செம்பியன் மாதேவி திரை விமர்சனம் – ரேட்டிங் : 3.5/ 5
(ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்)**
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி’.
படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்*
இயக்குநரும் இசையமைப்பாளருமான
லோக பத்மநாபன் உதவி இயக்குநராக பணியாற்றி படத்திற்கு பாடல் எழுதியதன் மூலம் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்து இருக்கிறார் . இசை, பாடல்கள், தயாரிப்பு என அனைத்தையும் இவரே செய்தது பாராட்டுக்கள்
இவர் தமிழ்நாடு இசை கல்லூரியில் நான்கு ஆண்டு இசை பட்டய படிப்பு படித்தவர்
இசை கல்லூரியில் சேரும் போதே உதவி இயக்குநராக சேர்ந்து விட்டார்
இசை படிப்பை முடிப்பதற்குள் நான்கு படங்களில் இணை இயக்குநராகவே பணியாற்றி விட்டார் அதனால் தான் இவர் இயக்குநராகும் போது இசையமைக்கவும் முடிந்தது*
படத்தின் பாடல்கள் இந்த அளவுக்கு வருவதற்கு விடி மியூசிக் சிஇஓ அரவிந்த் தான். அவர் அற்புதமான பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். வா.கருப்பன் அவர்களும் சிறந்த பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய மொசக்குட்டி உள்ளிட்ட
நடிகர்கள்
நடிகர்கள் இவருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
காதலையும், சாதீய வன்மத்தையும் அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளையும் கிராமத்து மனிதர்களை உலவவிட்டு ரத்தமும் சதையுமாய் சொல்லும் படம், செம்பியன் மாதேவி.
வட தமிழ்நாட்டில் இருக்கும் செம்பியன் என்ற சிறு கிராமம். இங்கு 2004 ஆம் வருடம் பட்டியல் இன இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அவரை படுகொலை செய்தவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை மாதேவியை, நாயகன் வீரா காதலிக்கிறார். சாதி பாகுபாட்டுக்கு பயந்து அந்த காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி. ஆனால் நாயகனின் தூய்மையான காதலை உணர்ந்து இவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஈருடல் ஓருடல் ஆக.. நாயகி கர்ப்பமாகிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனை வற்புறுத்துகிறார். நாயகனோ, குழப்பமடைந்து, தனது சாதி நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறார். நண்பர்களோ, இது தங்கள் சாதிக்கு இழுக்கு என நினைத்து, நாயகியை மானபங்கப்படுத்தி நடுகாட்டுக்குள் சித்திரவதை செய்து உனக்கெல்லாம் உயர்ந்த ஜாதி பையன் கேட்கிறார் என்று சீரழிக்கிறார்கள் நாயகன் தேவையில்லாமல் இவர்களிடம் உதவி கேட்டு விட்டேனே என்று பதவி பதைப்புடன் அங்கு போகிறார் அந்த காட்சிகள் செம விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலை தூண்டுகிறது சூப்பர் கிளைமாக்ஸ்
நாயகன் பற்றி
நாயகன் வீராவாக தோன்றும் லோகு பத்மநாபன், எதார்த்தமான கிராமத்து இளைஞராகவே வந்து கவர்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி, மோதல் ( சண்டைக்) காட்சிகளிலும் முத்திரை பதித்து உள்ளார். சாதி ரீதியான உணர்வை கடுமையா எதிர்க்கும் காட்சிகளிலும் கவனத்தை கவர்கிறார்.
நாயகி பற்றி
நாயகி மாதேவியாக வரும் அம்சலேகா நிஜயமான கிராமத்து பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். குடும்ப சூழல்நிலையை கருதி காதலை மறுப்பது.. நாயகனின் மனதை அறிந்து காதலை ஏற்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.இன்னொரு நாயகி கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினாவும் இயல்பான நடிக்கை அளித்து உள்ளார்.
வில்லன் மணிமாறன் பற்றி
சாதி வெறியுடன், சங்கத் தலைவராக வரும் வில்லன் மணிமாறன் மிரட்டி இருக்கிறார். மற்றவர்களும் நிஜமான கிராமத்து மனிதர்களை கண் முன் நிறுத்தி உள்ளனர்.
ஒளிப்பதிவாளர்
ஒளிப்பதிவாளர் கே.ராஜசேகர், கிராமத்து காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து உள்ளார்.
நாயகன் லோகு பத்மனாபனே இசை அமைத்து உள்ளார். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோரின் வரிகள் சிறப்பு.
