திரையின் மறுபக்கம் விமர்சனம்

விவசாயம் செய்து வரும் முகமது கவுஸ் க்கு சினிமா மீது மோகம்

அவர், டுபாக்கூர் டைரக்டர் நடராஜன் மணிகண்டனின் ஆசை வார்த்தைகளில் மயங்கி படம் தயாரிக்க முன்வருகிறார் அப்புறம் என்ன சோதனை தான்

ஊரில் இருக்கும் நிலபுலன்களை விற்று பணத்தை சினிமாவில் போடுகிறார். படத்தை எடுத்து வினியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பிக்கிறார். அதில் ரசிகர்கள் விரும்பும் காதல், சண்டை மற்றும் கிளுகிளு காட்சிகள் இல்லை என்று வாங்க மறுக்கிறார்கள். இதையடுத்து பைனான்சியரிடம் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி மீண்டும் படப்பிடிப்பு நடத்தி புதிய காட்சிகளை சேர்க்கிறார். இருந்தாலும் சோதனை தான்.

ஆனாலும் படத்தை வாங்க ஆள் இல்லை. இதனால் என்ன முடிவு எடுத்தார். படத்தை திரைக்கு கொண்டுவர முடிந்ததா? என்பது மீதி கதை. இப்படி எல்லாமே தயாரிப்பு பக்கம் தவறு சொல்வது நியாயம் தானா பாஸ்

மோசடி டைரக்டராக வரும் நடராஜன் மணிகண்டன் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஹாலிவுட் சி.டி.க்களை பார்த்து கதை தயார் செய்வது, தயாரிப்பாளர்களிடம் பழைய படங்களின் கதையை சொல்லி ஏமாற்றுவது என்று ஏகத்துவம் இவருக்கு

சூர்யாவுக்கு உன்னை ஜோடியாக்குகிறேன் என்று சொல்வதை நம்பி ஏமாறும் ஹேமா ஜெனிலியா மற்றும் புரோக்கர்களாக வந்து பொய் சொல்லும் அனைவருமே தேவையான நடிப்பை வழங்கி உள்ளனர்.

அப்பாவி தயாரிப்பாளராக வரும் முகமது கவுஸ் விரக்தி, ஏமாற்றம், தவிப்பு, கவலை என அத்தனை உணர்வுகளையும் முகத்தில் வெளிப்படுத்தி அபாரமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அடப்பாவி இப்படி ஆகி விட்டாயே என்று சொல்லும் அளவுக்கு

ரிஷா நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

சினிமா எடுக்க வரும் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை பிடுங்கி நடுத்தெருவில் விடுகிறார்கள் என்பதையும், திரைக்கு பின்னால் நடக்கும் தகிடுதத்தங்களையும், அழுத்தமான திரைக்கதையில் கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு படமாக கொடுத்துள்ள இயக்குனர் நிதின் சாம்சன் இவர் இந்த படத்தில் நாற்பது நான்கு கிராப்டில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அவரே சில காட்சிகளில் நடித்து தேர்ந்த நடிகராகவும் பளிச்சிடுகிறார்.

அனில் இசையில் “ஏமாந்து போடா முட்டாளே, ஒருமுறை பார்த்தால் உயிர்போகும்” பாடல்கள் கேட்கும் ரகம் பாண்டியராஜனின் ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்தில் வரும் ‘பிம்பிளிக்கா பிளாப்பி’ சாயலில் அமைந்த சற்றே ரசிக்கும்படியான காட்சியும் படத்தில் உண்டு.
பட விநியோகஸ்தரை அறிமுகப்படுத்த பணம், சென்சாரில் யூ சர்டிபிகேட் பெற பணம் என திரையுலகின் மறுபக்கம் தெரியாத ஒருவர் தயாரிப்பாளரானால் அவரிடம் யார் யாரெல்லாம் ஏமாற்றி எப்படியெல்லாம் கரன்சியைக் கறப்பார்கள் என்பதை இதைவிட விரிவாக யாரும் விளக்க முடியாது என்கிற அளவுக்கு பாராட்டும்படியான காட்சிகளைச் சுருட்டியிருக்கிற இயக்குநர் நிதின் சாம்சன்,

படத்துக்குள் உருவாகும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மனிதர் ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் சில பணிகளையும் சுமந்துள்ளார்; கதைக்களத்துக்கு போதும் என்கிற அளவில் அதனை செய்துள்ளார்.
சினிமாவில் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பது பற்றி ஒரு சதவிகிதம் கூட அறியாதவராக வருகிற மேனேஜரிலிருந்து இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம்!
போகிறபோக்கில், கடனை திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டினால் அது பற்றி போலீஸிடம் புகார் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் விதைத்திருக்கிறது இந்த படம்!
அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசையில், நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களும் கார்ப்பரேட் உலகமும் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை எடுத்துச் சொல்கிற ‘ஏமாந்து போடா முட்டாளே’, காதல் உணர்வை அதன் தன்மையோடு சொல்கிற ‘ஒருமுறை பார்த்தால் உயிர் போகும்’, கதையோட்டத்தின் சரியான தருணத்தில் வருகிற ‘ஆசையிலும் பேராசை’ என்ற பாடல்கள் மனதில் நிற்க கேட்கும்படியிருக்கிறது.
திரையுலகின் பின்னணியில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்ட நினைத்த இயக்குநர் அதை இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன், தேர்ந்த நடிகர் நடிகைகளின் பங்களிப்புடன் தந்திருக்கலாம்!

‘திரையின் மறுபக்கம்’ சினிமா அல்ல பாடம் இன்று படம் எடுக்க வருபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் படம்