ரெபெல் திரைப்படம் திரை விமர்சனம்

இயக்குநர் நிகேஷ் கனவு. இந்திய சினிமாவின் ரெபெல்

ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது. இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு சூப்பர்

ரெபல் விமர்சனம் பார்க்கலாம் வாங்க .அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் வந்த திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.

உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக வந்து இருக்கிறது இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் ‘அழகான சதிகாரி’ என்ற பாடல் ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை வேல்முருகன் பாடியுள்ளனர் மிகப்பெரிய வெற்றி பெறும் பாடல் அது

கதை களம்

மூணாறில் இருந்து படிப்பதற்காக பாலக்கோடு கேரளா செல்லும் இளைஞர்கள் 1980 -83 பேஜ்களில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை சொல்கிறது இந்த படம்
படம் ஆரம்பித்தவுடன் மூணார் பகுதியைதமிழ்நாட்டில் ஏன் இணைக்கவில்லை என்ற முன்னுரையோடு ஆரம்பிக்கிறார்கள்
அதன் பிறகு அங்கு வாழும் மக்கள் தேயிலை தோட்டத்தில் அட்டைப் பூச்சி கடித்து மிகவும் சிறமப்பட்டு ஒரு நாளைக்கு 80 கிலோ தேயிலை பறித்து வந்து எடை போட்டால் 12 ரூபாய் வருமானம் என்று மிகவும் கனத்த காட்சிகளோடு படம் ஆரம்பிக்கிறது
அந்த ஊரில் இருந்து இளைஞர்கள் படித்து பெரிய வேலைக்கு செல்ல மாட்டார்களா? என்ற பெற்றோர்களின் கனவு மனதில் ஏற்பட ஜிவி பிரகாஷ் காட்டுகிறார்கள் அவரும் அவருடைய நண்பர்களும் கேரள கல்லூரியில் கல்வி கட்க செல்கிறார்கள் காலேஜுக்கு போகும் போது ஜாலியாக தான் இருக்கிறது ஆனால் அங்கு வில்லன் இவர்களை ராகிங் என்ற பெயரில் டார்ச்சர் செய்யும் போது ஜி வி பிரகாஷ் எப்போது அந்த வில்லனை அடிபார் என்ற கேள்வி எழுகிறது
நாயகி தென்றலாய் வந்து ஜிவி பிரகாசுக்கு மனதுக்கு மருந்தை தடவுகிறார் நண்பர்களை வில்லன் ஒவ்வொரு முறை டார்ச்சர் செய்யும் போதெல்லாம் நாயகி இனிமையாக பேசி ஜீவியின் கோபத்தை கட்டுப்படுத்துகிறார் கல்லூரியில் நீல கொடி சிவப்பு கொடி என்று மலையாளிகளுக்குள் இரண்டு கோஷ்டி அந்த இரண்டு பேரையும் ஜி வி பிரகாஷ் எதிர்த்து கல்லூரியில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான்
கதை முதல் பாதி காதல் பின் பாதி மோதல் என விறுவிறுப்பான கதைக்களம் ரசிக்க வைக்கிறது
கனத்த இதயத்தோடு கேரளாவில் கல்லூரி யில் நடப்பதாக காட்டப்படும் அந்த காட்சிகள்.
தமிழர்கள் கொத்தடிமை கூட்டம், பாட்டாளி மக்களின் ரத்தத்தை உறியும் சைத்தான்கள், சிவப்பு கொடி, புரட்சி இவையெல்லாம் படம் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்த்துகிறது. ஜி.வி.பிரகாஷை ‘தமிழுக்காகவே போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்’ என்று சொல்லும் படி ஆக்ரோஷமாக காட்டுகிறார்கள். சமூக அக்கறையும், மக்கள் பிரச்சினைகளையும் அடிப்படையாக கொண்டுஇப் படம் உருவாகி உள்ளது ஜி.வி.பிரகாஷ் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கோவக்கார இளைஞனாக காதலியை கண்டதும் ஆனந்த கூத்தாடுவது நண்பர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டுபொங்கிஎழுவது செல்வராஜ் இறந்த பிறகு கதறி அழுவது எப்படியாவது அந்த கல்லூரியில் படிக்க வரும் தமிழ் மாணவர்களுக்கு இனிமேல் எந்தவித கஷ்டமும் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு காய் நகர்த்துவது
இப்படி எல்லா இடத்திலும் ஜிவி பிரகாஷ் ஸ்கோர் செய்து உள்ளார்
கதிர் என்ற கதாபாத்திரம் கல்லூரி தலைவனாகவும் வரும் ஜிவி பிரகாஷுக்கு கட்சிதமாக அதிகமாக பொருந்தி போகிறது

