*அர்ஜுன்
– நிக்கி கல்ராணி – கிரீஷ் நெய்யர் ஹரிஷ்பெரடி ,பைஜ்சந்தோஷ்,அஜிவர்கீஸ், முகேஷ்,சோனா, நடிப்பில்*
இயக்குனர்: தாமர கண்ணன்
தயாரிப்பாளர்: கிரீஷ் நெய்யர்
எழுத்தாளர்: தினேஷ் பள்ளத்
இசை: ரதீஷ் வேகா
பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன்
ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர்
எடிட்டர்: வி.டி.ஸ்ரீஜித்
மக்கள் தொடர்பு – சரண் இவர்கள் பங்களிப்பில் இப்படத்தை
தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியிடுகிறது. – டி நாராயணன் ஃபிலிம்ஸ்
கதை களம்
கே .டி இன்ட்ர்ஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சிட்கோ பிரஸிடெண்ட்மான ஜான் ஆபிரகாம்(முகேஷ் ) ஏற்காடு செல்லும் வழியில் எதிரிகளால் வழிமறித்து கொலை செய்யப்படுகிறார்.
இவரது மனைவி எலிசபெத் ராணி(சோனா)தேவநாரயணனனை சந்திக்க காரில் போகும்போது ஒரு லாரியால் ஆக்சிடென்ட் செய்யப்பட்டு இறந்து போகிறார். இவரது மகள் தான் நிக்கி கல்ராணி(பெர்லி) இவரையும் அந்த கொலைகார கும்பல் துரத்துகிறது. அவர் தப்பித்து காட்டுக்குள் சென்று அர்ஜுனனிடம் அடைக்கலம் ஆகிறார்.
ஜான் ஆபிரகாம் ஏன் கொலை செய்ய பட்டார்?
அவரது மனைவி எலிசபெத் ஏன் கொலை செய்ய பட்டார்?
அர்ஜுனன் யார்? நடந்தது என்ன? என்பது தான் கதை,
திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது அந்த அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக பரபரப்பாக போகிறது
மக்கள் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம் , கெட்ட ஆவி, தீய சக்தி , புதையல் என மோசடி செய்து வரும் மந்திரவாதிகள் மற்றும் மதரீதியான சில அமைப்புகள் தான் இந்த நரபலிக்கு காரணம் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும், நரபலிக்கு தனது மகன், மகளையே கொல்லும் அளவிற்கு செல்லும் பெற்றோர்கள் இன்று முட்டாள்தனம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது..
நரபலி கொடுத்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்றுவிடலாம் அல்லது சாத்தானை நேரில் சென்றடையலாம் என்று எந்த மதமும் போதனை செய்யவில்லை. இந்த காலத்திலும், படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நரபலி என்னும் மூட நம்பிக்கையின் பின்னால் அணிவகுத்து செல்வது தான் கவலை தரும் அதிர்ச்சிச் செய்தியாக உள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பு எப்படி?
தேவ நாராயனண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் படத்தில் தேவ நாராயனண் வேடத்தில் நடித்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது முன்னாள் காதலி எலிசபெத் ,
அவரது கணவர் ஜான் ஆபிரகாமு க்கு தொழில் பிரச்சனை ஏற்பட மனித நேயம் கொண்டு உதவி செய்கிறார் . ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுன் மீது சந்தேகப்படுகிறார் அதற்கெல்லாம் இடைவேளைக்குக்கு பிறகு அர்ஜுனன் விளக்கம் தருகிறார் இடைவேளை வரை அர்ஜுனன் யார்? என்ன செய்கிறார்? அவர் தொழில் என்ன? என்பதை சஸ்பென்சாக கொண்டு சென்று இருக்கிறார்கள் அர்ஜுனுக்கு இந்த படம் ஆக்சனுக்கு மிக தீனி போட்டு இருக்கிறது.

நிக்கி கல்ராணி நடிப்பு எப்படி
இந்த படத்தில் தொழிலதிபரின் மகளாக நடித்திருக்கிறார். தன் அப்பா அம்மா தன் கண் முன்னாலே இறந்து போக யார் அவரை கொலை செய்தது என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பு காட்டுக்குள் தப்பி ஓடுவது கடைசி காட்சியில் நடக்கும் அட்டூழியம் இது எல்லாம் கண்டு மிரண்டு போகிறார் பல நாட்களுக்கு பிறகு நிக்கி கல்ராணிக்கு நடிப்பதற்கு நல்ல தீனி நன்றாக நடித்து இருக்கிறார்
ஹரீஷ் பெரடி
நிக்கி கல்ராணி தாத்தாவாக வரும் ஹரிஷ் பரடி மிரட்டி இருக்கிறார் மூடநம்பிக்கையின் உச்சமாக வரும் இவர் சம்பந்தபட்ட காட்சிகள் படத்தின் ஹைலைட் !
அந்த காட்சிகள் பரபரப்பாக இருக்கிறது அவர் யார் என்பதை சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்துவிடும் ஆனால் அவர் நடிப்பு மட்டும் நன்றாக இருக்கிறது
கதை எழுதிய தினேஷ் பள்ளத்
கதை திரைக்கதை வசனம் எழுதி இருப்பவர் தினேஷ் பள்ளத் மூடநம்பிக்கையின் பேரில் நாட்டில் நடக்கும் முட்டாள்தனங்களை தோலுரித்துக் காட்டி இருக்கிறார் விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார்
படத்தில் யூகிக்க முடியாத அளவுக்கு கதையை கொண்டு சென்று உள்ளார்.
இசை எப்படி?
ரதீஷ் வேகா, இசையில் நெஞ்சில் ஒரு வலி பாடலும், அந்த கல்யாண பாடலும் ,ரசிக்க வைக்கிறது பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் காட்சிகள் பரபரப்பாக போவதற்கு இசை முக்கிய அம்சமாகும்
நிக்கி கல் ராணி யை காப்பாற்றி படத்தில் முக்கிய பங்கு வகித்த தயாரிப்பாளர்
படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் நெய்யார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநராக தன் அப்பா புதன்கிழமை அன்று புற்றுநோயால் இறந்ததால் அந்த ஒரு நாள் இலவசமாக புற்று நோயாளிகளுக்கு ஆட்டோ ஓட்டுவதும், இரவில் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் கேட்பார்கள் என்பதால், குடிப்பதில்லை என்று சொல்வதும், தன் தங்கையின் கல்யாணத்திற்காக மெனக்கெட்டு அலைவதும் ,தன் மச்சான் கடனாளி யாக இருக்கிறான் என்று அவனுக்கு உதவ முன் வருவதும், நிக்கி கல்ராணியை கடைசி வரை காப்பாற்ற துடிப்பது என்று கிரீஷ் நெய்யார் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளராக இருந்து கொண்டு முக்கியமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்தி ருக்கிறார் வாழ்த்துக்கள் கிரீஷ்
ஒளிப்பதிவாளர்
ரவிச்சந்திரன், பிரதீப் நாயர் காடு, மற்றும் கிளைமாக்ஸ், காட்சியில் சத்தான்களுடன், மல்லுக்கட்டும் காட்சிகள் ஆகட்டும் நிக்கி கல்ராணி வீடு, அர்ஜுனன் வீடு, மற்றும் மலைப்பகுதியில் வளைவான பகுதிகள் என ஒளிப்பதிவாளர் மிரட்டி இருக்கிறார் படத்தில் ஒளிப்பதிவு பெரும் பங்கு வகிக்கிறது
வெற்றிக்கு.
படத்தொகுப்பு
வீ டி ஸ்ரீஜித் கச்சிதமாக படத்தை செதுக்கி இருக்கிறார் ஆரம்பத்தில் எலிசபெத் செவன் ஹில்ஸ் சென்றால் விடை கிடைக்கும் என்பதற்கும் அர்ஜுனன் யார்? என்று பதில் சொல்வதற்கும்
ஜான் ஆபிரகாம் கொலை செய்யப்படுவதற்கு என்ன காரணம் என்பதற்கும்
படத்தில் கடைசியில் முடிச்சு போடுவது படத்தொகுப்பு தான் படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் கச்சிதமாக இருக்கிறது
பாலன் கதாபாத்திரம்
கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த பாலன்(பைஜ் சந்தோஷ்)என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர் நடிப்பு கம்பீரமாக இருக்கிறது
கடைசி வரை நிக்கி கல்ராணிக்கு துணை நிற்கும் அந்த கதாபாத்திரம் கம்பீரமாக இருக்கிறது

படத்தின் இயக்குனர் தாமரைக்கண்ணன்
நல்ல ஒரு நல்ல விறுவிறுப்பான திரைக்கதை . அது எப்படி படம் ஆக்கினால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற கோணத்தில் உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் படமாக்கிய விதம், பரபரப்பான திரைக்கதை, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் என்ன நடக்கிறது என்பதை சீன் பை சீன் விறுவிறுப்பாக சொல்லி,
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் படம் உண்மை சம்பவம் என்றாலும் அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இருப்பது படத்தின் சிறப்பு. ஆக்ஷன் கிங் அர்ஜுனனை எப்படி மக்களுக்கு காட்ட வேண்டுமோ அவரிடம் என்ன வேலை வாங்க வேண்டுமா அதை சிறப்பாக வாங்கி படத்தில் நடிக்க வைத்த பெருமை இயக்குனரையே சாரும் . ஒரு நல்ல படத்துக்கு நல்ல கதை, நல்ல இயக்கம், நல்ல பாடல், நல்ல ஒளிப்பதிவு , என நல்ல படத்துக்கு தானே அமைத்து கொள்ளும் அது இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி
மக்கள் தொடர்பாளர் சரண்
படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு சென்று சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்: இப்படத்தை நாராயணன் பிலிம்ஸ் வெளியிடுகிறது அவர்களுக்கு இது ஒரு வெற்றி படமாக அமையும். “*மொத்தத்தில் இந்த விருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகட்டாத விருந்தாக அமையும். ஆக்சன் கிங் அர்ஜுனன் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக அமையும்
நிக்கி கல்ராணியின் ரசிகர்களுக்கு அவரது அழகு இந்த படத்திற்கு ஒரு விருந்தாக அமையும்
தாமரைக்கண்ணன் இயக்கத்தில் இந்த விருந்து அறுசுவை விருந்து எல்லோருக்கும் பிடிக்கும்* எல்லோரும் ரசிப்பார்கள் நிச்சயம் தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டிய படம். இயக்குனர் மூடநம்பிக்கை க்கு எதிராக சாட்டையை எடுத்து சுழற்றி இருக்கிறார் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் நல்லது சிறந்த திரைக்கதை விறுவிறுப்பு குறையாத கதைக்களம் திரில்லர் திரைப்படமான விருந்து நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து தான்
