“அந்தகன் “திரை விமர்சனம்.(2024)

ரேட்டிங் 4/ 5

Cast: Prashanth | Simran | Priya Anand | Karthik Muthuraman | Samuthirakani | Yogibabu | Oorvasi | K.S.Ravikumar | Vanitha Vijaykumar
Leela Samson| Poovaiyar | Manobala | Besant Ravi | Mohan Vaithiya | Lakshmi Pradeep | Rekha Suresh | Semmalar | Kavitha.

💕ஒரு வெற்றி படத்துக்கு காத்திருந்த பிரசாந்த் இப்படம் மூலம் மீண்டும் வெற்றி படம் கொடுத்திருக்கிறார்.

💕இப்படத்தில் பார்வையற்றவராக நடித்திருக்கும் படத்தின் இவர் லண்டன் சென்று மிகப் பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல அவருக்கு காதலி கிடைக்கிறாள். காதலி வந்த பின் அவரது வாழ்வில் நடக்கக்கூடிய அடுத்தடுத்த சம்பவங்கள் மற்றும் அதோடு நாயகன் கார்த்திக் உடன் சந்திப்பு தான் அதன் பிறகு நடக்கும் திரைக்கதை தான் சுவராஸ்யமான காட்சிகள்

💕கண் தெரியாத பிரசாந்துக்கு பியானோ வாசிக்கத் தெரியும். அவர் ஓட்டலில் பியாணோ வாசிக்கும் போது கார்த்திக் அவருடைய மனைவியை(சிம்ரன்) திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு வந்து பார்த்த பிராசாந்திற்கு கார்த்திக் அங்கு இறந்து கிடக்கிறார், சமுத்திரக்கனி, மற்றும் சிம்ரனும், இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார்,

இதன் பிறகு நடக்கும் பதட்டமும், சுவாரஸ்யமும் தான் மீதிக்கதை…
பிரசாந்த் கண் தெரியும் போதே தெரியாதது போல் அவர் நடிக்கும் காட்சிகள் அத்தனை தத்ரூபம், அதை விட உண்மையாகவே அவருக்கு கண் தெரியாமல் போகும் காட்சி அவர் அடையும் பதட்டம் திரை கதையில் சுவராஸ்யமான, காட்சிகள்.

அதிலும் கார்த்திக் இறக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் தெரிந்தும் தெரியாதது போல் பிரசாந்த் பெர்ப்பாமன்ஸ் செய்யும் காட்சிகள் அருமை.

💕பிரசாந்திற்கு பிறகு படத்தில் கலக்கியிருப்பதும் சிம்ரன் தான், இதுவரை ஹீரோக்களுடன் வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக பார்த்த இவர், எதோ சீரியல் கில்லர் போல் மிரட்டியுள்ளார். அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது ஒரு தவறை மறைக்க பல தவறுகள் செய்யும் கதாபாத்திரம் அவர் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார் இதற்கு முன் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகை தபு வை நடிக்க வைக்க ஆலோசனை செய்து உள்ளார்கள் சிம்ரன் தான் பெஸ்ட்

. , 💕கே எஸ் ரவிகுமார் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
பண வெறி பிடித்து மனிதர்களின் உறுப்புகளை திருடும் மோசமான டாக்டராக கலக்கி இருக்கிறார் சிம்ரனிடம் உயிரை இழக்கும் காட்சி பரிதாபம் .

💕போலிஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி ஆரம்பத்தில் செம கெத்து அடுத்து, தன் மனைவி வனிதாவிடம் உண்மை தெரிந்தும் கெஞ்சும் இடம் எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று சொல்லும் அளவுக்கு ஆகி விட்டார்

💕இரண்டாம் பாதியில் பிரசாந்த் கிட்னி-யை திருட ப்ளான் செய்யும் கும்பல், அவர்களிடம் தப்பிக்கும் காட்சி என பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

💕பிரசாந்தின் கதாபாத்திரமே ஒரு பியானிஸ்ட் என்பதால் படத்தின் மிகப்பெரும் பலம் இசை என்பதை உணர்ந்து சந்தோஷ் நாராயணன் கலக்கியுள்ளார்
புதிய இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

, 💕அதோடு கதை களம் பாண்டிச்சேரி என்பதால் டாப் ஆங்கிள்-ல் காட்டும் ஒரு காட்சியே பிரமிப்பு தான், ஏதோ பாரீன் போல் எடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் சூப்பர் ஒளிப்பதிவு.

💕படத்தின் திரைக்கதை எங்கும் போர் அடிக்காமல் செல்கிறது.
: பிரசாந்த். இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார். கண்களை மூடிக்கொண்டுபார்வையற்றவராகநடித்து விடலாம். ஆனால் இந்தப் படத்தில் கண்களைத் திறந்து கொண்டு பார்வையற்றவராக அற்புதமாக நடித்துள்ளார்.

