தமிழ் சினிமாவில் உலக சினிமா கூழாங்கல் (Pebbles) 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட
தமிழ்த் திரைப்படம்.
அறிமுக இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கிய முதல் திரைப்படம். நயன்தாரா மற்றும் தயாரிப்பாரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் இத்திரைப்படத்தைத் தங்களது ரவுடி பிக்சர்ஸ்
நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவாளர்களாக ஜெயா. பார்த்திபன், விக்னேஷ் குமுளையும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவாவும் பணியாற்றியுள்ளனர்
: செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம்,
ஒரு இராமத்தில் நடந்த உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் தந்தை-மகன் ஆகியோரின் பாச போராட்டத்தை மையப்படுத்தி இக்கதை எழுதப்பட்டுள்ளது. உலக அளவில் பல விருதுகளை அள்ளிவந்துள்ளது
பல விருதுகளையும் பல சர்வதேச திரைப்ப விருதுகள் என பல விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. நெதர்லாந்தில் நடைப்பெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் விருதில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ், புதிய இயகுநருக்கான விருதை பெற்றுள்ளார். ஆனாலும், இந்த படத்தை திரையரங்குகளில் பல காரணங்களுக்காக வெளியிட முடியாமல் போனது தற்போது. இப்படம் சோனி லைவ்.ஓடிடி. வெளயீட்டில் வந்துள்ளது
‘கூழாங்கல்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தப் படம் கடந்த 2021-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்காக இந்தியா சார்பில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடந்த ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது.
என்பது குறிப்பிடதக்கது
இந்த படத்தின் விஷுவல் காட்சிகள் i: படர்ந்த பாதைகளும், வறண்ட நிலத்தின் தாவரங்களும் நமக்கு கதையின் இன்னொரு கோணத்தை சொல்லிக் கொண்டே வருகின்றன.
இது தமிழ் சினிமா வில் புதுமை
படத்தின் இன்னொரு நாயகன் எனில், அது படத்தில் வரும் நிலவியல். கதாபாத்திரங்கள் மூலம் ஒரு கதையும், நிலவியல் காட்சிகளின் மூலம் இன்னொரு கதையும் நமக்கு சொல்லப்படுவது தான் பவுடர் பூச்சு இல்லா தமனிதர்கள். , இயல்பான நடிப்பு வழங்கி உள்ளார்கள். கதையைவிட்டு நம்மால் ஒரு கணம் கூட விலக முடிய வில்லை
கிராமத்து மக்களின் இயல்பான நடிப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றி
இப்படத்தின் எடிட்டிங், படத்தின் மிகப்பெரிய பலம். துண்டு துண்டாக வெட்டாமல், நின்று நிதானமாக சீரான வேகத்தில் படம் செல்கிறது. நடக்க நடக்க கடக்க முடியாத துாரம் இப்படத்தின் நாயகன் 24 நாள் நடந்துள்ளார்.
படப்பிடிப்பில் என்பது குறிப்பிடதக்கது
ஒலி வடிவமைப்பு அட்டகாசம். இயற்கையான ஒலிகள், நேரடி ஒலிப்பதிவும் மாயாஜாலம் செய்திருக்கின்றன. ஒரு காட்சியில் அப்பாவின் காலடித் தடத்தின் ஒலியும், சிறுவனின் காலடித் தடத்தின் ஒலியும் ஒரே பிரேமில் நமக்கு கேட்கிறது. இந்த ஒலிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்துகின்றன. நிறைய நேரம் படத்தில் மெளனம் கூட ரசிக்க வைக்கிறது இசையே வேண்டாம் என்றும் சொல்ல தோன்றுகிறது
இசை யுவன் சங்கர் ராஜா. பெரும்பாலும் இந்த படத்திற்கு இசை தேவையில்லை என்பதை யுவன் புரிந்து கொண்டு இசையமைத்திருக்கிறார். இந்த அழகான எளிய படத்தை தயாரிக்க முன்வந்ததற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதன் எதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு இந்த படத்தை வாங்கி வெளியிட்டதில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் தமிழ் சினிமா உலகம் தலைவணங்கி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது
வன்முறை, ஆபாசம் இவற்றையே மூலதனமாக கொண்டு படங்கள் வெளிவரும் சூழலில், “கூழாங்கல்” என்னும் நல்ல சினிமா ஆசுவாசத்தையும் நிம்மதியையும் தருகிறது.
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
எளிய கதை. கொடுமைக்கார கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்லும் மனைவியை மீண்டும் கூட்டிக் கொண்டு வருவதற்காக மகனுடன் கிளம்புகிறான் அந்த கணவன்.
