சபரி திரை விமர்சனம் 2024

(சஸ்பென்ஸ் & சைக்காலஜி திரில்லர் ) ரேட்டிங் 3-5/ 5

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலர் உள்ளனர்.

ரியோ என்ற குழந்தைக்காக, போராடும் வரலட்சுமி சரத்குமார் ,அதை மீட்க நினைக்கும் கனேஷ் வெங்கட்ராமன் , அவருக்கு துணை நிற்கும் மைம் கோபி இவர்களைச் சுற்றி நடக்கும் கதை தான் சபரி
குழந்தையை காப்பாற்றினாரா? வரலட்சுமி சரத்குமார்
குழந்தையை தன் வசப்படுத்தினாரா? கணேஷ் வெங்கட்ராமன்
குழந்தைக்காக கொலைகள் செய்யும் மைம் கோபி முடிவில் என்ன ஆனார்? இதைத்தான் சுவாரசியமாக சொல்லி இருக்கிறது சபரி!

தாய்மையின் சிறப்பு பற்றி பேசும் இந்த படம் கிளைமாக்ஸ் காட்சியில் மனதை நெகிழ வைக்கிறது

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவர் அசத்தியுள்ளார்
வரலட்சுமி சரத்குமார் ‘சபரி’ படத்தில் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
அம்மாவின் பாசத்துக்காக ஏங்குவது, தன்மகள் ரியாவை கணவனிடம் விட்டுக் கொடுக்க முடியாத பாசத்தாயாக விளங்குவது, மைம் கோபியிடமிருந்து மகள் ரியாவை காப்பாற்ற நினைப்பது, வேலை கிடைக்காமல் திண்டாடுவது ,அப்படி வேலைக்கு போன இடத்தில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் கயவனை வெறுத்து பார்ப்பது, தோழியிடம் உதவி கேட்பது அவள் வரலட்சுமி கணவர் அரவிந்திடம் போய் கேள், என்று சொன்னதும் தோழியை விட்டு விலகுவது, கிளைமாக்ஸ் கட்சியில் ஆக்ஷனில் அசத்துவது, என வரலட்சுமி இதுவரை ஏற்றிடாத அருமையான வேடத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் கணேஷ் வெங்கட்ராம் வரலட்சுமி கணவர் ஆக நடித்திருக்கிறார் தன்னுடைய பிரிட்டிஷ் காக குழந்தையை விட்டுக் கொடுக்க முடியாமல் வரலட்சுமி யிடம் வாதாடும் போதும், அந்த குழந்தையை எப்படி மீட்க தெரியும் என்று சவால் விடும்போது கனேஷ் வெங்கட்ராமன் நடிப்பு சீராக இருக்கிறது வில்லத்தனம் கலந்த அவர் படத்துக்கு பலம், மைம் கோபி,மன நல காப்பகத்தில் இருந்து முதல் காட்சியில் தப்பிக்க… ஆட்டோ காரரை போட்டு தள்ளுகிறார் நர்ஸ்ஸை கொள்கிறார் பிறகு அவரது வீட்டில் தன் குழந்தையை மாற்றி வைத்த ஆஸ்பத்திரி சேவகனைக் கொள்கிறார் இந்த மூன்று கொலையும் ஆரம்பக் காட்சியில் அடுத்தடுத்து நடக்க மைம் கோபி யார்? இவருக்கு ம் வரலட்சுமிக்கு என்ன சம்பந்தம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகின்றது அதன் பிறகு வரலட்சுமியை காட்டும் போது கதை ஆரம்பம் ஆகிறது

வரலட்சுமி சின்ன குழந்தையாக இருக்கும் பொழுது அம்மாவும் மகளும் பாசமாக இருப்பது வரலட்சுமிக்கு அம்மா பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பது என பாச மிகுந்த காட்சிகள் மனதை நெகிழ வைக்கிறது அம்மாவாக சுனைனா நடித்திருக்கிறார்.. நல்ல நடிப்பு .

அறிமுக இயக்குநர் அனில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். தாய்மை பாசம் குழந்தையின் மீது அன்பு காதலித்த கணவன் துரோகம் கொலை செய்ய துடிக்கும் மனநலம் இல்லாதவர் என அத்தனை சென்டிமென்ட் காட்சியிலும் அற்புதமாக இயக்கி இருக்கிறார் வரலட்சுமி யின் அம்மா இறந்த பிறகு சித்தி கொடுமை க்கு ஆளாகிறார் அதன் பிறகு ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார் வரலட்சுமி காதலுக்கு அப்பா எதிர்ப்பு தெரிவிக்க காதலனுடன் வீட்டை விட்டு வெளியே போகிறார் இப்படி ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இயக்கி இருக்கிறார் காட்சிகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதியில் படமாக்கி திகில் படங்கள் வரிசையில் சேர்த்து உள்ளார்

இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார் பாடல்கள் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வந்துள்ளது அனைவரும் விரும்பி பார்க்கலாம் தாய்மை யை விரும்பாதவர்கள் எவரும் இல்லை

படத்தில் காமெடி என்ற பெயரில் போரடிக்கும் காட்சிகள் இல்லை கவர்ச்சி காட்சிகள் இல்லை கண்ணியமான முறையில் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் வரலட்சுமி பெண்ணியம் பேசும் கதாபாத்திரமாக சின்ன தவறுகள் என்றாலும் அது கணவர் என்றாலும் அப்பா என்றாலும் அவர்களை வெறுத்து ஒதுக்கித் தள்ளும் லட்சியமிக்க பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார் படம் முழுவதும், கணேஷ் வெங்கட்ராமன் மேனேஜராக எம்டி யாக நல்ல ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு வரலட்சுமி அன்புக்காக ஏங்குவது அவர் வீட்டை விட்டுப் போகும்போது குழந்தையை கேட்பது இப்படி அந்த வேஷத்திற்கு கவனம் சேர்த்திருக்கிறார் மைம் கோபி மனநலம் குன்றியவராக கையில் கோடாலி எடுத்துக் கொண்டு படம் முழுக்க வரலட்சுமியை போட்டு தள்ள துடிக்கிறார் வரலட்சுமி தோழியாக வருபவர், வரலட்சுமி அம்மாவாக வருபவர், வரலட்சுமி அப்பா, சித்தி, என்று வரும் கதாபாத்திரங்கள் நல்ல நடிப்பை வழங்கி மன நிறைவு பெறுகின்றனர் படத்தின் முடிவில் ஒரு பாடல் அந்த பாடல் ரசிக்க வைக்கிறது ஒளிப்பதிவு கண்ணுக்கு குழுமையாக இருக்கிறது படத்தொகுப்பு இரண்டு மணி நேரம்தான் கச்சிதமாக இருக்கிறது. பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த சபரி அனைத்து மொழிகளிலும் வெற்றிவாகை சூடும் என்பது உறுதி