இளைஞர்களை கெடுக்கும் ஃபை ட் கிளப்

இளைஞர்களை கெடுக்கும் ஃபை ட் கிளப். லோகேஷ் வழங்கும் ஃபைட் கிளப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. .

அதனாலேயே இன்று ரசிகர்கள் இப்படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர். அதை தொடர்ந்து தற்போது இளைஞர் பட்டாளங்கள் படத்தை பற்றி புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுமகிறது.

ஆனால் இப்படி கொண்டாடப்படும் இப்படத்தில் வன்முறை உச்சகட்டத்தில் இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் போதை பொருட்களை உபயோகிக்கும் காட்சிகள் படம் முழுக்க வருகிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தை பார்ப்பவர்களுக்கே அந்த நெடி மூச்சை அடைக்க வைத்திருக்கிறது.இளைஞர்களை கெடுப்பதற்கா படம் எடுக்கிறீர்கள் என பொது மக்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்