குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!
அப்பா மீடியா சார்பில், லக்ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள “எங்க அப்பா” இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்!
விழாவில் பேபி லக்ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!

அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் நினைவுப் பரிசு வழங்கி, பாராட்டினார்கள்! இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பேசும் போது இந்த எங்க அப்பா ஆல்பம் சாங் பார்த்தபோது லட்சனா ரிஷி மென்மேலும் உயர்வார் அவர் இலட்சியத்தை அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் அவர் பெயர் லட்சனா ரிஷி ஆனால் நான் லட்சிய ரிஷி என்று தான் சொல்வேன் இப்பொழுது அழகாக ஆடி பாடி நடித்திருக்கிறார் இதை பார்க்கும் பொழுது என் அம்மாவின் அப்பாதான் ஞாபகத்துக்கு வருகிறது என் அம்மா இறந்த பிறகு என் அம்மாவின் அப்பா எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எல்லாம் பயந்து கொண்டிருந்தோம் அதேபோல அவரும் அம்முலு போய் விட்டால் என்று புலம்பிக் கொண்டே இருந்தார் அப்படி தன் மகள் மீது பாசம் வைத்திருந்த அப்பாவைக் கண்டு நான் கலங்கி போனேன் அதேபோல லட்சனா ரிஷி அப்பாவும் தன் மகள் மீது நம்பிக்கை வைத்து அறிமுகப்படுத்துகிறார் மென்மேலும் வளருவார் என்றார். அடுத்து பேசிய இயக்குனர் பேரரசு அவர்கள் நான் சினிமாத்துறைக்கு வந்து உதவி இயக்குனராக முதன் முதல் வாங்கிய சம்பளம் அந்த பணத்தை என் அப்பாவுக்கு ஒரு வெள்ளி மோதிரமாக செய்து போட்டேன் அதை நினைக்கும் போது இப்பொழுதும் எனக்கு கண் கலங்குகிறது அப்பாவின் பாசத்திற்கு ஈடு இணை ஏற்றது என்றார் லட்சனா ரிஷி திரைத்துறையில் மேலும் சாதிப்பார் என்று வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தி பேசினார் மற்றும் மீசை ராஜேந்திரன் கேப்டனை பற்றி பேசிவிட்டு லட்சனா ரிஷி யை வாழ்த்தி பேசினார் மற்றும் இந்த விழாவுக்கு வந்த காமெடி நடிகர் கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது பேபி லக்ஷனா ரிஷி மேலும் வளர்ந்து திரைத்துறையில் சாதனை புரிய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது
