கவர்ச்சி நடிகை சோனா கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல்தான் தான் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார். அல்டிமேட் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008 வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்தார். .
