இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘கர்ணன்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இந்த ‘ரயில் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருமை
கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J.ஜனனி ‘ரயில் திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார் இனிமை மூன்று முத்தான பாடல்கள் ரசிக்க வைக்கிறது
படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா எழுத, ‘தேனிசைத் தென்றல்’ தேவா அந்தப் பாடலை பாடியிருக்கிறார்.
அந்தக் காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டலாம்
சிறந்ததொரு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ரயில் படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…..
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அங்கு வாழும் முத்தையா செல்லம்மா என்ற தம்பதியர் முத்தையா ஒரு எலக்ட்ரீசியன் குடித்துவிட்டு தன் நண்பனுடன் இரவு தாமதமாக வருவது அவர் மாமனார் வாங்கி கொடுத்த எலக்ட்ரீசியன் வேலையை செய்யாமல் கோட்டை விடுவது தன் வீட்டு அருகே குடியிருக்கும் வடக்கன் சுனில் மீது தன் மனைவியுடன் தவறாக பழகுகிறானோ
என்று சந்தேகப்படுவது இப்படி அவர் வாழ்க்கை போகிறது ஆரம்பத்தில் வடக்கன்களை கண்டாலே அவர் வெறுப்பதும் எரிச்சலமாக இருக்கிறார் எதிர் வீட்டில் இருக்கும் சுனில் அவர் மீது அன்பு காட்டும் போதெல்லாம் எரிந்து விழுகிறார் ஆனால் அவரது மனைவி செல்லம்மா தன் தம்பி போல சுனில் மீது அன்பு செலுத்தி நன்றாக பழகுகிறார் கார்த்திகை தீபம் அன்று செல்லம்மா அழகான புடவையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு விளக்கேற்றுவதை கண்ட சுனில் தெய்வம் போல் இருக்கிறீர்கள் என்று காலில் விழுந்து வணங்குகிறான் செல்லம்மா மனது குளிர்ந்து போகிறது ஆனால் அங்கு வரும் முத்தையா சந்தேகப்பட்டு செல்லம்மாவை அடிக்கிறான் அதை தடுக்கிறான் சுனில் இதனால் சுனில் மீது கோபம் ஏற்பட்டு தன் நண்பனுடன் சேர்ந்து அவனை கொலை செய்ய திட்டமிடுகிறார் ஆனால் திடீரென சுனில் சாலை விபத்தில் மரணம் அடைகிறார் என்று அவர் வீட்டுக்கு போலீசார் சுனில் பினத்துடன் வந்து அங்கு வைக்கிறார்கள் அதன் பிறகு என்ன நடந்தது ?சுனில் எப்படி இறந்தார்? முத்தையா குடியில் இருந்து மீண்டாரா? செல்லம்மா முத்தையா உடன் சேர்ந்து வாழ்ந்தாரா? முத்தையாவின் மாமனார் முத்தையா கேட்ட 5 லட்சம் ரூபாயை தந்தாரா? சுனிலின் தாய் தந்தை அங்கு வந்து தன் மகன் வங்கியில் இருந்து எடுத்து வந்த ஐந்து லட்ச ரூபாய் என்ன ஆனது எங்கே போனது என்று அதை கண்டுபிடித்தார்களா? இப்படி பல டுவிஸ்ட் களுக்கு மத்தியில் எதார்த்தமான உணர்வுபூர்வமான கதையாக வந்திருக்கிறது இந்த ரயில.
