் எங்கே

மறுபுறம், ஆலன் ஒரு ராணுவ மருத்துவர். ராணுவ நடவடிக்கை ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, வடு மற்றும் அவர் தனது வெளிப்புற அழகை இழக்கிறார். அவரது மனைவி அவரை விவாகரத்து செய்த பிறகு, ஹிமாச்சலில் தனிமையில் வாழும் இந்த முன்னாள் ராணுவ மருத்துவர்
அவர் ஒரு விகாரமான தோற்றத்தில் வருகிறார் அந்த தோற்றம் இவர் தான் வில்லனோ. என்ற மாயையை ஏற்படுத்துகிறது ஆனால் இவர் பாசத்துக்காக எங்கும் டாக்டர் என்பது கதையின் பின் பாதையில் தெரிகிறது

அவரது மகள் ஜானி தான் அவருக்கு எல்லாம், அவர் ஜானியை மீண்டும் தன்னிடம் அழைத்துச் செல்ல தயாராக இருந்தபோது, அவள் பனியில் ஒரு விபத்தை சந்திக்கிறாள், அதில் ஒரு வைரஸால் அவளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதன்பின் அந்த டாக்டர் தன் மகளை காப்பாற்றினார் நாட்டுக்காக தன் மகளே அர்ப்பணித்தரா இது படத்தின் கிளைமாக்ஸ் இல் ஒரு அற்புதமான நெகிழ்வை ஏற்படுத்துகிறது

தொடர் கொலைக்களுக்கான காரணத்தை அறிய ஆண்டனி உள்ளிட்ட போலீஸ் டீம் ஒரு தொடர் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போது, அவர்களுடன் டாக்டர் ஆலனும் டாக்டர் ஜாகிரும் சேர்ந்து வரும்போது படத்தின் போக்கு முற்றிலும் மாறுகிறது. அதாவது, அறிவியலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு சமூகம், நோயைப் பரப்பும் வைரஸுடன் சேர்ந்து பயோ-வார் ஏற்படுத்தி உலகை அழிக்கத் தயாராக இருக்கும் ஒரு பெரிய பயங்கரவாத குழு செயல்படுகிறது. இது ஒரு பெரிய அளவிலான நிகழ்வின் ஆரம்பம் என்று ஆண்டனி சந்தேகிக்கிறார். டாக்டர் ஆலன் தனது பாதிக்கப்பட்ட மகளைக் கொடிய வைரஸ் நோயிலிருந்து காப்பாற்றினாரா? அதிகாரி ஆண்டனியுடன் சேர்ந்து அந்த கொடிய வைரஸ் வெடிப்பை தடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஹ்மான் ஆன்டனி என்ற துப்பறியும் நபராக ஸ்டைலான மேனரிஸங்களை ஏற்று வசீகரமாக காட்டியிருக்கிறார்.
இராணுவத் தாக்குதலின் போது உடம்பு பாதிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட முன்னாள் இராணுவ மருத்துவர் ஆலனாக, பினோஜ் வில்லியா சிறப்பாக செய்துள்ளார். உண்மையில் இவருக்குத் தான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம், மேலும் பிரமிக்க வைத்த செயற்கை ஒப்பனையில் அவருடைய செயல்திறன் அருமையாக இருக்குறது.

படத்தின் இடைவேளையின் போது வரும் பரத்

விஞ்ஞானி ஜாகீர் ராசா கானாக பரத்,
நடித்துள்ளார் வழக்கம் போல நல்லவனாக வந்து வில்லனாக மாறும் அந்த கொடூர முகம் பொருந்தி போயிருக்கிறது

ஜானியாக சஞ்சனா திபு, டாக்டர் ஆசாத் ஆக ராகுல் மாதவ், ஏசிபி செந்தில் குமாவாக கோவிந்த், கிருஷ்ணா எஸ்ஐ அபயாக டினிஜ், தேனாக விவியா சாந்த், மிலன் பாவாவாக வீர் ஆரியன், ஜேம்ஸாக தினேஷ் லம்பா, கீதாவாக சோனாலி சூடான், பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய், ஐஜி கிஷோராக டாம் ஸ்காட், சூரியாக பிஷால் பிரசன்னா உள்ளிட்டோர் முறையே இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
அதிலும் டாக்டரின் மகளாக வரும் சஞ்சனா தீபு நடிப்பில் அசத்தி இருக்கிறார்
அப்பாவிடம் பாசத்துக்காக ஏங்குவது வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் அவர் மனதில் இடம் பிடித்து கொள்கிறார்.

அசத்தலான கேமரா கோணங்களில் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பிரமாதமான காட்சிகளை வெளிக்கொணர்ந்து உள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் பனி மூடிய மலைகள் ஆகியவை படத்திற்கு ஒரு அழகியல் ஈர்ப்பை வழங்கியதுடன், அவருடைய ஸ்டைலிஸ்டிக் காட்சி அணுகுமுறை சில அழகியல் மதிப்பைச் சேர்க்கிறது,

அறிவியல் உலகம் எதிர்நோக்கும் ஒரு பயங்கரமான நோய், அதை மறைத்து உலகை அழிக்க திட்டமிடும் தீய சக்திகள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இவை இரண்டும் இணைந்தால் உலகில் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து, நோய் பரவலை அதிகப்படுத்தும் வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவினால் மனித வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை ரசிகர்களை சிந்திக்க வைக்கும் படமாக படைத்துள்ளார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
திரில்லர். சஸ்பென்ஸ் எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் வித்தியாசமான லொகேஷன் ஜெர்மனியில் உருவாகும் வைரஸ் நோய் இந்தியாவிற்கு கேடு நினைக்கும் விஞ்ஞானிகள் காக்க துடிக்கும் காவல்துறை அதிகாரிகள் என்று ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மலையாளத்திலும் இப்படம் சமாரா என்ற பெயரில் வெளியாகி வெற்றி நடை போட்ட இப்படம் தமிழகத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது நிச்சயம் காண வேண்டிய படம் சமாரா