‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது…..

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், ” விஜய் ஆண்டனி ரொம்ப எளிமையானவர். அன்பாகப் பழகுவாரு . இந்த படத்தோட நிகழ்வுக்குக் கூப்பிட்டாங்க. முதல்ல வரமுடியாதுனு நினைச்சு மெசேஜ் போட்டேன். முருகதாஸ் சார் படத்தோட ஷூட் துரைப்பாக்கம்ல நடக்குது. அங்க இருந்து இந்த இடத்துக்கு சரியான நேரத்துக்கு வரமுடியாதுனு நினைச்சேன் . ஆனா, இன்னைக்கு ஷூட் தள்ளி போயிடுச்சு.அதுனால உடனே இங்க வந்துட்டேன். இந்த மிகப்பெரிய படத்துல நானும் ஒரு பங்காக இருப்பதுல மகிழ்ச்சி.” என்றார்.

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விநாயக் வைத்தியநாதன். இவரின் தந்தை வைத்தியநாதனும் பல ஆண்டுகளாக சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்திற்கும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அவர் பேசுகையில், ” தமிழ் சினிமாவுல கதையை முக்கியமாக தேடுற ஹீரோ, விஜய் ஆண்டனி . அவர் எங்க குடும்பத்துக்கு ஒளி விளக்கு. நான் 30 வருஷமா சினிமாவுல உதவி இயக்குநராக இருக்கேன். விஜய், அஜித்துக்கு எல்லாம் கதை சொல்லியிருக்கேன். என் மகனோட குறும்படங்களை எல்லாம் பார்த்துட்டு விஜய் ஆண்டனியே என் பையன்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார்.

அதுனால தான் அவரை எங்க குடும்பத்தின் ஒளி விளக்குனு சொன்னேன். என் பையன் அவருக்கு கதை தயார் பண்ணி அனுப்பினான். அவர் காலைல மூணு மணிக்கு ‘கதையை படிச்சுட்டேன்’னு மெசேஜ் பண்ணாரு. அவருக்கு வேலையை தவிர எதுவும் தெரியாதான்னு நினைச்சேன்.” என கூறினார்.

இவரை தொடர்ந்து பேசிய நடிகை மிருணாளினி ரவி,” எனக்கு இந்த படம் ஒரு வாய்ப்புங்கிறதைத் தாண்டி பெரிய பொறுப்பு. விஜய் ஆண்டனி சாரோட இந்த பயணம் சிறந்த அனுபவமாக அமைஞ்சது. நான் இந்த படத்துக்குதான் முதன்முதல்ல டப்பீங் பண்ணியிருக்கேன். இந்த படத்தோட கதையைக் கேட்கும்போது என் வாழ்க்கையோட சாரம் இந்த கதையில இருந்துச்சு. நான் இந்தப் படத்தோட கதையை கேட்டப்போ எனக்கு ரொம்ப கனெக்டாச்சு.” என்றார்.

இறுதியாக வந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ” நல்ல திறமையான இயக்குநரை இந்த துறைக்குள்ள அறிமுகப்படுத்தியிருக்கேன்னு ரொம்ப பெருமையை இருக்கு. தலைவாசல் விஜய சாரை ‘நீலா மாலா’ சீரியல்ல இருந்து தொடர்ந்து பார்த்திட்டு வர்றேன். மிர்ணாளினியும் நானும் நிறைய விஷயங்கள் ஷூட்டிங்ல பேசிப்போம். இந்த படத்துக்கான ப்ரோமோஷனுக்காக நம்மள பத்தி ‘கிசு கிசு’ பண்ணுவோமான்னுலாம் யோசிச்சோம்.” என சிரித்தவர், “காதலர்கள், கணவன்-மனைவி எப்படி இருக்கனும்னு இந்த படம் சொல்லும்.” என முடித்துக் கொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். செய்தியாளர் ஒருவர் இப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள விஷயங்களை குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ” ‘ஆண், பெண்’னு வேறுபடுத்தாதீங்க. நமக்கு இருக்கற மாதிரியான விஷயங்கள்தான் பெண்களுக்கும். நம்ம மது குடிச்சா பெண்களும் குடிக்கலாம். நான் குடியை ஆதரிக்கவில்லை. ஆண்களை மது குடிக்க வேண்டாம்னு சொன்னால் அது பெண்களுக்கும்தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் சோமபானம் என இருந்தது.” விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கலையா? எனக் கேட்டதாக சர்ச்சை வெடித்தது. விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிருஸ்தவ சபையினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். . கிசுகிசு தேவை: நடிகர்களை பற்றிய கிசுகிசுக்கள் தேவை தான் என்றும் நடிகர்களை பிரபலமாக்க பத்திரிகையாளர்கள் ரொம்பவே போராடி வருகின்றனர் என்றும் விஜய் ஆண்டனி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். மேலும், ஹீரோயின் ஏன் குடிக்கிறாங்க நீங்க அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீங்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த நிலையில் தான் இந்த சர்ச்சை வெடித்தது. சரக்கடிப்பது போல ஏன் வைத்தீர்கள் என கேட்கப்பட்டதுகிறிஸ்தவ சபை கண்டனம்: விஜய் ஆண்டனி தனது படத்தின் புரமோஷனுக்காக ஏசுவை இழிவுப்படுத்தி ஏன் பேச வேண்டும் என்றும் இப்படி பேசுவது தவறான ஒன்று என்றும் இதற்கு அவர் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கிறிஸ்துவ சபையில் இருந்து விஜய் ஆண்டனிக்கு கண்டனம் பறந்தது. விஜய் ஆண்டனி விளக்கம்: இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ” அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம்.. நான் முன் தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசுபிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறியிருந்தேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தம் படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.” என பதிவிட்டுள்ளார்.