அரண்மனை 4 திரை விமர்சனம் 2024(திரில்லர் &ஹாரார்) ரேட்டிங் 3-5/5.
அவ்னி சினி மேக்ஸ் (பி) லிமிடட் மற்றும் பென்ஸ் மீடியா (பி) லிமிடட் தயாரிப்பில் குஷ்பு சுந்தர் மற்றும் A.C.S. அருண் குமார் தயாரிப்பில்.. உருவான படம் அரண்மனை 4
இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில்.நடிப்பில .உருவாகியுள்ளது. மற்றும் ஹிப் ஹாப் தமிழா
இசையில்.. உருவான அனண்மனை 4 படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் E.கிருஷ்ண சாமி
ஒளிப்பதிவு அருமை புகுந்து விளையாடி உள்ளார் வெல்டன் ஒளிப்பதிவு.
பட தொகுப்பாளர் பென்னி ஒலிவர்
எடிட்டிங் ஷெம ஷார்ப் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதைக்கு எடிட்டிங் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
கலை இயக்குனர் சுரேன்
கை வண்ணம் அருமையான வேலை ப்பாடு அந்த அரண்மனை கடவுள் சிலை என் அசத்தி இருக்கிறார்.
ஸ்டண்ட மாஸ்டர் ராஜசேகர்
சண்டை அனல் பறக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமான செட்டிங் வேலை உயரமான இடத்தில் நடக்கும் சன்டை செம திரில் லிங் …
சுந்தர் C.
தமன்னா,
ராஷி கண்ணா,
சந்தோஷ் பிரதாப்,
ராமச்சந்திர ராஜு,
K.S. ரவிக்குமார் ,
டெல்லி கணேஷ்,
ஜெய பிரகாஷ்,
கோவை சரளா,
ராஜேந்திரன்,
யோகி பாபு,
VTV கணேஷ்,
கருடா ராம்,
சிங்கம் புலி,
தேவா நந்தா,
சஞ்சய்,
விட்சு விஸ்வநாதன்,
யாதின் சுரேகர் என பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார் கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்
தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் கணவன் மனைவியாக ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர். அங்கு வரும் தீய சக்தி சந்தோஷத்தை கொன்றுவிட்டு அவரது மகள் சக்தியை கொள்ளத் துடிக்கிறது தமன்னா தனது குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற போராடுகிறார் அந்த போராட்டத்தில் அந்த தீய சக்தி தமன்னாவையும் கொலை செய்கிறது தீடிரென இவர்கள் இருவரும் இறந்துபோக, அந்த செய்தி சுந்தர் சி க்கு தெரிய வர அவரின் அண்ணன் சுந்தர் சி, இந்த மரணத்தில் உள்ள முடுச்சுகளை அவிழ்க்கிறார். பின் என்ன ஆனது என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை…
தமன்னா செல்வி என்ற கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வருகிறார் நல்ல ஹோம்லியாக, அழகாக இருக்கிறார் தாயாக நன்றாக நடித்துள்ளார்
சாமியாருடன் பறந்து , பறந்து சண்டை போடும் சண்டைக் காட்சியில், ரோப் கட்டி சிறப்பாக நடித்திருக்கிறார் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் கிளாமராக வந்து இளைஞர்களின் இதயத்தை வருடிக் கொண்டு போகிறார் தமன்னா
: சுந்தர் சி சரவணன் என்ற வழக்கறிஞராக வந்து தங்கை மீது பாசம் கொண்டு அந்த அரண்மனையில் என்ன நடந்தது? அமானுஷ்யம் எதனால் அங்கு வருகிறது? ஒவ்வொருவராக ஏன் இரக்கிறார்கள் பத்து வருடத்திற்கு ஒருமுறை ஒரே தேதியில் ஒவ்வொருவராக இறப்பது ஏன்? சாமியார யார்? என்று கண்டு பிடிக்கிறார் குழந்தைகளிடம் பாசமாக இருப்பது, கோவை சரளா விடம் காமெடி, யோகி பாபு உடன் காமெடிஎன நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். அரண்மனை ஐந்து வருவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது
படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் அந்த சாமி பாடலில் சிம்ரன், குஷ்பு ஆடும் போது தியேட்டரில் கரகோஷம் ராசி கண்ணா, கவர்ச்சி நாயகி இல்லை. இந்த படத்தில் டாக்டராக நடித்திருக்கிறார் பொறுப்புள்ள டாக்டராக வந்து போகிறார் நல்ல வேலை சுந்தர் சிக்கும் ராஸி கண்ணாவுக்கும் காதல் என்று காட்டாமல் கண்ணியத்தோடு முடித்து இருப்பது பாராட்டுக்குரியது.

