காமி இது ஒரு வித்தியாசமான திரைப்படம் திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, என்று எல்லாமே சிறப்பாக இருக்கிறது ஒவ்வொன்றும் வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி இருக்கிறது காமி படக்குழு.
இதன் கதைகளம் கடந்த காலத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் அகோரி (சங்கர் பயணப்படுவது தான் முதல் காட்சியில் அகோரிகள் கூட்டத்தில் சங்கர் இருக்கிறார் அவருக்கு மனித உடல் மேலே பட்டால் உடல் சிலிர்த்துக் கொள்ளும் ஒரு நிலை மயக்கம் வந்துவிடும் இது ஒரு சாபம் என்று அகோரிகள் அவரை விலக்கி வைக்கும் முதல் சண்டை காட்சி ரசிக்க வைக்கிறது
(2) விஷ்வாக்ஷன், சாந்தினி சாவித்திரியோடு, நாடோடிகள் அபிநயா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை வித்யாத காகிடா ,இயக்கி உள்ளார் இப்படத்தை ஆறு ஆண்டுகளாக உழைத்து தந்துள்ளார். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு நமக்கு சுவையான காட்சியை தருகிறது
(3) வாரனவாசியில் அகோரியாக வாழும் சங்கரை ஒதுக்கி வைக்கிறார்கள் மனிதர்கள் தொடும் போது அவருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதே அதற்கு காரணம் எந்த மனிதரை சங்கர் தொட்டாலும் அவர் மயிர் கால்கள் சிலிக்கின்றனது, ரத்தம் கொதிக்கிறது, உடல் சூடு , வருகிறது இதயம் செயலிழக்க தொடங்குகிறது இப்படிப்பட்ட வாழ்வை பெற்றது பெரும் சாபம் என்பது அகோரிகள் கருத்தாக இருக்கிறது.
அதனால் சங்கரை அங்கிருந்து சென்று விடுமாறு வற்புறுகிறார்கள் கூடவே உன்னை எங்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்த கேதார் பாபாவை கண்டு உனது கடந்த காலம் குறித்து தெரிந்து கொள் என்கிறார் அதற்காக சங்கர் புறப்படுகிறார் கேதார் பாபா அவர் இறந்து 2 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் கேதர் பாபு கொடுத்து சொல்லி சில பொருட்களை சங்கரிடம் கொடுக்கிறார் அவர் சீடர்கள் அது என்ன?
அதனை தேடி கண்டுபிடிக்கும் பயணத்தில் பயணிக்கும் போது கூடடாக்டர் ஜான்வி வருகிறார் சங்கரும், ஜான்வியும் பயணப்படுவது தான் கதை,திரைக்கதை, களம்
(4) படத்தில் பனிப்புயல், கரடு முரடான பாதை, என பல சூழ்நிலைகளை இயக்குனர் உணர வைக்கிறார் ரம்யமாக இருக்கிறது.
(5)ஆந்திர கிராமத்தில் வளரும் உமா ,சம்பந்தப்பட்ட நினைவுகளும் மருத்துவ ஆய்வு ஒன்றில் சோதனையாக, பயன்படுத்தும் இளைஞரும் அவ்வப்போது கனவுகளாக சங்கர் எதிர்கொள்கிறார், அதற்கு இறுதியில் பதில் கிடைக்கிறது இமயமலையில் ஜான்வின் சங்கரின் மேற்கொள்ளும் பயணம் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன
(6) உமாவாக ஆரிகா வும், ஆய்வகத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞனாக முஹம்மது சமதும், நடித்துள்ளனர் நாயகன் விஸ்வக்சனுக்கு கமர்சியல் படத்துக்கு தேவையான நடிப்பை இதில் வழங்கி இருக்கிறார்,
நாயகி சாந்தினி, சாவித்திரி கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்து இருக்கிறார்
(7) இவர்கள் மட்டும் அல்ல மாயன் பராக், சாந்தி ராவ், உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
(8) ஹாரிகாவின் தாயாக நடித்துள்ள அபிநயா, தேவதாசியாக, வாழ்நாள் முழுதும் அவமானத்தை சுமப்பதாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் நமக்கு நெகிழ வைக்கிறது
விஸ்வநாத் ,செலு மல்லா, ரம்பி நந்திகம்,என
மூன்று ஒளிப்பதிவாளர் கள் சாம்பல், கருப்பு, நீலம், என கதையில் வண்ணத்தை காட்டி காட்சிகள் வித்தியாசமான முறையில் வழங்கி இருக்கிறார்கள்
பெரும்பாலான காட்சிகள் பணிபடர்ந்த, இமயமலையை காட்ட வி எப் எக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது கிரீன் மேட் முறையில் அவை படம் படிக்கப்பட்டுள்ளன அந்த இடங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது
(9)நரேஷ் குமரனின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது படத்திற்கு சில நேரங்களில் மௌனமாக கதையை கடத்துகிறார் மூன்று பாடல்களை அற்புதமாக தந்திருக்கிறார்
(10)படத்தொகுப்பாளர் ராகவேந்திரா திருன்
காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார்
(11)இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை, இயக்குனர் வித்யாதர் காகிட எழுதியிருக்கிறார் அவருடன் பிரதீஷ் வத்யம் இணைந்து எழுதி இருக்கிறார் சிறப்பாக இருக்கிறது
படத்தை நான் லீனியர் முறையில் சொன்ன வழியில் இந்த படம் அதிகமாகவே கவனமாக பெறுகிறது
(12) சங்கர் எனும் அகோரி ,உமா எனும் எட்டுவயது சிறுமி, ஆய்வகம் ஒன்றில் வதைபடும் 18 வயது இளைஞர் இந்த மூவர் மனிதர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடுத்தடுத்து காட்டுகிறார்கள் இந்த கேள்விக்கான பதில் திரைக்கதையில் வருகிறது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் ஏதோ ஏதோ இடங்கள் நடப்பது போல தோற்றம் இருந்தாலும் மூன்று கதாபாத்திரங்கள் ஒரே புள்ளியில் ஒன்றாக எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை வெற்றி படமாக தந்து இருக்கிறார் இயக்குனர்
இந்த படத்தில் தாயின் அன்பு, குழந்தையின் ஏக்கம், காற்று சுவாசிக்க ஏங்கும் வேட்கை,என அடிப்படையான மனித உறவுகளை தப்பிக்க நினைக்கும் போராளி, இப்படி பல சுவையான அம்சங்களை தந்துள்ளார் இயக்குனர் வாழ்த்துக்கள்
பல இடங்களில், மௌனம் திரைக்கதையில் விறுவிறுப்பு,என புதுமையான முயற்சியில் இயக்குனர் வித்யாதர் காகிட தெலுங்கு மசாலா படங்களின் இலக்கணத்தை உடைத்து புதுமையான வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார்
இன்டர்வல் பிளாக் காட்சி அருமையாக இருக்கிறது பரபரப்பாக இருக்கிறது மூன்று கதைகளும் மூன்று பேரும் எப்படி தப்பிப்பார்கள் என்ற பரபரப்போடு நின்றால் பிளாக் முடிகிறது. மொத்தத்தில் இந்த காமி திரைப்படம் வித்தியாசமான புதுமையான முயற்சி கண்களுக்கு குளிர்ச்சி கவர்ச்சி ஏதும் இன்றி ஆடல் பாடல் எதுவும் இன்றி மனதை தொடும் ஒரு நல்ல படைப்பு
