இப்படத்தில் டொவினோ தாமஸ், அஜயன், குஞ்சிகேளு, மணியன் என மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். பேசில் ஜோசப், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனைவரின் நடிப்பு இயல்பாகவும் ரசிக்கும்படி உள்ளது.
இயக்குநர் ஜிதின் லால் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
புது விதமான யுக்தியை ‘ஏ.ஆர்.எம்’ படக்குழுவும் பயன்படுத்தியுள்ளதுது. அது என்ன வாங்க பார்க்கலாம்
படத்தின் ஒரு ஃபேண்டஸி எலமென்டுக்கு மோகன் லால், விக்ரம், சிவ ராஜ்குமார் என மூவரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்ப் பதிப்பில் விக்ரம் குரலும், மலையாளப் பதிப்பில் மோகன் லால் குரலும், கன்னடப் பதிப்பில் சிவ ராஜ்குமார் குரலும் சேர்க்கப்பட்டிருக்கிறது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
படத்தின் ஆரம்பத்தில் ஒரு எரிகல், சியோதி என்கிற ஊருக்குள் விழுகிறது அதை அந்த ஊர் ராஜா விளக்காக மாற்றுகிறார். அதன் பிறகு ஒரு கொடியவனால் ராஜா அடக்கம் முறை செய்யப்படும் போது அப்போது ஒரு வீரன் அங்கு வந்து ராஜாவை காப்பாற்றி ஏரிகற்களால் செய்யப்பட்ட விளக்கு வேண்டும் என்று கேட்கிறான் ராஜா மனம் இல்லாமல் அதை எடுத்துக் கொடுக்கிறார் அதன் பிறகு கதைக்களம் விரிகிறது.
விலைமதிப்பற்ற அந்தப் பொருள் ஒரே பரம்பரையைச் சேர்ந்த மூன்று நபர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்தது என்பதே ARM படத்தின் கதை. இதற்குள் காதல் , தீண்டத்தகாத ஜாதி, கள்வன் என்ற வீண் பழி சுமத்தல், மற்றும் பேண்டஸி இவைகளை கலந்து, கதை சொல்லி இருக்கிறார்கள் கிளைமாக்ஸ் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
கேரளாவின் ஹரிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஜயன் (டோவினோ தாமஸ்), அதே ஊரிலுள்ள செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மியை (கீர்த்தி ஷெட்டி) காதலிக்கிறார். களரி, மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது என அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் அவரை சில களங்கங்களும் பின்தொடர்கின்றன. ஒரு காலத்தில் கிராமத்தின் கோயிலிலிருந்த விலையுயர்ந்த சியோதி விளக்கைத் திருடிச் சென்றது அவரது தாத்தா மணியன் (டோவினோ தாமஸ்) என்பதாலும், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அஜயனைத் திருடனாகவே பார்க்கிறது அந்த கிராமம்.
அந்த ஊருக்கு அந்த விளக்கை திருட வரும் ஹரிஸ் உத்தமன் டோவினோ தாமஸுக்கு ஒரு செக் வைக்கிறார் அது என்ன அது படத்தின் டுவிஸ்ட்.
அந்த செக்கை டோவினோ தாமஸ் முறியடித்தாரா? அந்த ஊர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றாரா? தன் அம்மாவை தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்த அந்த ஊர் முன்னிலையில் கோயிலுக்குள் நுழைவதற்கு ஏற்பாடு செய்தாரா? தன் பாட்டி சொல்லும் கதைகளை கேட்டு தன் தாத்தாவின் மணியனின் கதையில் டோவினோதாமஸ் தெரிந்து கொண்டது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இப்படம்.

டோவினா தாமஸ் நடிப்பு எப்படி? உள்ளம் கவர்ந்த கள்வனா? ஊருக்கு உதவும் நண்பணா
குஞ்சி கெழு, மணியன், அஜயன் என மூன்று தலைமுறை க்கான நடிப்பை வழங்கி இருக்கிறார் டொவினோ தாமஸ்,
அஜயனும் மணியனும் காட்சிக்குக் காட்சி மாறி வந்தாலும் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசங்களை தன் உடல்மொழியில் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார். இது டொவினோவுக்கு ஐம்பதாவது படமும்கூட! அதற்கான நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்துச் சதமடித்திருக்கிறார்.