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்ககியுள்ளார் அருமையான கதைக்களம் விறுவிறுப்பான திரைக்கதை எந்த கேரக்டரும் சோடை போகாமல் கவனமாக கையாண்டு இருக்கிறார் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இந்த இயக்குனருக்கு உண்டு ஒரு நல்ல கதையை தேர்வு செய்து அவருக்கு நமது பாராட்டுக்கள். பிரேமலு படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட கனவு நாயகி மமிதா பைஜூ, ராஜா சார் இசையை பாடிக் காட்டும் போது ஆகட்டும் ஜிவி பிரகாசுக்கு அநியாயம் நடக்கும் போது ஆதரவாக நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்லூரியில் போட்டியிடும் போதும் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார் இளமையான முகம் பேசும் கண்கள்

ஜிவி பிரகாஷ் செந்தாழம் பூவில் பாடல் பாடும் போது மலரும் அந்த முகம் கல்லூரியில் ஜிவி பிரகாசுக்கு கிளாஸ் ரூம் வழிகாட்டுவது என எல்லா காட்சிகளிலும் இவர் வெழுத்து வாங்கி இருக்கிறார் அருமையான நடிப்பு

கருணாஸ், கல்லூரியில் பேராசிரியராக வந்து தமிழ் படிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கிறார் பொறுமையாக இருங்கள் என்று அட்வைஸ் செய்கிறார் அதேசமயம் தமிழ் இளைஞர்களுக்கு வழியும் காட்டுகிறார் சிறப்பு.

ஜிவி பிரகாஷின் அப்பாவாக வரும் சுப்பிரமணிய சிவா, அந்த கதாபாத்திரத்தோடு பொருந்தி போகிறார் மூணாறில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் மக்களின் லீடராக வரும் இவர் நடிப்பு பண்பட்ட நடிப்பு

மலையாள வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி,
இருவரும் சூப்பர்

ஜிவி பிரகாஷின் நண்பராக செல்வராஜ் என்ற கதாபாத்திரத்தில் சாக்கடை அள்ளும் அப்பாவுக்கு மகனாக வந்து படிப்பதற்கு ஏங்கும் கதாபாத்திரம் வில்லன்கள் ராக்கிங் என்ற பெயரில் அவரை கொடுமைப்படுத்தும் போது நமது மனம் அடடா என்று அவர் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது பாத்ரூமுக்குள் வில்லன்கள் இவரை புரட்டி புரட்டி உதைக்க இவர் அஞ்சி ஒடுங்குவது காட்சி சிறப்பாக இருக்கிறது ஆதித் ய பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்

கல்லூரி வினோத், இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் நண்பராக வருகிறார் பாண்டி என்றால் என்ன என்று புரியாமல் இவர் விழிக்கும் காட்சியாகட்டும் ஜி வி பிரகாசும் கல்லூரி வினோத்தும் சென்று தன் நண்பனை கொன்றவர்களை மட்டையில் அடித்து தாக்கும் காட்சியாகட்டும் படம் முழுக்க ஜீவி பிரகாசுக்கு கை கொடுத்து உதவி இருக்கிறார் கல்லூரி வினோத்

ஆதிரா இவர் ஜிவி பிரகாஷ் அம்மாவாக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்மணியாக வருகிறார் எப்படியாவது தன் மகன் படித்து நம்மையெல்லாம் கரைசேர்த்திட மாட்டானா என்று ஏங்கும் இவர் நடிப்பு சபாஷ் வாங்குகிறது

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அருமையான ஒளிப்பதிவு மூணார் தோட்டத்தை காட்டும் போதும் கேரளாவில் அந்த கல்லூரியில் நடக்கும் திகில் சம்பவத்தை காட்டும் போதும் ஜிவி பிரகாஷ் மம்தாவின் காதலை காட்டும் போதும் கேமரா கோணம் பளிச்சிடுகிறது ஒவ்வொரு காட்சிகளும் நன்றாக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியைத் தருகிறது

