நட்பு ,அரசியல், துரோகம் என பல படங்களில் பார்த்த காட்சியாக இருந்தாலும் விறுவிறுப்பாக பைட் கிளப் படத்தை இயக்கி உள்ளார் அப்பாஸ் அ. ரஹ்மத். ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை வழங்கி உள்ளார்.
வட சென்னை வாலிபர்களின் வளர்ச்சிக்காக எப்போதும் சிந்திக்கும் பெஞ்சமின்னை
அரசியலில் வர துடிக்கும் கிருபாவும், ஜோசப்பும் ,இணைந்து கொன்று விடுகிறார்கள். கிருபா அரசியலில் வளர்ந்து பெரிய ஆளாகி விடுகிறார். பொறாமை கொள்ளும் ஜோசப் என்ன செய்தார்?
கதை திரைக்கதை எப்படி இருக்கு?
அந்த ஏரியாவில் வாழும் இளைஞர்கள்
பாக்ஸிங்கை உயிராக நினைத்து வாழும் பெஞ்சமினுக்கு, வடசென்னைக்காரன் என்ற அடையாளம், அவன் மேலே செல்வதற்கு முட்டுக்கட்டையாக நிற்க, திறமை இருந்தும் சோபிக்காமல் போகிறார்.
இதில் மனம் உடைந்த பெஞ்சமின், தான் இழந்ததை தான் ஊர் இழக்கக்கூடாது என்று எண்ணி தன்னுடைய ஊருக்காக வடசென்னை ராஜன் போல வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தம்பி ஜோசப்போ கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று கொண்டு இருக்கிறான்.
இதை பெஞ்சமின் பலமுறை கண்டித்தும் தம்பி கேட்ட பாடில்லை. இதனிடையே, சம்பவம் ஒன்றில், தம்பியையும் கிருபாவையும் நடுரோட்டில் வைத்து பெஞ்சமின் பொளந்து கட்ட,இனி வேலைக்கு ஆகாது என்று, அண்ணனை கிருபாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப்.
சம்பவத்தில் யார் ஜெயிலுக்கு போவது என்ற பேச்சு வர ஜோசப்பை ஜெயிலுக்கு போக சொல்லும் கிருபா ஒரு வாரத்தில் வெளியே எடுத்து விடுவதாக நம்பிக்கை கொடுக்கிறான்
ஆனால் சொன்ன வாக்கை கிருபா காப்பாற்ற வில்லை. இதனையடுத்து வெளியே வரும் ஜோசப் செய்தது என்ன, இதில் செல்வா எப்படி சம்பந்த படுகிறான் என்பது மீதி கதை. செல்வாவாக நடித்து இருக்கும் விஜயகுமார் வட சென்னை இளைஞனாக துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடி தடி யை கையில் எடுத்து அவதாரம் எடுத்து உள்ளார் சரியான சன்டை கோழி நடிப்பு
: ஆக்சன், இசை, ஹீரோவின் நடிப்பு என இதுவரை பார்க்காத ஒன்றை
முதல் பாதியில்
காட்டி இரண்டாம் பாதிக்கான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
திரை க்கதை
அது மட்டுமின்றி இடைவேளை காட்சியும் விஷுவல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இரண்டாம் பாகமும் ஃபயராக நகர்கிறது
ஓட்டம் ஓட்டம் ரன் பாய்ஸ் ரன் என்பது போல….
வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் லோகேஷ் தயாரிப்பாளராக கல்லா கட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.ஆக மொத்தம் ஆரம்பமே அட்டகாசம் என்ற கதையாக லோகேஷ் தயாரிப்பாளராக வெற்றியை நோக்கி முதல் படியை எடுத்து வைத்திருக்கிறார்.
அதே போன்று இனி விஜய்குமாரும் பிசியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை?
ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் மிகப்பெரிய பலம் இருட்டான காட்சிகளிலும் கல்லூரி காட்சிகளும் பாக்சிங் காட்சிகளும் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரையரங்கில் நடக்கும் காட்சிகளும் ஒளிப்பதிவு அள்ளிக் கொண்டு வந்துள்ளது.
கோவிந்தசாமி பின்னணி இசை பயமுறுத்தல் சில நேரங்களில் மௌனம் கூட படத்தில் மிரட்டுகிறது.
ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார் விஜயகுமார் அவர்களுடன் நடித்த அனைத்து நடிகர்களும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள் முகத்திலேயே குத்துகள் வாங்கி இறங்கும் போகிறார்கள் தள்ளிவிட்டு சண்டை செய்கிறார்கள்.
நட்பு, துரோகம் ,கஞ்சா விற்பது, அரசியல், அடிதடி இலக்கு நோக்கி பயணிப்பது என எல்லா இடத்திலும் திரைக்கதை றெக்கை கட்டி பறக்கிறது இளைஞர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த பைட் கிளப் நல்லா கல்லாகட்டும்
சிறிய பட்ஜெட்டில் விறுவிறுப்பான திரைக்கதையில் ஃபை ட் கிளப்பில் வெற்றி கொடி பறக்கிறது.