மணியனாக அவர் வரும் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது கர்ஜிக்க வைக்கும் ஒரு சிங்கத்தைப் போல ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார் ஊர்மக்கள் முன்னிலையில் அடி வாங்கும் போதும், தன் மனைவியிடம், கொஞ்சும் போதும், நடிப்பு சூப்பராக இருக்கிறது. அஜயனாக வரும் இன்னொரு தாமஸ் நடிப்பு சாந்தமாகவும், காதலியிடம், ரொமான்ஸ் செய்யும்போது எதார்த்தமாக நடித்திருக்கிறார். கலரி விளையாடும் போது ஆக்ரோஷமாகவும், அம்மா ரோகினி இடம் பேசும்போது அன்பானவராக, அசத்தலாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
மூன்று நாயகிகள்
இப்படத்தில் மூன்று டொவினோ, மூன்று நாயகிகள் என ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்கள். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பெரிதாக வேலையில்லை. சுரபி லக்ஷ்மிக்குக் குறைவான திரை நேரம் என்றாலும் மனதில் நிற்கும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்
அவர் உற்றுப் பார்த்து எதையோ சொல்ல வரும் அந்த பார்வையில் ஒரு தீர்க்கம் இருப்பது படத்தில் நம்மால் உணரமுடிகிறது.
கீர்த்தி ஷெட்டி
காதல் காட்சிக்கு மட்டும் வந்து போகிறார் கீர்த்தி ஷெட்டி. அழகு பதுமையாக, கிக் ஏற்றும் பார்வை. கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வரும் நிஸ்தர் சைத், பிளாக் மெயில் செய்யும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பொற்கொல்லனாக வரும் நடிகர் ஜெகதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார் .
ஒளிப்பதிவாளர்
இருள் கலந்த கலவை மூன்று கால கட்டத்தில் நடக்கும் கதை லைட் வெளிச்சத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜோமன் டி.ஜான். இரவு நேரக்காட்சிகளையும், அருவியைச் சுற்றியுள்ள ரம்மியமான இயற்கைக்காட்சிகளையும் அற்புதமான கோணங்களில் செதுக்கியிருக்கிறார்
ஆர்ட் டைரக்டர்
கோகுல் தாஸின் புதையல் வேட்டைக்கான வழித்தடத்தில் சாகசம் புரிந்திருக்கிறது. கோவில், அந்த விளக்கு ,டொவினோ தாமஸ்வீடு, கீர்த்திசட்டியின், வீடு என பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.

படத்தொகுப்பாளர் ஷமீர்
படத்தைக் கச்சிதமாக தொகுத்து இருக்கிறார் இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து புரியும்படி எடிட் செய்திருக்கிறார்
முகம்மது. திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் ரசிக்க வைக்கிறது , பின்னணி இசை ஆக்ரோஷமாக வந்து உள்ளது கேரளாவில் வாழும் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகளைப் பிரதிபலித்திருக்கிறது சுஜித் நம்பியாரின் எழுத்து. அதற்குக் காட்சிக்குக் காட்சி தொழில்நுட்ப ரீதியாக நல்ல மேக்கிங்கைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால்.
“இது மன்னராட்சி அல்ல, ஜனநாயக ஆட்சி” போன்ற வசனங்களிலும், பிறப்பின் அடிப்படையில் ஒருவனது குணாதிசயத்தைப் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்திலும் எழுதப்பட்ட காட்சிகளுக்குப் பாராட்டுகள்.
மொத்தத்தில் ஒரு வரலாற்றுக் கதைக்கான நல்ல மேக்கிங், சிறப்பான கதைக்களம் சிறப்பான திரைக்கதை `அஜயனின் இரண்டாம் திருட்டு’ (ARM) நமது மனதை முழுமையாக திருடி உள்ளது
ஒரு இரண்டரை மணி நேரம் மூன்று காலகட்டங்களில், நடக்கும் கதை எல்லாமே ரசிக்க வைக்கிறது. டோவினோ தோமஸ் தான் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதை இந்த படத்தில் நூறு சதவீதம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அவ்வளவு அருமையாக இருக்கிறது. அவரின் உழைப்பு நன்றாக தெரிகிறது மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களை கவரும் நிச்சயமாக இது ஒரு வெற்றி படம்தான்.