இந்த படத்தின் திரைக்கதை வடக்கில் இருந்து பிழைப்புக்காக இங்கு வரும் தொழிலாளர்களிடம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதை போதிக்கும் விதமாக அமைந்திருக்கிறது
வடக்கன்களை கலாய்க்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றம்
இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. வட புதுபட்டி, அல்லிநகரம், ஊஞ்சாம் பட்டி, அன்னன்ஜி போன்ற பகுதிகளில் படம் படமாக்கப்பட்டுள்ளது
குங்கும ராஜ் வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி நிறுவனம் வெளியிடுகிறது
தொடக்கத்திலேயே ‘ஆம்பள சிங்கம்’ என்ற வசனம் இடம்பெறுகிறது அடுத்து ‘எங்க பாத்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்துட்டானுங்க’, ‘வடக்கனுங்கள அடிச்சு துரத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது’, ‘வடக்கன் நாயே உன்ன கொல்லாம விடமாட்டேன்’ ஆகிய வசனங்கள் வருகிறது ஆனால் இந்த வசனங்கள் படத்தில் போகப் போக வடக்கன் கள்மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்துகிறது துபாயிலிருந்து ஒரு கதாபாத்திரம் வருகிறது நாயகன் முத்தையாவின் மாப்பிள்ளை அவர் சொல்லும் வசனம் வடக்கன்கள் இங்கு வருவது தவறு என்றால் நான் துபாய் செல்வதும் தவறு தானே நானும் அங்கு இறந்தால் அனாதை பிணம் தானே என்று சொல்லும் அந்த காட்சி அற்புதமாக இருக்கிறது
படத்தில் நாயகனின் மாமனாராக வரும் ஓம் முருகா பைனான்ஸ் அதிபர் கதாபாத்திரம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது மகள் வாழ்க்கை இப்படி சீரழிந்து போய் கிடக்கிறது தன் மருமகன் ஒரு குடிகாரனாக இருக்கிறானே என்று ஆதங்கப்படும் போதும் வடக்கன் சுனில் இறந்த பிறகு தன் மகள் அவனுக்காக அழும் போது விடுமா என் மகனாக இருந்தால் அவன் இறப்பிற்கு ஆக வேண்டிய காரியத்தை நான் செய்ய மாட்டேனா என்று அவர் செய்யும் அந்த காட்சிகள் மனதை தொடுகிறது
அடுத்து நாயகி முத்தையா மனைவியாக வரும் செல்லம்மா இவர் வைரமாலா பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு அற்புதமான நடிப்பு அற்புதமான கதாபாத்திரம் தேனி மாவட்ட கிராம பெண்மணி போல மூக்குத்தி அணிந்து கொண்டு கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு நியாயம் தர்மம் பேசி நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார் தன் கணவன் தான் அந்த பணத்தை 5 லட்சத்தை திருடி கொண்டான் எதிர் வீட்டில் இருக்கும் அந்த சுனில் குடும்பம் வறுமையில் இருக்கிறது என்று அவர் போராடும் அந்த காட்சிகள். சூப்பர்
கணவனை வாடா போடா என்று அழைப்பது குடிகாரனை திட்டுவது இப்படி வைரமலா அற்புதமான நடிகையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு விருது நிச்சயம்
அடுத்து சுனிலாக நடித்திருக்கும் பர்வேஸ் வடக்கன் ஆக வந்து நல்ல கேரக்டர் மனதில் பதிகிறார் வடக்கன் எல்லோரும் தீயவர்கள் அல்ல நல்லவர்கள் என்று நமக்கு சொல்லி புரிய வைக்கிறார் நல்ல நடிப்பு பர்வேஸ்நல்ல தேர்வு
