Teenz திரைப்பட விமர்சனம்

அறிவியல் சார்ந்த பொழுது போக்கு - 3/5

இயக்குனர்: பார்த்திபன்

நடிகர்கள்: பிரஷிதா, ரிஷி, பிராங்கின்ஸ்டன், தீபேஸ்வரன், அஸ்மிதா, தீபன், உதய்பிரியன், விஷ்ருதா, டி ஜான், சில்வென்ஸ்டன், அம்ருதா, கிருத்திகா, ரோஷன், பார்த்திபன்
ஆகியோர் நடித்துள்ள படம் இது

பார்த்திபன் புதுமையான படைப்புகள் தருவது அவரது வழக்கம் மற்றும் நகைச்சுவையாக சிலேகிப்பது, நக்கல் வார்த்தைகள். ,ஆடு, மாடு, காகம் போன்றவற்றின் மூலம் ஒரு புது திரைக்கதையைக் கொண்டு வந்து உள்ளார், ஆதித்யனுக்கும் நைனிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது, அதைத் தொடர்ந்து ‘கானதததை நான் கண்டேனே.’பாடல்,
படத்தின் எனர்ஜி

படம் இரண்டு மணிநேரம் மட்டும் என்பது ஆறுதல்

முதல் பாதியில் வேகக்கட்டுப்பாடு சிக்கல்கள் இருந்தபோதிலும், இரண்டாம் பாதியில் ஒரு ஆச்சரியமான மாற்றத்தை வழங்கியிருக்கிறார் பார்த்திபன்

புதிரான தனித்தன்மையுடன் வசீகரிக்கும் கதாபாத்திரமாக வெளிவருகிறார். குழந்தைகள் ஆரம்பத்தில் காணாமல் போவது அமானுஷ்யத்தை சுட்டிக்காட்டினாலும், இரண்டாம் பாதியில், இன்னும் நிரூபிக்கப்படாத, அறிவியல் கருத்தை நோக்கி செல்கிறது.படம்

ஜானா என்று அழைக்கப்படும் பார்த்திபன், அறிவியல் புனைகதை லவ். ஜானாவின் பாத்திரம், “வேகம் சமமான தூரத்தை நேரத்தால் வகுக்கப்படும்” போன்ற வரிகளுடன் சாதாரணமானவர்களின் திரையைத் துளைக்கும் கண்ணாடிகளுடன் முழுமையானதாக இருக்கிறது
ஒரு ஆழமான மர்மத்தைக் காட்டுகிறது

இறுதியில், படம் பார்வையாளர்களை இன்னும் அதிகமாக ஆச்சரியம் கொள்ள வைக்கிறது

, இது சிறுவர்கள் படமா, அமானுஷ்ய படமா ,அறிவியல் படமா, என்ன வித்தியாசம் பார்க்கலாம் வாங்க


கதைக்களம்

12 சிறுவர்கள் ஆரம்பத்திலேயே தாங்கள் சிறுவர்கள் இல்லை வெளி நாட்டை போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றோர்கள் தங்களை
ஈகுவலாக பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர்.கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது

அத்தகைய பேச்சில் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்க, ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர். அப்படி போகும் வழியில் அவர்கள் சந்தித்த திடுக்கிடும் சம்பவங்கள் தான் அந்தப் பயணத்தின் வழியே பார்த்திபன் கதை சொல்லி இருக்கிறார் புதுமையாக

அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை இழுத்துக்கொண்டு 13 பேராக செல்ல, செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.

அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் தேட, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை..

படத்தில் நடித்த சிறுவர்களின் பெயர்களை வைத்து ஒரு பாடலாக விவரித்து அவர்கள் குணாதிசியம் சொன்ன விதம் அருமை

படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்ற ஒரு பதட்டத்தை ஏற்படுத்தினாலும், பேயா, அமானுஷியமா இரண்டாம் பாதியில் இதற்கான லாஜிக்கை பார்த்திபன் உடைக்கும் இடம் அட இப்படியும் யோசிக்கலாமே என்று கூற வைக்கின்றது

தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ‘ இதுவரை தமிழ் சினிமாவிலேயே இல்லாத ஒரு ஜானரை பார்த்திபன் செய்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் குழந்தைகளுக்கு அந்த கதாபாத்திரம் அப்படியே மனதில் பதிந்துவிடும். பலவிதமான ட்விஸ்டுகளுடன் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்று யோசிக்க வைத்தது, ஸ்கிரின் ப்ளே சூப்பராக
வந திருக்கு, அதுபோல பின்னணி இசை சூப்பர். இது பேமிலி ஆடியன்சுக்காக எடுத்த படம் என்பதால் அனைவரும் பார்க்கலாம. எந்த இடத்திலும் லாஜிக்கே இல்லையே என்று யோசிக்க வைக்கவில்லை. குழந்தைகளுக்கு இந்த படம் ரோலர் கோஸ்டர் போல படம் சூப்பரா வந்து இருக்கு.

