நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் திஷாபதானி ,உள்ளிட்ட்பல நடிகர்கள் நடித்துள்ள கல்கி படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ளனர் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கும் கல்கி படத்தின் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம். ஆரம்பத்திலேயே மகாபாரதப் போரை காண்பிக்கிறார்கள். அதில் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா போரிடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார்.அந்த காட்சிகள் அபாரம் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், அஸ்வத்தமாவிற்கு தண்டனையை சாபமாக தருகிறார் .
உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அப்போது தான் உன்னுடைய சாபம் நீங்கும் என்று கிருஷ்ணன் கூறுகிறார். இப்படி இந்த மகாபாரதப் போர் முடிந்த 6000 ஆண்டுகள் பிறகு தான் கல்கி படத்துடைய கதை துவங்குகிறது. உலகத்தின் முதலும் கடைசி நகரமாக மிஞ்சி இருப்பது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் கமலஹாசனின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டமான முறையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் வெல்டன்.
இன்னொரு பக்கம் கங்கை நதி வற்றி பஞ்சத்திலும் பசியிலும் மக்கள் வாழ்கிறார்கள். மறு பக்கம். அதிகாரம் செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பாக, தங்களுக்கான உலகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இடத்திற்குள் புகுந்து தனக்கு தேவையான பணத்தை சேர்ந்து தானும் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஹீரோ பிரபாஸ் நினைக்கிறார். கமலஹாசனை அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட ரெபல் ஆக பசுபதி சோபனா கூட்டம் போராடுகிறார் கள்.
கல்கி ஆக பிறக்கும் குழந்தையை தான் தீபிகா படுகோன் சுமக்கிறார். எப்படியாவது அந்த குழந்தையை அழித்து ப்ராஜெக்ட் கே என்ற தன்னுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்று கமலஹாசன் துடிக்கிறார். ஆனால், அந்தக் குழந்தையை காப்பாற்றி தன்னுடைய சாபத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டு காலமாக அஸ்வத்தாமா காத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று பிரபாஸ் நினைக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மிரட்டி இருக்கிறார்கள் படம் பார்க்கும் மூன்று மணி நேரம் நாம் வேறு உலகத்தில் பயணித்தது போல் இருந்தது: மஹாபாரதம் என்ற ஒரு mythology களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு சீக்குவல் இருந்தால் எப்படியிருக்கும் என்ற அசுர கண்ணோட்டத்துடன் நாக் அஷ்வின் இன்றைய காலக்கட்ட டெக்னாலஜி பொருத்தி இதை கையாண்டதற்காகவே பெரும் பூங்கொத்து கொடுக்கலாம்.
பிரபாஸ் பாகுபலி-க்கு பிறகு அனைத்து தரப்பினருக்குமான படம் கொடுப்பத்தில் கொஞ்சம் தடுமாற, இந்த கல்கி அதை முறியடித்து பிரபாஸை உச்சத்திற்கு மீண்டும் கொண்டு சென்று இருக்கிறார்
பிரபாஸை விட அசுவத்தாமன் ஆக வந்த அமிதாப் தான் ரியல் ஹீரோ, 6000 வருடம் மேல் உயிரோடு ஒரு உயிரை பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்த குழந்தை உருவானது ஒரு ஆளாக அமிதாப் ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம். செம மிரட்டல்
கருவை சுமக்கும் பெண்ணாக தீபிகா படுகோன், அவரை காப்பாற்ற போராடும் அண்ணாபென், ஷோபனா, பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
ஆங்கிலப்படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளேக்ஷ் உலகம் அத்தனை பிரமாண்டம், அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், கிளைமேக்ஸில் புஜு ஒரு கொரில்லா ரோபோட் போல் மாறுவது, மேட் மேக்ஸ் டைப்பில் இரண்டாம் பாதியில் வந்த சேஸிங் என அனைத்து பிரமாண்டமும் பிரபாஸுக்கு கொடுக்கப்பட்ட இன்ட்ரோ காட்சிகள், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் என அனைத்தும் அனல் பறக்கிறது. அதே போல் பிளாஷ்பேக்கில் வரும் புராண கதையும் சிறப்பாக மேக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.

இதிகாசமும் அறிவியலும் கலந்த இப்படம் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாகக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான்கு வருட காலம் கடுமையாக உழைத்த நாக் அஸ்வினின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு பிரம்மாண்டம் திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டி கிடக்கிறது.
அதேபோல் நிறைய சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் இருக்கிறது. அதில் விஜய் தேவரகொண்டாவின் கேமியோ வேற லெவலில் உள்ளது. டெக்னாலஜியை பொருத்தவரையில் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு இது புதுவிதமான அனுபவத்தையும் சுவாரசியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்தபடியாக இரண்டே காட்சிகளில் வந்தாலும் கமல் கண்பார்வையிலேயே அனைவரையும் கட்டி போட்டு மிரட்டி விடுகிறார். அவருடைய தோற்றமும் வசன உச்சரிப்பும் கண் இமைக்க மறந்து நம்மை பார்க்க வைக்கிறது.
அந்த அளவுக்கு வலுவான கதாபாத்திரமாக இருக்கிறது. அதிலிருந்து இரண்டாவது பாகத்திற்கான லீடையும் கொடுத்துள்ளனர். இப்படி பல சுவாரசியங்கள் நிறைந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை அடுத்த ஹீரோ என்றே சொல்லலாம்.
காட்சிக்கு காட்சி மிரட்டும் அவருடைய பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இப்படியாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தரமான தொழில்நுட்பத்துடன் கொடுத்த பில்டப்புக்கு நியாயம் சேர்த்துள்ளார் இயக்குனர். அதனால் இந்த கல்கியை ரசிக்கலாம்.
மேலும் இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி வேட்டைக்காரனாகவும் பைரவாவின் போட்டியாளராகவும் சிந்துவாக ராம் கோபால் வர்மா கே.வி. அனுதீப் வளாகத்தில் நடனக் கலைஞராக ஃபரியா அப்துல்லா வளாகத்தில் நடனக் கலைஞராக ஸ்ரீனிவாஸ் அவசராலா
என மிரட்டி இருக்கிறார் கள். அன்னா பென், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் தங்கள் பங்கை குறையின்றி செய்திருக்கின்றனர். காம்ப்ளக்ஸில் பெண்களை நடத்தும் விதம், அவர்களின் ரகசிய ஆய்வுகள் எல்லாம் தரமாக உள்ளன. படம் முழுக்க போடப்பட்ட செட்டுகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் மிகக் கச்சிதமாக இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத காட்சிகளை நமக்குக் காட்டுகின்றன மிகப்பெரிய வெற்றி பட்டியலில் கல்கி
