இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் ஹீரோவாக நடித்து ள்ள கான்ஜுரிங் கண்ணப்பன். மிரட்டலா அல்லது விட்டலாச்சார்யா வா?
இப்படத்தில் சதீஸ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசை யுவன். ஆர்ட் டைரக்டர் மோகன் நாகேந்திரன் படத்தொகுப்பு பிரதீப், மேக்கப் குப்புசாமி, காஸ்ட்யூமர் பிரசாத்
AGS இப்படத்தை தயாரித்துள்ளது.
ஒரு வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் இந்த படம்
விமர்சனம் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
1930 ல்நடந்த பிளாக் மேஜிக் 2023ல் ஒரு குடும்பத்தை எப்படி ஆட்டி படைக்கிறது என்பது ஒன் லைன்
கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஸ் பாத் ரூம் போக தண்ணீர் இல்லாமல் கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது அங்கு மேலே வரும் Dream catcher-ல் இருந்து ரெக்கை ஒன்றை பிய்த்துவிடுகிறார்.
அதனால் பயந்து அதை மீண்டும் அந்த கிணற்றில் போட. அது மீண்டும் வீட்டுக்கு வந்து விடுகிறது
அவர் உறங்கும் போதெல்லாம் ஒரு கனவு உலகத்தில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார். விழிக்கும் போது பேய் போய் விடுகிறது. இதை குடும்பத்தில் இருப்பவர்கள் இடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள் அடுத்து என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம்
ஆனந்த் ராஜ் இடம் கடன் என நாயகன் சதீஸ் சிக்கிக்கொண்டது மட்டுமல்லாமல்
அவரையும் சிக்க வைக்கிறார்
அவரது தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் Dream catcher-ல் இருந்து ரெக்கையை பிடிங்கி கனவு உலகத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.அங்கு தான் காமெடி கலாட்டா. இதனால் பல இரவு கள் தூக்கம் போகிறதுஅவர்கள் அனைவரும் சந்தித்த விளைவுகள் என்னென்ன, இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா பேயிடம் இருந்து தப்பிக்க ரெஜினா நாசர் உதவி செய்தார் களா இல்லை அவர்களும் மாட்டிக் கொண்டு விழித்தார்களா.. இல்லையா என்பது மீதி கதை
நாயகன் சதீஷ்
சதீஸ் நடிப்பு பாராட்டுக்குரியது.
பேயிடம் அடி வாங்கி பயப்படுவது ஆனந்தராஜிடம் கடன் வாங்கி பயப்படுவது தூங்காமல் இருக்க எழவு வீட்டில் ரகளை செய்வது ரெஜினாவை பார்த்து பேயென்று சரண்யா கத்த சும்மாயிருமா என்று கலாய்ப்பது பேய்களை மிரட்ட கண்ணாடி மூலம் செக் வைப்பது கடைசியில் பேயை ஒழிக்க சரக்கு பாட்டில் மூலம் தீப்பற்ற வைப்பது இப்படி முக பாவனைகளில் ரசிக்க வைக்கிறார் சதீஷ் ஒற்றையாளாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
அவருக்கு காதல் ஜோடி இல்லை என்பதாலும் படம் அவருக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கிறது
அடுத்து நாயகன் அம்மா
சரண்யா பொன்வண்ணன்
சராசரி அம்மாவாக சதீஷின் அம்மாவாக வந்து அருமையான நடிப்பை தந்திருக்கிறார் தன் வீட்டில் லைவாக யூடியூப் சேனலுக்கு பில்டப் கொடுப்பது தன் கணவர் விடிவி கணேசனை கலாய்ப்பது பேயிடம் சிக்கிக் கொண்டு முழிப்பது என சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டு அம்மா போல பாந்தமாக நடித்திருக்கிறார்.
அதுவும் அந்த எழவு வீட்டில் அவர் செய்யும் காமெடி கலாட்டா
நகைச்சுவை அரசன் ஆனந்த்ராஜ்
இவரின் நடிப்பு படத்திற்கு பலம். பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்
மனுஷன் நைட்டி போட்டு கொண்டு வந்து தூங்காமல் விழிப்பது பேயிடம் மாட்டிக் கொண்டு டைமிங் காமெடி அடிப்பது சதீஷை 10 லட்சம் கேட்டு மிரட்டுவது என ஆனந்தராஜ் அசத்தல் ராஜாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்
ரெடின் கிங்ஸ்லி.
