ரத்னம் ” தமிழ் சினிமா விமர்சனம்

(ஆக்ஷன் ,& அதிரடி )ரேட்டிங் 3/5-5

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ள ரத்னம். படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம் …….

வேலூரில் ரவுடியாக இருக்கும் ரத்னத்துக்கும் , ஆந்திராவில் தாதாவாக இருக்கும் ராயுடு வில்லன் களுக்கும் எப்படி மோதல் ஏற்படுகிறது இதன் நடுவே மல்லிகா என்ற பிரியா பவானி சங்கர் எப்படி மைய புள்ளியாக தொடர்பு படுத்தப்படுகிறார்.. இதுதான் ஒன் லைன்

மெயின் கதை…….
சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும் சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார். நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார்.
அவர் ஆரம்பமாகும் காட்சியே அதிரடியாக இருக்கிறது ஒரு பள்ளி மாணவியை தொட்டவணை கையை வெட்டும் அதகள காட்சி யோடு ஆரம்ப மாகிறார் விஷால் தனக்கு நெருக்கமான ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார். எந்த லாஜிக் பார்க்காமல் விஷாலின் அதிரடி ஆக்ஷனை ‘ரத்னம்’ படத்தில் பார்த்து ரசிக்க முடிகிறது. அந்தளவிற்கு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

ஹீரோயின் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் . அதேபோல் சமுத்திரக்கனி, கெளதம் மேனன் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில்……
ரத்தினமாக விஷால்,
மல்லிகாவாக பிரியா பவானி சங்கர்,
பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக சமுத்திரக்கனி,
ராமச்சந்திர ராஜு,
கௌதம் வாசுதேவ் மேனன், மூர்த்தி யாக
யோகி பாபு ,
பீமா ராயுடுவாக முரளி சர்மா,
சுப்பா ராயுடுவாக ஹரீஷ் பேரடி ,மற்றும்
மோகன் ராமன்,
விஜயகுமார்,
ராஜேந்திரன்
ஜெயபிரகாஷ் ,வேதா நாயகம், வேட்டை முத்துக்குமார்,
துளசி ,ஒய் ஜி மகேந்திரன் ,என நட்சத்திர கும்பலே நடித்திருக்கிறார்கள்
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனரான ஹரி, நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ரத்னம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் மாஸ் ஹிட் அடித்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.இப்படமும்இவர்களுக்கு வெற்றி கூட்டணி யாக அமைந்துள்ளது
இயக்குனர் ஹரி இந்த படத்தில் செம ஹார்டு ஒர்க் செய்து இருக்கிறார் சன்டை காட்சிபடமாக்க பட்ட விதம் செம விறுவிறுப்பாக இருக்கிறது

இப்படத்தில் விஷாலுக்கு, ஜோடியாக
பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார் முன்னதாக சாய் பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, ஆகியோரிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது பிரியா பவானி சங்கர் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது
அவரின் சாந்தமான முகம் விஷாலை, கட்டுப்படுத்த துடிக்கும் நடிப்பு , பொறுமை எல்லாமே ரசிக்க வைக்கிறது

படம் ஆரம்பத்தில் ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அந்த காட்சி அற்புதமான முறையில் படமாக்கி விறுவிறுப்பான தொடக்கம்

அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி கூட்டணி இந்த கூட்டணி செம.. அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.
விஷால் ,அடிதடிக்கு ஏற்ற ஆறடி உயரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்

வேலூர் வரும் ப்ரியா பவானி ஷங்கர் விஷால் கண்ணில் பட படம் டாப் கீயரில் பறக்கிறது அவர் இங்கு நீட் எக்ஸாம் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.அது ஏன் என்பது படத்தின் டிவிஸ்ட்

விஷால் அவருக்கு பாதுக்காப்பு ஏன் கொடுக்கிறார். நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, நினைக்கும் ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் கும்பல் விஷால் உடன் மோதல் ஏன் , பிறகு விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படம் முழுக்க எட்டு சண்டை காட்சிகள் எட்டும் தனித்தனி ரகமாக ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டு இருக்கிறது விஷால் சண்டைக் காட்சிகளில் ,உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். அவருக்கு எமோஷனல் நன்றாக வருகிறது பிரியா பவானி சங்கர் குடும்பத்தை காப்பாற்ற துடிக்கும் போதும், வில்லன்களிடம் சவால் விட்டு உதார் காட்டும் போதும், நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.

ஒளிப்பதிவு அருமை புதிய கோணத்தில் சன்டை காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட விதம் அருமை.

DSP யின் இசை உயிரோட்டமாக இருக்கிறது பின்னணி இசை மிரட்டல், படத்தின் படத்தொகுப்பு ,அரங்க வடிவமைப்பாளர், மற்றும் காஸ்ட்யூமர், டி ஐ ,கலர் கரெக்ஷன், போன்ற பணிகளில் ஈடுபட்ட அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்

: யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் , காம்பினேஷன் ஒருவர் ஒருவர் திட்டிக்கொண்டு கலாய்க்கும் காட்சி கலகலப்பு

: பீமா ராயிடுவாக வரும் முரளி சர்மா நடிப்பில் மிரட்டுகிறார் வில்லனாக பார்வையாலே துவசம் செய்கிறார் ஒப்பனை செய்து கொண்டு களநிலவரத்தை கேட்டுக்கொண்டு அமைச்சர் முன்னாள் முனங வேட்டியை உருவி எரிந்து விட்டு ஆவேசப்படும் வில்லன் நடிப்பு அசத்தல் ரகம்

ஆளுங்கட்சி எம்எல்ஏவாக சமுத்திரக்கனி அவர் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷாலுக்கு ,படம் முழுக்க உதவி செய்து தோளோடு தோள் நின்று படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார் வெல்டன் சமுத்திரக்கனி
மற்றும் ஜெயபிரகாஷ் ,துளசி, விஜயகுமார், இவர்கள் பிரியா பவானி சங்கரின் அப்பா ,அம்மா, தாத்தாவாக ,வந்து படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்

மெடிக்கல் காலேஜ் கட்ட போராட்டம் நடத்தும் வில்லன் குரூப் அதிலிருந்து தப்பிக்கும் பிரியா பவானி சங்கர், அந்த ஐந்தரை ஏக்கர் நிலம் தான் பிரச்சனை கடைசியில் ஏழை குழந்தைகள் படிக்க பிரியா பவானி சங்கர் அரசாங்கத்துக்கு தானமாக எழுதி கொடுத்துவிட்டு போகும் இடம் சூப்பர்
: மொத்தத்தில் இந்த ரத்தினம் , ரத்தினமாகவே ஜொலிக்கிறது. ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு அசைவ விருந்து தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல மலையாளம் கர்நாடகா என எல்லா மொழிகளிலும் இந்த படம் வெற்றிவாகை சூடும் விறுவிறுப்பான திரைக்கதை, லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால், நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் .