படத்தின் முதல் பாதியில் பல ட்விஸ்டுகள் இருந்தன. இரண்டாம் பாதியில் அதை உடைக்கும் போது, வேறு கதையாக தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் 13 குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் அதை அப்படியே பக்காவாக நடித்திருந்தார்கள். டீன்ஸ் படத்தை பொருத்தவரையும் நெகட்டிவ் கமெண்டே சொல்ல முடியாது அந்த அளவிற்கு படம் ரியலாக இருந்தது. படத்தினுடைய சிஜி வேலைகள், என அனைத்தும் சரியாக வந்து இருக்கிறது.

இன்றைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் படமா
கவரும் உள்ளது: சிறுவர்கள் மலைப்பாம்பு வயிற்றை கிழிக்கும் இடம் பதட்டம் தான்.

யோகி பாபு இரண்டு கட்சிகள் வருகிறார் இன்பமகா தேவியிடம் இன்பம் அனுபவிக்க முடியாமல் மயான பூமியில் நிம்மதியை தேடி வரும் அந்த கதாபாத்திரம் டாஸ்மாக்கை பற்றி பேசுகிறது 10 ரூபாய் விலைஏத்திட்டாங்க என்று

பார்த்திபனுடன் வண்டியில் ஏறும் போது சீட்டு இடம் பத்துமா என்று அவர் கேட்பதற்கும் நான் வாஸ்து பார்த்து உட்கார்ந்து கொள்கிறேன் என்று இவர் சொல்வதற்கும் சரியான எடக்க மடக்க இருக்கும் போல இருக்கு என்று நினைத்தால் அதோடு யோகி பாபு போயே போயிட்டாரு

இப்படி முதல் பாதி முழுவதும் பல கேள்விகுறியுடன் நகர்வது சுவாரஸ்யம்.

ஆனால், இரண்டாம் பாதியில் இவர்கள் தொலைவதற்கான காரணம் சுவாரஸ்யமான டாபிக் என்றாலும், அதை படமக்கிய விதம் அட என்ன தான்ப்பா நடக்குது என்ன சொல்ல வரீங்க என்று கேட்க தோன்றுகிறது
நடித்திருக்கும் 13 குழந்தைகளும் புதுமுகமாக இருப்பது சற்று ஆறுதல் எதிர்காலம் அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து அளிக்கலாம்.

பார்த்திபன் கதாபாத்திரம் சொல்ல வரும் விஷயங்கள் புதிதாக இருக்கிறது
அயன் காளி கதாபாத்திரம் அருமையாக இருக்கிறது

படத்தில் ஆங்காங்கே சில அரசியல் வசனங்களும் படம் முழுக்க இடம் பெற்றிருந்தது.

டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

படத்தில் முக்காவாசி காட்சிகள் ஒரு பரந்த நிலப்பரப்பில் நடக்கிறது, அது அடர்த்தி கொண்ட காடாக இருந்திருந்தால் இன்னமும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் இப்படி ஒரு கதையை யோசித்ததற்கு இயக்குனர் பார்த்திபன் அவர்களை தனியாக பாராட்டலாம்
ரிஸ்க் எடுப்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி

ஏலியன்களை வடிவமைத்த விதமும் சிஜி மற்றும் விஎஃப்எஸ் காட்சிகள்
ஆச்சரியமூட்டுகின்றது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலியன்களை வடிவமைப்பதற்கு 64 காட்சிகள் உபயோகப்படுத்தி இருக்கிறார் தமிழ் சினிமாவில் இதை தொடர்ந்து இனி அறிவியல் சினிமாக்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற படங்களை நாம் ஊக்கம் தரும் போது தமிழ் சினிமா மேலும் பல மாற்றங்களை காணலாம் தேவையில்லாத குத்து பாட்டு ,கவர்ச்சி நடனம், ஆபாச நகைச்சுவை வசனம், இது போன்ற படங்களை தவிர்த்து ஒரு நல்ல தரமான படத்தை கொடுத்ததற்காக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ,புதுமை வித்தகர் பார்த்திபன் அவர்களை பாராட்டலாம்