ஏ.டி.ராம் அமைத்துள்ள பின்னணி படத்துக்கு பலம். .
சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி ஆகியோரின் நடன வடிவமைப்பு, மெட்ரோ மகேஷ் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இரண்டுமே ரசிக்க வைக்கின்றன.
: ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்படடுள்ள இந்த படம் 2004 ஆம் ஆண்டு நடக்கும் கதைக்களம்
ஆரம்பக் கட்சியிலே அந்த கிராமத்தில் வக்கீலுக்கு படிக்க சென்னைக்கு புறப்படும் ஒரு இளைஞன் கண்ணகி என்ற மேல் ஜாதி பெண்ணின் தேவையில்லாத பழக்கத்தினால் கொலை செய்யப்படுகிறார்
கொலை செய்யப்பட்ட அண்ணனின் தங்கை அவளையாவது நல்லபடி படிக்க வைக்க வேண்டும் என்று இந்த தலித் தகப்பனார் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்
அதற்கும் இடைஞ்சலாக அதே ஊரைச் சேர்ந்த மேல் ஜாதி கதாநாயகன் அந்த பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்கிறார் அந்த பெண் எவ்வளவோ மறுக்கிறார்
இதை எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்கள்*
கடைசியில் கதாநாயகனால் அவள் கற்பையும் இழக்கிறார் திருமணம் செய்து கொள் என்று கேட்கும் பொழுது கதாநாயகன் இப்போது வேண்டாம் உன் கருவை கலைத்து விடு என்கிறான்
முடியாது என்று சொல்லி நான் போலீஸ் ஸ்டேஷன் போவேன் என்று நாயகி மிரட்ட மேல் ஜாதியைச் சேர்ந்த நாயகன் தன் நண்பர்களிடம் உதவி கேட்க அந்த ஊரில் வேலை வெட்டி இல்லாமல் தெரியும் சில ரவுடி மேல் ஜாதி கும்பல் எங்களுக்கு ஜாதி தான் முக்கியம் என்று அந்த ஊரிலே இருக்கும் பெரிய நாட்டாமை ஒருவரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை சீரழித்து கொல்ல துடிக்கிறார்கள்
அந்த காட்சிகள் பரபரப்பாகவும் பாதிக்கப்பட்ட பெண்மீது பரிதாபமாகும் படமாக்கப்பட்டு இருக்கிறது
அப்போது நாயகன் வந்து அவர் களைஎல்லாம் அடித்துப் போட்டுவிட்டு அந்த பெண்ணை காப்பாற்றி நீ தான் எனக்கு உலகம்
என்று பாசிட்டிவாக கதையை முடிக்கிறார். படத்தை பாசிட்டிவாக முடித்து இருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்
இந்த படத்தில் தலித் மக்கள் கிராமத்துக்குள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல காட்சியில் இயக்குனர் காட்டியிருக்கிறார்
1) நாயகின் அப்பா துண்டை தோள் மீது போட்டுக்கொண்டு வரும் பொழுது மேல் சாதியைச் சேர்ந்தவர்கள் என்னடா துண்டு தோல் மேல் போட்டு கொண்டு வருகிறாய் எடுத்து அக்கில் வை என்று சொல்கிறார்கள்
(2) அதேபோல வக்கீலுக்கு படித்த நாயகியின் அண்ணன் எந்த தவறுமே செய்யாமல் கண்ணகி என்ற மேல் ஜாதிக்கார பெண் திமிரால் அவள் விரும்புவதால் அவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்
இப்படி எல்லா ஊரிலுமே தலித் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்
என்று சொல்ல வருகிறார் இயக்குனர்
படத்தில் நடித்த அனைவரும் பொறுப்போடு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ஜெய் பீம் மொசக்குட்டி காமெடி அவர் பல பெண்களுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பது போலவும் அதை கதையோடு ஒட்டி வருவது வரும் காட்டி இருக்கிறார்
நாயகியின் அப்பா மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷன் அலைவதும் அதற்கு வில்லனை பழிவாங்கவும் என கச்சிதமாக நடித்திருக்கிறார்*
மொத்தத்தில் இந்த படம் தலித் மக்கள் மீது தவறு இல்லாமலேயே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதே உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்*
மொத்தத்தில் இந்த செம்பியன் மாதேவி கிராமங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளை அப்பட்டமாக சொல்லி இருக்கிறது இனியாவது திருந்துமா இந்த தமிழ் சமூகம்