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அதிரடியான இசை இனிமையான பாடல்கள் விறுவிறுப்பான திரை கதைக்கு ஏற்ற பின்னணி இசை என ஜிவி பிரகாஷ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இசையாலும் நடிப்பாலும் கட்டி போட்டி ருக்கிறார்ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் அதிரடியாகவும் நம்பும் வண்ணமும் அருமையாக பொருந்தி இருக்கிறது 200 பேர் ஜிவி பிரகாஷ் அடிக்கிறார் என்றால் நம்ப முடியாமல் இருக்கும் ஆனால் அதற்காக அவர் செய்யும் தந்திரம் தான் ரசிக்க வைக்கிறது ஆக்சன் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்

வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படத்தை எந்த இடத்திலும் லேக் ஆகாமல் கவனமாக செதுக்கி இருக்கிறார் காட்சிகள் ஒவ்வொன்றுமே விறுவிறுப்பாக இருப்பதற்கு படத்தொகுப்பாளர் மிகவும் உழைத்திருக்கிறார்

படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

தமிழன் அடிமைப்பட்டுக் கிடந்தது போதும்
என பொங்கி எழுவது அந்த இடத்தில் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது

: பேணா எடுத்து கொண்டு காலேஜ் போக வேண்டிய காலம் இது வல்ல

நாயகி பரதம் ஆட ஜீ வீ செந்தாழம்பூவில் பாட
செம சீன் : இளமை துடிப்புள்ள காட்சிகள்

தேயிலை தோட்டத்து மக்கள் மூட்டைகளை சுமந்து கொண்டு வரும் மக்கள்
அவர்கள் படும் சிரமங்கள் அடடா!

இது தமிழர்களுக்கான உணர்வு போராட்டமான படம் 1980 காலங்களில் இப்படி எல்லாம் மக்கள் சிரமத்தை அனுபவித்து தான் படித்திருக்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது

இயக்குனரிடம் தற்போது மஞ்சுமேல் பாய்ஸ் ,ப்ரேமலு போன்ற படங்கள் இங்கு நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்திருப்பது தேவை தானா என்று கேட்டபோது அவர் அந்த படம் எல்லாம் வரும் முன்னே முதலிலேயே நாங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம் மஜ்மல் பாய்ஸ் ப்ரேம்ல படம் தற்போது தான் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதற்கும் எதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எந்த பிரச்சினையும் இல்லை என்று பதில் சொன்னார் கூலாக பொதுவாகவே மலையாளிகள் தமிழர்களை கொஞ்சம் மட்டம் தட்டி தான் படம் எடுப்பார்கள் அதை எந்த சினிமாவும் இதுவரை கேட்டதில்லை காரணம் வணிகம் கேரளாவிலும் படம் ஓட வேண்டும் என்ற சமரசத்தினால் போய் விடுவார்கள் சில இயக்குனர்கள் ஆனால் மிகவும் எந்த சமரசம் இல்லாமல் தன் நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உலகத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இனிமேலும் தொடர்ந்து தமிழர்கள் எங்கெங்கு எங்கள் பாதிக்க படுகிறார்கள் அதெல்லாம் பதிவு செய்யப்படும் என்று நினைக்கிறோம் ரெபெல் என்றால் புரட்சியாளன் தமிழனுக்காக புரட்சி செய்த ஜிவி பிரகாஷ் இனி ரெபல் ஜிவி பிரகாஷ் என்று அழைக்கப்படுவார் அந்த அளவுக்கு அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
தயாரித்த ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குனருக்கும் இதை ஒருங்கிணைத்த தனஞ்ஜெயன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிக் கொள்ளலாம் ஒரு வெற்றி படத்திற்கான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது புரட்சியாளர்கள் என்றுமே சோடை போனதில்லை வெற்றி பெற்றிருக்கிறார்கள் அதுபோல இந்த படமும் சரித்திரத்தில் இடம்பெறும் வெற்றி மகுடம் சூடும்
: சபாஷ் டைரக்டர்

1 இயக்குநர் ஒரு வித்தியாசமான பாணியிலான காட்சி அமைப்பை பயன் படுத்தி இருக்கிறார்.அதாவது நாயகன் தங்கள் அப்பா அம்மாவும் கல்லூரி க்குவரவைக்க ஃபிளாஸ்பேக்கில் என்ன நடந்தது என்பதை ஆடியன்சுக்கு புரியும்படியாக காட்சியாக விவரித்த விதம் செம

2 ஜீ வீ – மம்தா பைஜ் இருவருக்குமான கெமிஸ்ட்ரி குட் .