இதில் பஸ்ஸில் போகும்போது ஒரு குட்டி கலாட்டா மகனை பள்ளியில் இருந்து கூட்டிக் கொண்டு வரும் போது அங்கு ஒரு வீராப்பு பஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் போது பெட்டிக்கடையில் 105 ரூபாய் சரக்கு என எல்லாமே எதார்த்தமாக பயணிக்கிறது
கணவன்
மனைவியை தேடிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு போகும்போது அங்கே மாமியாருடனும் மச்சினனுடனும் சண்டை போடுகிறான் இதனால் வெறுத்துப் போகிறான் அந்த சிறுவன் அப்பா மீது கோபம் கொண்டு ஒரு முடிவு எடுக்கிறான்
தந்தையுடன் மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிறுவன் பணத்தை கிழித்து எறிந்து விட்டு ஓடுகிறான்.
குடிகார தந்தை மீண்டும் நடந்தே உருக்கு செல்லட்டும் என்று அப்படி அவனும் நடக்கத்தொடங்கும்போது வெயிலில் தாகம் எடுக்காமல் இருக்க ஒரு கூலாங்கல்லைவாயில் எடுத்து போட்டுகொள்கிறான் படத்தில் முடிவில் அந்த கூலாங்கல்லைவாயில் இருந்து எடுத்து வைக்கிறான் அவ்வளவு கற்கள்
வேறு வழியில்லாமல் அவனது தந்தை தனது மகனை பின் தொடர்ந்து நடந்தே ஊர் வந்து சேர்கிறான்.
வழியில் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
கடும் வெயில் வழியில் பாம்பு மகனின் கோபம்
இப்படி படம் முழுக்க குறியீடுகள்
இந்த எளிய கதையை பிரச்சார நோக்கமில்லாமல், அனுதாபத்தை கோராமல், இயல்பான காட்சி மொழியிலும், நிலவியல் காட்சிகளிலும் வாழ்வை நம் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ்
கிராமத்து மனிதர்கள் பேசும் அந்த இயல்பான வார்த்தைகளும் கூட படத்திற்கு பொருந்தி போகிறது சில கெட்டவார்த்தைகள் உள்பட
படத்தின் முதல் காட்சியில் இருந்தே நடக்கத் தொடங்கி விடுகிறார் நடிகர் கருத்தடையான். ஆவேசமும், வன்மமும் கொண்ட அந்த பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி இருக்கிறார். படம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறார். நடையில் காட்டும் வேகத்தைக் கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு அற்புதமான வரவு கருத்தடையான்.
நடந்து நடந்து அவருக்கு கால்கள் புண்ணாக இருக்கலாம் ஆனால் படம் பார்த்தவர்களுக்கு மனசு பொன்னாகியிருக்கிறது பாராட்டுக்கள்
சிறுவனாக வரும் செல்லப்பாண்டியும் நடந்து கொண்டே இருக்கிறான். ஆங்காங்கே தரையில் கிடக்கும் கண்ணாடி, இலைகள், மற்றும் பாறைகள், மலைகள், செடிகள் இவற்றினூடாக அவனது பயணம் நமது மனதை கரைய செய்கிறது.
தந்தை மீது அந்த சிறுவன் காட்டும் கோபம் கண்ணாடி தூண்டில் இருந்து சூரிய ஒளியை பாய்ச்சு முதுகை சுட வைப்பது
என எல்லாமே ரசிக்க வைக்கிறது
மதுரையின் சுற்றுப்புற ஊர்களான அரிட்டப்பட்டி, ஒத்தக்கடை, மேலூர் ஆகிய பகுதிகளின் நிலங்களில், அந்த கொடும் வெயிலில் சிறுவன் செல்லப் பாண்டியின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத் தகுந்தது. தனது தந்தையை பழிவாங்கும் முயற்சியில் அவன் செய்யும் சில்மிஷங்கள் ரசிக்க வைக்கின்றன
[படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவு. விக்னேஷ் குமுலை, ஜெயா, பார்த்திபன் ஆகியோரின் கேமரா மேலூரின் வெயிலை சுமந்து வருகிறது. நீளமான ஷாட்களும், தேவைக்கு ஏற்ப நிலைத்த ஷாட்களும், பாத்திரங்களின் நடை பயணத்தின் போது கேமராவின் நடை பயணமும் வசீகரிக்கின்றன.