சைக்காரிஸ்ட் மருத்துவராக வந்து காமெடியில் கலை கட்டுகிறார்
சதீஷிடம் மாட்டிக் கொண்டு அவரும் தூங்காமல் அல்லல்படும் காட்சிகள் பேயிடம் மாட்டிக் கொண்டு அல்லல்ப்படும் காட்சிகள் கிங்ஸ்லி ரசிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷ்,
நமோ நாராயணன், நாசர் மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்கள் பெரிதளவில் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது
. பேயாக நடித்த நடிகை Elli Avrram நடிப்பு ஓகே.
கடுமையான மேக்கப் போட்டுக் கொண்டு படம் முழுவதும் பேயாக வந்து மிரட்டுகிறார்
அறிமுக இயக்குனரான செல்வின் ராஜ் சேவியர் எடுத்துக்கொண்ட கதைக்களம் வழக்கமான பேய் கதைகளை விட சற்று மாறுபட்டதாகவே இருக்கிறது
. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
பிளாக் மேஜிக் என்ற சூனிய கதையில் குடும்பம் வேலையில்லா திண்டாட்டம் 10 லட்சம் கடன் மருத்துவர்கள் என்று களைகட்டுகிறது காதல் தூக்கம் வந்தால் பேய் மாளிகைக்கு போய் விடுவோம் என்று சதீஷ் சரண்யா டி வி கணேஷ் ஆனந்தராஜ் கிங்கிஸ்லி நமோ நாராயணன் அனைவரும் அலறும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிது
முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது இரண்டாம் பாதி பேயின் மிரட்டல் அந்த பேயை எப்படி ஒழிப்பது அதிலிருந்து விடுபடுவது என்ற ஆராய்ச்சியும் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டுகிறது அந்த பிளாஸ் பேக் காட்சி 1930 இல் நடப்பது கதைக்கு சமபலம் சில சமயத்தில் டிடி ரிட்டன்ஸ் கதையும் ஞாபகப்படுத்துகிறது
ஹாரர் மற்றும் திரில்லர் போன்ற கதைக்களத்தில், அடுத்த என்ன என்ற திரைக்கதை தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் , இந்த கதையில் பேய் எப்படி இந்த மாளிகையில் இருந்து வெளியேறும் எந்த வகையில் சதீஷ் அதிலிருந்து எப்படி தப்பிப்பார் என்று ஆர்வம் மேலோங்குகிறது அதுவே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
நகைச்சுவைக்கு கைகொடுப்பது கண்டிப்பாக படத்தில் ஆனந்த் ராஜ் தான்
சுவாரஸ்யம் கூட்டி சென்று இருக்கிறார் . இதுதான் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சூப்பர். SFX சிறப்பாக இருக்கிறது.
படத்தின் மிரட்டலுக்கு பின்னணி இசை கைகொடுத்து இருக்கிறது பாடல்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் மிரட்டி இருக்கிறார் யுவன்
ஒளிப்பதிவு
படத்திற்கு அற்புதமாக கை கொடுத்திருக்கிறது அந்த பேய் மாளிகையும் ஆர்ட் டைரக்டர் உழைப்பும் ஒளிப்பதிவாளர் உழைப்பும் நன்றாக பொருந்தி இருக்கிறது
எடிட்டிங் நன்றாக இருக்கிறது சரியான படத்தொகுப்பு.
பிளஸ் பாயிண்ட்
சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு
கதைக்கரு
SFX
பின்னணி இசை
ஆர்ட் டைரக்டரின் உழைப்பு
வித்தியாசமான திரைக்கதை
இதுவரை சொல்லப்படாத பேய் கதை
சரியான நடிகர்கள் தேர்வு
படத்தை கச்சிதமாக முடித்திருக்கும் கிளைமாக்ஸ
அடுத்து என்ன என்று எளிதாக கணிக்க முடியாத திரைக்கதை
ரெஜினாவின் பேய் வடிவம் மேக்கப்
நாசரின் ஆராய்ச்சி நடிப்பு
நமோ நாராயணனின் டைமிங் காமெடி
வி டிவி கணேசன் பெண் மயக்க நடிப்பு சரண்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கலகலப்பு
இயக்குனரின் சாமர்த்தியம் புத்திசாலித்தனமான திரைக்கதை பேய் கதைக்குள் பிளாக் மாஜிக் என்ற விறுவிறுப்பான கருவை உள்ளே வைத்தது என படம் எல்லா வகையிலும் ரசிக்க வைக்கிறது குழந்தைகள் சிரிக்க வைக்கும் குடும்பத்தோடு படத்தை ரசிக்க வைக்கும் இந்த காஞ்சூரிங் கண்ணப்பன் கண்டிப்பாக ரசிக்க வைப்பான்