3 கடைசி அரை மணி நேர திருப்பங்கள் கொண்ட திரைக்கதை , எடிட்டிங் அட்டகாசம்

ரசித்த வசனங்கள்

1 இந்த உலகத்தில்
யாரும் யாருக்கும் அடிமை இல்லை

2 ஒருவன் வாழ்வில் எவ்வளவு தான் மோசமான நிலைமைக்குப்போனாலும் அவன் வாழ்வில் காதல் என்று ஒன்று வந்து விட்டால் அது தரும் உத்வேகம் ஆனது அவனை வாழ்வின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் வல்லமை கொண்டது
உபயம் இளையராஜா சார் பாடல்

3 சாக்கடை அள்ளுபவன் மகன் படிக்க கூடாதா

4 போராட்டம் நடத்தினால் தான் வாழ்வில் மறுமலர்ச்சி கிடைக்கும்

5 செல்வராஜ் தாய் கதறும் அந்த காட்சி கதிர் நீயும் கூடத்தான் இருந்தே

எப்படி என் மகன் சாக விட்டாய் என்று அந்த கூக்குரல் இன்னும் கேட்கிறது

6 இரண்டு மலையாள குரூப்பும் தமிழர்கள் ஓட்டு நமக்கு தான் என்று ஜிவி பிரகாசிடம் அணுகும் போது அவர் நாம் புதிய அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்கிறார் அந்த காட்சி திருப்பம்

7 ஓணம் பண்டிகையின் போது சீனியர் மட்டும் தான் வேட்டி கட்ட வேண்டும் என்ற சித்தாந்தம் தெரியாமல் ஜிவி பிரகாசம் அவர் நண்பர்களும் கெத்தாக வேட்டி கட்டி கொண்டு வர வில்லன் அவர்களை சேற்றில் புரட்டி அரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் இடம் கொதிக்க வைக்கிறது

8 கல்வியின் அவசரத்தை இந்த படம் உணர்த்துகிறது எங்கே எது நடந்தாலும் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் உன் தாய் தந்தையை காப்பாற்ற முடியும் தேயிலைத் தோட்டத்தில் அட்டைப் பூச்சி கடித்து ரத்தம் கக்கும் அந்த தாய் தந்தையரை நினைத்து உன் கல்வியை மட்டும் விட்டு விடாதே என்று கல்வியின் அவசியத்தை உணர்த்துகிறது

9 ஹோஸ்டலுக்குள் புகுந்து ஒவ்வொரு கதவையும் பூட்டிவிட்டு தன் நண்பனை கொன்றவர்களை ஜீவி பிரகாஷ் துவம்சம் செய்யும் இடம் தியேட்டரில் பயங்கரமான கரவொலி

10 அதே கல்லூரியில் படிக்கும் திவ்யா என்ற தமிழ் மாணவி ஆண்டு விழாவில் நடனம் ஆடும் பொழுது அவரது உள்ளாடையை உருவி நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் அந்த மலையாளிகளை ஜீவி அடித்து நொறுக்குவது அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவது அருமையான காட்சி

11 மேற்குத் தொடர்ச்சி மலை படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்த படத்தில் சீனியராக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்

12 தான் போலீஸிடம் மாட்டி அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தினாலும் இந்த கல்லூரியில் நடக்கும் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜிவி பிரகாஷ் போடும் அந்தத் திட்டம் பலே

13 தமிழர்கள் வீரத்தை இனிமேல் பார்ப்பார்கள் என்று ஜி வி பேசும் வசனம் கிளாப்ஸ்

14 கம்யூனிசம் என்றால் சமத்துவம் ஏழைகளுக்கு உதவுவது என்ற சித்தாந்தத்தை உடைத்து அவர்களும் குஸ்தியில் இறங்குவது கவலை கொள்ள வைக்கும் காட்சி

15 மலையாள குரூப் இருவர்க்கும் இடையே எப்பவும் ஒரே டீலிங் தான்

16 பிரச்சனைகளைக் கண்டு ஓட துவங்கினால் நம்மை துரத்திக் கொண்டே தான் இருப்பார்கள். எதிர்த்து நிற்க வேண்டும் என்று கிளைமாக்ஸ் காட்சியில் துணிச்சலாக களம் இறங்கும் ஜிவி பிரகாஷ் குரூப் சூப்பர்

மொத்தத்தில் இந்த “ரெபல்” துணிச்சல் மிக்கவன்

4/ 5  . ரேட்டிங்