“ஒரு நொடி” தமிழ் சினிமா விமர்சனம். 2024

 (கிரைம் & திரில்லர், சஸ்பென்ஸ்) ரேட்டிங் 3-7/5.

தமன் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம்”ஒரு நொடி” இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்
படமாக வந்துள்ளது ரசிகர்களை கவரும் வண்ணம்

எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பாலா ,. கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீ ரஞ்சினி மற்றும் குரு சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .

இப்படத்தின் ஒளிப்பதிவு கே.ஜி.ரதீஷ், படத்தின் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமான கோணங்களில் படமாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் & ஒளிப்பதிவாளர்

இசை சஞ்சய் மாணிக்கம்,
பாடல்களுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் பின்னணி இசை யில் ஸ்கோர் செய்துள்ளார். சஸ்பென்ஸ், திரில்லர், படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை இவர் உணர்த்தும் வகையில் இசையை கொடுத்திருக்கிறார்

படத்தொகுப்பு எஸ்.குரு சூர்யா.
கச்சிதமாக இரண்டு மணி நேரத்திற்கு விறுவிறுப்பாக படத்தொகுப்பு இருக்கிறது

அறிமுக இயக்குனர் மணிவர்மன் ,ஒரு சஸ்பென்ஸ், திரில்லர், படத்தை எப்படி கொடுத்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ !அதை உணர்ந்து கதை எழுதி சிறப்பாக இயக்கி இருக்கிறார் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து படத்தை மிகவும் விறுவிறுப்பாக பரபரப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.. வாழ்த்துக்கள்

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வெள்ளை விளக்கு பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள் . இது
ஒரு வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது

நமது வாழ்க்கை யில் ஒரு நொடி என்பதை சாதாரணமாக நினைக்கி றோம். ஆனால், அந்த ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தப் படத்தில் அப்படி ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன? என்பதுதான் கதை.
யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்

கிரைம் கதை என்றாலும் ஒரு கிரைம் படத்துக்குள் வழக்கமாக இருக்கும் காட்சிகள் இதில் இல்லாமல்திரைக்கதை வித்தியாசமாக அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் .

. இந்தப் படத்தில் ஹீரோயின் கிடையாது. இரண்டு மணி நேரம்ஓடும் இந்தப் படத்தில் பாடல்கள் அதிகம் இல்லை மொக்கையான காமெடி இல்லை ஆறுதலான விஷயம்

காணாமல் போன எம். எஸ் .பாஸ்கர் கிடைத்தாரா? இல்லையா? அவர் கொண்டு சென்ற 8 லட்சம் பணம் என்ன ஆனது ?மதுரையில் தாதாவாக இருக்கும் வேலா ராமமூர்த்தியும், சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பழ. கருப்பையாவும் , எம் .எஸ். பாஸ்கருக்கும், என்ன தொடர்பு? என்ற கோணத்தில் படம் ஆரம்பித்து ஜெட் வேகத்தில் பறக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நொடியும், அடுத்து என்ன ? என்று விருவிருப்பாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்.

எம் எஸ் பாஸ்கரின், மனைவி ஸ்ரீரஞ்சனி தன் கணவனை காணவில்லை என்று அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக படம் தொடங்குகிறது அதற்கு பிறகு, மனிதநேயம் உள்ள காவல்துறை அதிகாரி பரிதி இளமாறன் மனிதநேயத்தோடு அந்த பிரச்சினையை கையில் எடுக்கிறார்
படமும் எதிர் பார்ப்பில்

எங்கே போய் இருப்பார்? எம் .எஸ். பாஸ்கர் என்று விசாரணையை துரிதப்படுத்துகிறார்
தமன் குமார் ஒவ்வொருவராக குற்றவாளி யார் என்று…..தேடத் தேட…. கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்!

அதன் பிறகு முட்டி மோதி இவர் தான் கொலை காரன் என்று காட்டும் போது
ஆச்சரியமாக இருக்கிறது!

ஒரு வெற்றி படத்துக்காக தேவையான எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. மலையாள சினிமாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் இதுபோல தரமான தமிழ் சினிமாவை கொண்டாடத் தொடங்கினால், நிச்சயம் நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும்.

‹›பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். இவர் ஒரு படத்தை ஜட்ஜ்மெண்ட் செய்து, நன்றாக இருக்கும் என்று யூகித்தால், அந்த படம் நிச்சயம் ஏமாற்றாது !அந்த வகையில் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் அவர் கணிப்பு நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.

தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் நடிப்பு கம்பீரமாக இருக்கிறது மனிதநேயம் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருப்பாரோ அதை நிஜத்தில் பிரதிபளித்திருக்கிறார் உறுதியான பார்வை கனத்த குரல் யோசிக்கும் திறன் என நடிப்பில் புதிய பரிமாணத்தை கொடுத்து இருக்கிறார் தமன் குமார்

எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி யிடம் மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் அவமானப்பட்டு பணத்துக்காக அங்கேயும் இங்கேயும் அழைந்து இடத்தை மீட்கும் போராட்டத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்

வேலா ராமமூர்த்தி இந்த படத்தில் மதுரை தாதாவாக ஏழைகள் சொத்துகளை ஆட்டய போடும் அதிகார வர்க்கத்தின் அல்லக்கை ஆக அதிரடி யாக நடித்து இருக்கிறார் சிறப்பாக இருக்கிறது அவரது நடிப்பு

பழ .கருப்பையா எம்எல்ஏவாக வந்து போலீசையே ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்தின் மையப் புள்ளியாக அலட்டலாக நடித்திருக்கிறார் அவர் வேடம் சிறப்பு சரியான தேர்வு

ஸ்ரீரஞ்சனி எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக கணவன் காணாமல் போக பரிதவிக்கும் நடிப்போடு எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று தமன் குமாரிடம் கெஞ்சும் காட்சிகளில் உருக வைத்து விடுகிறார்

தீபா சங்கர் உருட்டும் மிரட்டலான கண்களோடு மகளை இழந்த சோகத்தோடு கத்தி கதறும் போது சோதனை..

: தயாரிப்பாளர் அழகர் சிறப்பாக நடித்திருக்கிறார் சாதி சனம் ,ஊர் உறவு இவர்களோடு ஒன்றாக வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்று அவர் பேசும் டயலாக் சூப்பர்!

தீபாவின் மகளாக வரும் நிகிதா புன்னகை அரசி
தாய் தந்தையிடம் அன்பு காட்டும் போதும், ஜுவல்லரியில் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை, மறைப்பது என சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் கை வண்ணம் அசத்தலாக இருக்கிறது காவல் நிலையம் ,தமன் குமார் ,வீடு என எல்லா இடங்களிலும் சிறப்பாக இருக்கிறது

படத்தில் பணி புரிந்த, காஸ்ட்யூமர், ஒப்பனையாளர் கலர் கரெக்ஷன்,DI என எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

மொத்தத்தில் இந்த ஒரு நொடி, வாழ்க்கையில் தவறு செய்தவர்கள் அதை திருத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் தவறு செய்துவிட்டு வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்
என்ற படிப்பினையோடு, ஒரு பாடத்தை கொடுக்கும், சமூக சிந்தனை உள்ள தரமான வித்தியாசமான, திரைக்கதையில், இந்த படம் வெற்றிப் பாய்ச்சலோடு படம் பார்ப்பவர்களை பரவச படுத்தும்