வி டி வி கணேஷ், யோகி பாபு, டெல்லி கணேஷ், சேசு, இவர்கள் காமெடிக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள் இவர்கள் உடன் கோவை சரளா, இவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் அதுவும் காருக்குள் யோகி பாபு பேயிடம் அடிவாங்கும் காட்சி தியேட்டரில் குழந்தைகளின் சிரிப்பொலி
கோவை சரளா, சேசு மேல் ஏறி அமர்ந்து கொண்டு மின்சாரத்தில் வி டி வி விக்னேஷ் கத்தி சிக்கிக் கொள்ள அந்த காட்சி செம ரகலையாக இருக்கிறது.
ராசி கண்ணா என்று நினைத்துக்கொண்டு யோகி பாபு டெல்லி கணேஷ் க்கு முத்தம் கொடுக்க காவாய் குள் வாய் விட்டது போல் என்று டெல்லி கணேஷ் கலாய்க்க செம்ம கலகலப்பான காட்சிகள் சிங்கம்புலி வந்து போகிறார்
‘பாக்’னு ஒரு விஷயத்தை பத்தி புதுசா சொல்லி இருக்கிறார். இயக்குனர்
பெரிய மன்னர்களெல்லாம் எல்லைகளை தாண்டி போயிருக்காங்க. ஆனா, பிரம்மபுத்திரா நதியைத் தாண்டி யாரும் போகல. அதுக்கு புவியியல் காரணம் தொடங்கி பல விஷயங்களைச். இது தொடர்பாக . நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ‘பாக்’ என்ற விஷயத்தைப் பத்தி சொல்லும் கதை புதுசு

1)சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம்.
2)அவரின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர்.சி.
3) அச்சுறுத்தம் அரண்மனை, 4)நடுநடுவே வந்து செல்லும் சாமியார், 5)பேய்க்கு புதிய பெயராக பாக், 6)ஒளிந்து மறைந்து விளையாடும் பேய், 7)பறக்கும் பொருட்கள் என வழக்கமான டெம்ப்ளேட் காட்சி என இல்லாமல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திரை கதை செம விறுவிறுப்பாக இருக்கிறது
சாமியாரின் பேயாட்டம், நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணாவின் கிளாமர் பாடல், இறுதியில் ஒரு சாமி பாடல் அதில் குஷ்புவின் நடனம் சிம்ரன் . சுந்தர்.சி படங்களின் அக்மார்க்
“ஏற்கெனவே 2 உயிர் எடுத்ததால அது பலமாயிடுச்சு. இனி மனித சக்தியால அதை கட்டுப்படுத்தவே முடியாது” என பாக் குழந்தை சக்தியின் ஊரை எடுக்க நடக்கும் போராட்டம் இறுதி வரை இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, ஆர் ட் டைரக்டர் ,கலர் கரெக்ஷன் டி ஐ , என எல்லாம் சிறப்பாக வந்திருப்பதால் அரண்மனை 4 கலகலப்பான ஹாரர் படமாக குழந்தைகள் ரசிக்கும் படமாக, வித்தியாசமான படமாக, வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் இந்த அரண்மனை 4