💕மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வு. படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான நடிகர்கள் அமைந்து விட்டதால், அவர்கள் நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறார்கள்.
போரடிக்காமல், நல்ல நகைச்சுவைக் காட்சிகளுடனும், சுவாரசியமான திரைக்கதையையும் கொண்டுள்ளது
பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து திரைக்கதையை எழுதிய தியாகராஜன் எழுதி இருக்கிறார்
வசனம் ரசிக்க வைக்கிறது வசனம் படம் முழுக்க ரசிக்க வைத்தது ஒன்று இரண்டு வார்த்தைகள் தான் என்றாலும் சார்ப்பாக இருந்தது

💕சமுத்திரக்கனி சிம்ரன் வனிதா வரும் காட்சிகள் படத்திற்கு கலகலப்பையும் சுவராசியத்தையும் கூட்டுகிறது யோகி பாபு ஊர்வசி பிரசாந்தின் அடுத்தகட்ட பயணத்திற்கு உதவுகிறார்கள் அவர்கள் வரும் காட்சி நன்றாக இருந்தது
இடைவேளை வரை படத்தை கிளாசிக்காக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அதன்பிறகு பிரசாந்தை கடத்தும் கே எஸ் ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு, இவர்கள் லோக்கல் ரேஞ்சுக்கு இறங்கி சிந்திக்கிறார்கள் சிம்ரன் இடமிருந்து 8கோடி ரூபாயை அடைவதற்கு திட்டமிட்டு காய் நகர்த்துவது அதன் பிறகு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசை ரசிக்க வைக்கிறது கிளைமாக்ஸ் பாடல் அற்புதம
: சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக்காவில்லை விறுவிறுப்பாகவே போகிறது : ஆர்ட் டைரக்டர் செந்தில் ராகவன் புதுச்சேரி தான் கதைக்களம் என்பதால் இந்த ஓட்டல், சிம்ரன் வீடு, பிரசாந்த் வீடு என எல்லா இடத்திலும் அவரின் கைவண்ணம் மிளிர்கிறது. நடன இயக்குனராக சாண்டியும் ,கலா மாஸ்டர் ,பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் ரசிக்க வைக்கும். நடனங்கள் படம் முடிந்து அந்த பாடல் காட்சி நடனத்தில் பிரசாந்த் தூள் கிளப்புகிறார்.

💕: சண்டை பயிற்சியாளர் ராம்குமார் கிளைமாக்ஸ் காட்சி சன்டப்பயிற்சி அனல் தெரிக்கிறது
இப்படத்தை ரீமேக் செய்வதற்காக இயக்குனர் தியாகராஜன் வாங்கி முதலில் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது அவர் விலகிய பிறகு பொன் மகள் வந்தாள் பட இயக்குனர் இயக்குவதாக இருந்தது அவர்கள் இருவரும் விலகிய பிறகு இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் அவர்களே இயக்கியிருக்கிறார் அவரின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது பிரசாந்தின் அருமை பெருமைகளை, அறிந்து படத்தை செதுக்கி இருக்கிறார் ஒவ்வொரு காட்சியையும் ரிச் ஆக இயக்கி இருக்கிறார். பிரசாந்தை அழகாக காட்டி இருக்கிறார் இவரது இயக்கம் படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது

💕இப்படத்தில் நடித்த கார்த்தி இன்னும் கொஞ்சம் காட்சிகள் வரமாட்டாரா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு கலகலப்பாக நடித்தி ருக்கிறார்
சிம்ரன் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது ஊர்வசி நடிப்பும் நன்றாக இருக்கிறது யோகி பாபு கலகலப்பை தருகிறார் பிரசாந்துக்கு இந்த படம் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது இனி அவரது வெற்றிப் பயணம் தொடரும்
அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது இந்த *அந்தகன்'” மொத்தத்தில் அந்தகன் வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளார்

: Movie Credits
Praeethi Thiagharajan Productions
Directed By – Thiagarajan
Produced By – SHANTHI THIAGARAJAN
Dance Director – Prabhu Deva
Music – SANTHOSH NARAYANAN
Cinematography – RAVI YADAV
Story – SRIRAM RAGAHVAN
Editing – SATHISH SURIYA
Dialogues – PATTUKOTTAI PARBHAKAR
Stunts – RAM KUMAR
Art Direction – SENTHIL RAGHAVAN
Stills – KANNAN
Pro – NIKHIL MURUKAN
Choreography – KALA MASTER Master,sanday
Audiography – LAKSHMINARAYANAN A.S
Production Managers – ANAND K | SAKTHIVEL

💕: இதில் பங்கு பெற்ற கலைஞர்கள் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள் ஒரு வெற்றி படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் இந்த படத்திற்கு சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்