அடுத்து படத்தின் நாயகன் குங்கும ராஜ் படத்தில் எந்நேரமும் பீடி குடித்துக் கொண்டு நண்பனுடன் தண்ணி அடித்துக் கொண்டு வேலைக்கு போகாமல் மனைவியை சீண்டி கொண்டு ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கொண்டு பரட்டை தலையோடு கிராமத்து குடிகாரனாக அச்சு அசலாக அற்புதமாக நடித்திருக்கிறார் சுனில் இறந்த பிறகு பிணமாக அவர் வீட்டுக்கு வந்திருக்கும் பொழுது அந்த இரவு அவர் தூங்காமல் முருகனை கும்பிட்டு விபூதி பட்டையடித்து பயப்படும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு சான்று கிளைமாக்ஸ் காட்சியில் சுனில் குழந்தையுடன் வெளியே சென்று சுற்றிவிட்டு அந்த குழந்தையுடன் பாசத்தோடு பழகும் அந்த காட்சியிலும் மாமனாரிடம் ஐந்து லட்சம் கேட்டு சண்டை போடும் காட்சிகளும் செல்லமாவிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கெஞ்சும் காட்சியிலும் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார் குங்கும ராஜ் க்கு இனி நல்ல வாய்ப்புகள் இவருக்கு வரலாம்
படத்தின் எடிட்டர் இரண்டு மணி நேரம்தான் படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நீட்டாக கொண்டு சென்று குழப்பம் இல்லாமல் படத்தை கொண்டு போகிறார் எடிட்டர் அவருக்கு வாழ்த்துக்கள்
அரங்கமைப்பாளர், ஒப்பனையாளர் ,கலர் ர் கரெக்ஷன், டி யை போன்ற பணிகளை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
:படத்தின் தயாரிப்பாளர் டிஸ்கவரி வேடியப்பன் ஏதோ ஒரு படத்தை எடுத்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு நல்ல ஒரு ஒற்றுமை உணர்வை கொடுக்க வேண்டும் என்று வடக்கு தெற்கு பார்க்கக் கூடாது மனித நேயம் எல்லா இடத்திலும் இருக்கிறது என்று நல்ல படத்தை நல்ல கதையை எடுத்ததற்காக அவரை பாராட்டலாம்:
இயக்குனர் பாஸ்கர் சக்தி ஒரு நல்ல கதையை எழுதி இயக்கி ரயில் என்ற டைட்டில் மூலம் மக்களுக்கு வழங்கி இருக்கிறார் மலையாள சினிமாக்கள் நல்ல கதைகளுக்காக தான் படம் ஓடுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் தமிழிலும் இப்படிப்பட்ட நல்ல கதைகளை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் இன்று வடக்கன்கள் தமிழ்நாட்டில் கட்டிடப் பணியிலும் ,மெட்ரோ ரயில் பணியிலும், டீக்கடையிலும், ஹோட்டல் கடையிலும் ,நிறைய பெருகிவிட்டார்கள் காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள் ஊதிய குறைவு என்றாலும் அவர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் தமிழர்கள் காலையில் எப்பொழுது 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பான் என்று காத்துக் கிடக்கிறார்கள் டாஸ்மார்க் கடையில் கும்பலா குவிந்து கிடக்கிறார்கள் உழைப்பில்லாமல் சோம்பேறி ஆகி விட்டார்கள் என்பது உண்மை அந்த உண்மையை படமாக எடுத்து வடக்கன்கள் கிராமத்திலும் காலூன்றி பெருகிவிட்டார்கள் கிராமத்து கடைகளிலும் இன்று பாணி பூரி பேல் பூரி இதை விற்கத் தொடங்கி விட்டார்கள் என்பதை சிம்பாலிக்காக சொல்லி ஒரு நல்ல கதையை சொல்லி இருக்கிறார் மனித நேயம் எல்லா இடத்திலும் இருக்கும் என்பதை இந்த படம் சொல்கிறது மனித உணர்வுகளை சொல்லும் படம் இது ரயில் என்பதால் படத்தில் ரயில் எங்குமே இல்லை ஆனால் வடக்கன்கள் ரயில் மூலம் சென்னைக்கு நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வருகிறார்கள் என்று கணக்கு சொல்கிறது அதை உணர்த்தும் விதமாக ரயில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மொத்தத்தில் இந்த ரயில் அனைவரையும் கவரும் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது நிச்சயம் ரசிகர்கள் இப்படி படத்தை கொண்டாட வேண்டும் அப்போதுதான் தமிழ் சினிமா தரமான பாதையில் தரமான படங்களை கலைஞர்கள் எடுத்து தருவார்கள் ஒரு பாரதிராஜா படம் பார்த்தது போல் இருக்கிறது இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு, வாழ்த்துக்கள்