நாயகன் நடக்கும்போது கேமராவை தோளில் சுமந்து கொண்டு ஒளிப்பதிவாளரும் நடையாய் நடந்திருப்பார் அவரின் உழைப்பு நன்றாக தெரிகிறது
சிறுவன் செல்லப்பாண்டி அவனது அம்மா ஊருக்கு சென்று விட்டு, பின் அவனது அப்பா அவனைத் தேடி வந்து சண்டையிடும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்றாக அமைகிறது. தகிக்கும் சூரியனின் பின்புலத்தில் கருத்தடையான் நடந்து செல்லும் போது காட்டப்படும் காட்சி உக்கிரமாக அமைகிறது.
இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜின் திரைக்கதை அமைப்பும், காட்சி மொழியும், ஒலி வடிவமைப்பும் இந்தப் படத்தை உலக தரத்திற்கு மாற்றுகின்றன. தனது வாழ்வின் அனுபவத்தை வலியை கடத்த அவர் காட்டியிருக்கும் பொறுப்புணர்வும் நேர்மையும் அவரை கொண்டாட வைக்கிறது. தந்தை அவரது மகனை அடிக்கும் வன்முறைக் காட்சியின் போது கேமரா சற்று விலகி காட்சியின் கோரத்தை தவிர்த்து அமைதி காக்கிறது. பார்வையாளருக்கு காட்சியின் தீவிரத்தை கடத்தும் அதே சமயம் வன்முறையை காட்சிப்படுத்தும் போது பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறது!
இந்த கிராமத்து மக்கள் தண்ணீருக்காக ஊற்று நீரை சுரண்டி சுரண்டி ஒரு குடம் நிரப்புவதற்குள்
போதும் போதும் என்று ஆகிறது இன்னும் நிறைய பெண்கள் அந்த நீருக்காக காத்திருக்கிறார்கள் மனதை கனமாக்கும் அந்த காட்சி இன்னும் எத்தனை கிராமங்களில் இந்த அவலம் தொடர்கிறது என்பதை சொல்கிறார் இயக்குனர் இதற்காகத்தான் விருதுகள் தந்து இருப்பார்களோ?
எடிட்டிங், படத்தின் மிகப்பெரிய பலம். துண்டு துண்டாக வெட்டாமல், நின்று நிதானமாக சீரான வேகத்தில் படம் செல்கிறது. ஒலி வடிவமைப்பு அட்டகாசம். இயற்கையான ஒலிகள், நேரடி ஒலிப்பதிவும் மாயாஜாலம் செய்திருக்கின்றன. ஒரு காட்சியில் அப்பாவின் காலடித் தடத்தின் ஒலியும், சிறுவனின் காலடித் தடத்தின் ஒலியும் ஒரே பிரேமில் நமக்கு கேட்கிறது. இந்த ஒலிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்துகின்றன.
நாயகன் கோபம் வரும் போதெல்லாம் பீடி எடுத்து வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டிக்காக தடுமாறுவது மகன் தந்தை மீது இருக்கும் கோபத்தால் தீப்பெட்டி இல்லை என்று சொல்லிவிட்டு அந்த தீப்பெட்டியை எடுத்து வீசுவது படத்தில் ஹைலைட் காட்சி வசனமே இல்லாமல் பலத்த கைதட்டலோடு உணர்வுகளை அள்ளிக் கொண்டு செல்லும் அற்புதமான காட்சி
தமிழில் ஒரு நல்ல சினிமா பார்த்து எத்தனை நாள் ஆகிறது கோடிக் கணக்கில் சம்பளத்தை கொடுத்து இடையும் தொடையும் காட்டி இனசுகள் மனதை கெடுக்கும் சினிமாக்களுக்கு மத்தியில் இயல்பான கதைகளம் இயல்பான மனிதர்கள் இயல்பான வசனங்கள் கிராமத்து மனிதர்கள் படும் துன்பங்கள் இவை எல்லாவற்றையும் கண் முன்னே நிறுத்தும் இந்த கூழாங்கல் வெறும் கல்லல்ல
மாணிக்க கல் வைரக்கல் இந்த கல்லை பார்த்தாவது தமிழ் சினிமா எடுப்பவர்கள் நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு தரமான கதைகளை தேர்வு செய்து வாழ்வியல் கதைகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார்கள் என்று நம்புவோம்
இயக்குனருக்கும் வாங்கி வெளியிட்ட விக்னேஷ் சிவனுக்கு ம் நயன்தாராவுக்கும் இதில் நடித்த நடிகர்களுக்கும் உழைத்த டெக்னீசியன்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்
ஓடிடி தளமான சோனி லைவ்ல் கண்டுகளியுங்கள்
