ரோமியோ “திரை விமர்சனம்

ஃபேமிலி லவ் & சென்டிமென்ட் - ரேட்டிங் 4/5

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவான ரோமியோ திரைப்படம் இன்று அதிகபட்சமாக 1200 ஸ்க்ரீன்களில் வெளியாகி இருக்கிறது. . படமும் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது வாழ்த்துக்கள்.

படத்தின் கதை களம் என்ன?

அறிவு (விஜய் ஆண்டனி) குடும்பத்தின் கடன் சுமை காரணமாக வெளிநாட்டில் பணி புரிகிறார். மிக முக்கியமான விஷயம் அவர் 35 வயது வரை காதல் வராமல் உள்ளார். மலேஷியாவில் காதலர்களைப் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி அடைகிறார் .

சென்னையில், சினிமாவில் கதாநாயகியாகும் கனவோடு வாழ்ந்து வருபவர் லீலா (மிருணாளினி). அவரைப் போலவே சினிமா கனவோடு இருக்கும் நண்பர்களுடன் வசித்து வருகிறார். பெற்றோர்களிடம் ஐ.டி.யில் வேலை செய்வதாகக் கூறி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறார்.
அவருக்கு எப்படியாவது கதாநாயகி ஆகி தெருவெங்கும் தன்னுடைய பேனர் வைத்து பார்த்துவிட வேண்டும் என்று ஆசை அந்த கனவில் மண்ணள்ளிப் போடுகிறார் அவரது தந்தை தலைவாசல் விஜய்

இந்த நிலையில் தனது காதலைத் தேடி அறிவு இந்தியா திரும்புகிறார். காதல் வந்த பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டும் என விரும்பும் கதாநாயகன்,
அவரை திருமணம் செய்து கொள்ள தாயும் தந்தையும் அவரது மாமா மூவரும் வற்புறுத்துகிறார்கள் தனக்கு பிடித்த பெண் வரும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி

ஒரு துக்க வீட்டில் லீலாவைப் பார்க்கிறார்.
அப்போது அவருக்குள் காதல் துளிர் விடுகிறது அந்த காதல் வெளிச்சம் அவரை உருக வைக்கிறது

அவர்கள் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு நடக்கிறது.
சென்னையில் தனிக்குடித்தனம் போகிறார்கள் அங்கே போன பிறகு எப்படி இருக்கிறது இவர்கள் வாழ்க்கை…..

அதன் பிறகு இருவரும் இணைகிறார்களா, அறிவு லீலாவின் காதலை பெற்றாரா என்பதே கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகள் மற்றும் மனைவியிடம் சகித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் ஆண்டனி.
கதாநாயகி மிர்னாலினி நடிப்பில் குறை எதுவும் இல்லை. முழு கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த நடித்த நடிகர், நடிகைகளும் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.

மனதை தொடும் கதைக்களத்தை, அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன்

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவரும் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ் மட்டும் செட் ஆகாத ஒன்றாகவே இருந்து வந்தது. அதை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு அவர் நடித்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.
அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்

இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி
வித்தியாசமான திரைக்கதை மனைவியை எப்படி அன்பு வளையத்தில் கொண்டுவர துடிக்கும் கணவன் அந்த மனைவியின் மாறுபட்ட உளவியல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அதை ஒரு கணவரால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் இப்படி எல்லா விஷயத்தையும் உள்ளே கொண்டு வந்து தங்கை என்ற ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி மனதை உருக வைத்து விடுகிறார் கிளைமாக்ஸ் காட்சிகள் அண்ணனும் தங்கையும் சந்திக்கும் இடம் அவ்வளவு அற்புதம்

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி,யுடன் விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி என பலரும் நடித்துள்ளனர்

பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்
பாடல்களும் பின்னணி செய்யும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது

இப்படத்தில் ஃபரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் வரும் மலேசியா காட்சிகளும் சென்னையில் விஜய் ஆண்டனியின் வீடும் அவ்வளவு ரிச்சாக இருக்கிறது சென்னையை புதுசாக காட்டியதில் ஒளிப்பதிவாளர் கைவண்ணம் மிளிர்கிறது

இந்த படத்தை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்திருக்கிறார் அவருக்கு இது வெற்றி படமாக அமைந்திருக்கிறது காமெடி நடிப்பும் மனைவி மேல் உருகும் அந்த கதாபாத்திரமும்மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது

. (1விக்ரம் என்று விஜய் ஆண்டனி பேச லீலா விக்ரமை விரும்புகிறார் என்று சொல்லும் கதை புதுசு).

(2மனைவிக்காக கணவன் படம் தயாரிப்பது இந்த படத்தில் புதுசு)

(3யோகி பாபு வரும் காட்சிகள் படத்திற்கு கலகலப்பை ஏற்படுத்துகிறது)

(4லீலாவிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் தயாரிப்பாளரை விஜய் ஆண்டனி செருப்பால் அடிக்கும் காட்சி இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல தோன்றுகிறது).

மொத்தத்தில் இந்த ரோமியோ பாஸ் மார்க் வாங்கி வெற்றியும் பெறுகிறார்