மை பெர்பக்ட் ஹஸ்பெண்ட் ( விமர்சனம்)

(ரேட்டிங் 4/ 5)

ரெட்டசுழி மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, தர்ஷன் ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட வெப் தொடர் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட். ஆனால் இந்த தொடர் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனால் மீதித் தொடரை இயக்குனர் சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி முடித்தார். இப்போது இந்த சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. நகைச்சுவை கலந்த குடும்ப வெப் தொடராக வெளிவந்துள்ளது

சத்யராஜின் பழைய காதலியின் மகளை தன் மகன் இப்போது காதலிக்க அதனால் குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்பங்களே இந்த சீரிஸின் கதை

. 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர்

ஹீரோவாக சத்யராஜ் நடித்துள்ளா
மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்ல். இதில் சத்யராஜ் ஜோடியாக சீதா நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரேகா நடித்துள்ளார். அதேபோல் ரக்‌ஷன், வர்ஷா பொல்லம்மா, லிவிங்ஸ்டன், ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜனரஞ்சகமான கதை
அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு நிறைந்த ஜனரஞ்சக படைப்பாக மை பெர்பெக்ட் ஹைஸ்பெண்ட் உருவாகியிருக்கிறது

. ஒளிப்பதிவு – ஆர்தல் வில்சன். எடிட்டிங் – பார்த்தசாரதி. வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை, காதல், பேமிலி டிராமா பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள்
எல்லாவற்றையும் விட, தன் மீது மட்டுமே கண்களை வைத்திருக்கும் கணவனைப் பற்றி பெருமிதம் கொள்வதாகக் கூறும் பெண்ணாக வரும் சீதா நடித்திருக்கிறார்
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

, அவரது கணவர் தனது கடந்தகால காதல் பற்றி மறைக்க சிலர் பொய்களை அவிழ்க்கிறார்.

சத்யராஜ் இளவயது காதலியாக ரேகா வருகிறார். அதேவேளையில் மற்றொரு இளம் காதலர்களாக ரக்‌ஷன் – வர்ஷா பொல்லம்மா ஜோடி வருகிறார்கள். இதில் ரேகாவின் மகளாக வர்ஷா பொல்லம்மா இருக்கிறார். இளம் காதலர்களின் பெற்றோருக்கு கடந்த காலங்களில் தொடர்பு இருப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே கதையாக தெரிகிறது.
சத்யராஜ். தற்போது தமிழ் தவிர தெலுங்கு, இந்திஉள்பட பிற மொழி படங்களிலும் நடித்து பான் இந்திய நடிகராக திகழ்ந்து வருகிறார். அவரின் நடிப்பு மிக எதார்த்தமாகவும் நன்றாக இருக்கிறது மனைவியிடம் அன்பு பாசம் வைத்திருக்கும் கணவன் முன்னாள் காதலியின் நினைவுகளை மனைவியிடம் சொல்ல அதனால் ஏற்படும் விபரீதங்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை அவரது முகபாவம் நடிப்பு உடல் மொழி எல்லாமே ரசிக்க வைக்கிறது
அவர் இதற்கு முன்
தெலுங்கில் உருவான மீட் க்யூட், மேன்ஷன் 24 ஆகிய இரண்டு வெப் தொடர்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இது அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுத் தந்துள்ளது

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்
சமீப காலமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்தடுத்து புதிய வெப் தொடர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கும் உப்பு புளி காரம், யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன் நடித்த சட்னி சாம்பார் வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது சத்யராஜின் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி குடும்பப் பெண்களிடம் ஒரு விதமான ஆதரவையும் ஆபிரகமான வெற்றியும் பெற்றிருக்கிறது .

முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.