இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவான” காளி யாட்டம்” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாடல்கள் முன்னோட்ட விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது
இந்த விழாவில் மக்கள் தொடர்பாளர் சங்கத் தலைவர் என். விஜய முரளி, மற்றும் மக்கள் தொடர்பாளர் சங்க முன்னாள் செயலாளர் பெரு .துளசி பழனிவேல், வினியோகிஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி சேகரன், இதன் பொருளாளர் தரணி குமார், மற்றும் கவிஞர் இளைய கம்பன், இப்படத்தின் இசையமைப்பாளர் சார்லஸ் மெல்வின், ஆர்ட் டைரக்டர் வெங்கட் , கில்ட் சங்க தலைவர் ஜாக்குவார் தங்கம் என…. பலர் கலந்து கொண்டனர்
இவ்விழாவில் : கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் பேசும்பொழுது…

பாடல் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு பட த்திற்கு முன்னோட்டமே படத்தின் வெற்றியை சொல்லிவிடும் சண்டைக் காட்சி இதில் இணைத்து இருக்க வேண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் அம்மா, அப்பாவை மதியுங்கள் பெற்ற தாய் தந்தைக்கு பணிவிடை செய்யுங்கள் குனிந்து படித்தால் நிமிர்ந்து வாழலாம் தமிழன் வென்றே தீர்வான் என்றார்
அடுத்து பேசிய நடிகர் ராஜசிம்மன்…

9 வருடங்களுக்கு முன்னே இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் ராமர் படத்தில் நடித்தேன் அப்போது நிறைய சர்ச்சைகள் இருந்தது இப்போதும் இந்த படம் பேசப்படும் என்றார்
இசையமைப்பாளர் சார்லஸ் மில்வின் பேசும் பொழுது
ராமர் படத்தில் நிறைய சர்ச்சைகள் இருந்தது கடலூரில் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் சென்னை வந்து டப்பிங் பேசுவதற்கு நேரம் இல்லை என்றார்
இந்த படத்தின் கிளுகிளுப்பான பாடல் பேசப்படும்
என்றார்.

மக்கள் தொடர்பாளர் பெரு. துளசி பழனிவேல் பேசும் பொழுது…
சிவன் பாடல் நன்றாக இருந்தது அதை எழுதிய பரணி குமாருக்கு வாழ்த்துக்கள் முன்னோட்டம் நன்றாக இருந்தது படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றார்
விநியோக சங்க செயலாளர் கலைப்புலி ஜி சேகரன் பேசும் பொழுது….

கதை தான் முக்கியம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக தியேட்டர் படங்களை வெளியிட்டு தருவார்கள் எங்கள் வினியோகிஸ்தர் சங்கத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் சின்ன படங்களுக்கு பிசினஸ் செய்து தருவதாக நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம் மஞ்சுமல் பாய்ஸ் முதலில் ஒரு சோ கொடுத்தார்கள் படம் நன்றாக போனதும் இரண்டானது மூன்றானது ஐந்தானாது. இப்படி படத்தின் கண்டன்டு தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும்
இன்று வெளியாகியுள்ள கோட் திரைப்படம் பெரிய ஓபனிங் வசூல் செய்துள்ளது எனவே எனவே நல்ல கதைகளை தேர்வு செய்து படம் ஆக்குங்கள் தியேட்டர் நிச்சயம் கிடைக்கும்
அந்த வகையில் காளியாட்டம வெற்றி படமாக வந்திருக்கிறது என்று பேசினார்…

நன்றி உரையாற்றிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் ஆதிராஜன் பேசும் பொழுது
படம் முழுவதும் கடலூரில் படம் ஆக்கினோம் அந்த ஊர் மக்களையே நடிக்க வைத்தோம் இந்த படத்தில் வரும் ஒரு கிளுகிளுப்பான பாடலை ஒரே நாளில் படமாக்கினோம் இப்பொழுது கூட பணத்துக்காக தான் அழைந்து கொண்டு இருந்தேன். னவே பத்திரிகையாளர்கள் மக்களிடம் இந்த படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்…..

மேலும் இந்த விழாவிற்கு வந்திருந்த இப்படத்தின் கேமராமேன் ,பாடலாசிரியர் பரணிதரன், ஆர்ட் டைரக்டர் வெங்கட், தயாரிப்பாளர் நடிகர் இயக்குனருமான ஆதிராஜன் மகன் வருண் இவர்கள் எல்லோருக்கும் விழா சார்பில் பொண்ணாடை போடப்பட்டது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை சிவ நந்தினி நன்றாக தொகுத்து வழங்கினார் இப்படத்தின் மக்கள் தொடர்பாளரான திரு வெங்கட் அவர்கள் அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்புடன் நடத்தினார் காளியாட்டம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லோரும் வாழ்த்தினார்கள் கிளாசிக் சினிமா இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறது
