பிளாக் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

பொடன்ஷியல் ஸ்டுடியோ கம்பெனி படம் தயாரிக்கிறார்கள் என்றாலே அது தரமான படமாக இருக்கும். மாயா ,மாநகரம், மான்ஸ்டர், டாணாக் காரன் ,இறுகப்பற்று, எப்போதுமே வலுவான கதையை மட்டும் நம்பி படங்களை தயாரிக்கிறது . இந்த பொடேன்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த நிறுவனம் தயாரித்த பிளாக்பட விமர்சனம் பார்க்கலாம் வாங்க

ஒளிப்பதிவு கோகுல்

மிரட்டி இருக்கிறார் இரவு நேரத்தில் குறைவான வெளிச்சத்தில் அருமையான கேமரா கோணத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்

பிலோமின் ராஜ்

படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் கொஞ்சம் பிசுங்கி இருந்தாலும் படம் புரியாமல் போயிருக்கும் படத்தொகுப்பு பாளருக்கு வாழ்த்துக்கள்.

சாம் சி எஸ் இசை மிரட்டலாக இருக்கிறது படத்தை ஒவ்வொரு நொடியும் நம்மை விரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் பின்னணி இசை சூப்பர். ஆரம்பத்தில் வரும் அந்த இரண்டு பாடல்களும் தேவையில்லாத ரகம் என்றாலும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்

இந்த படத்தை பிரபல வினியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் எஸ் எஸ் ஐ மூலம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி வெளியிடுகிறது.

அறிமுக இயக்குனர் பாலசுப்பிரமணியம் தனித்துவமான கதையை மெருகேற்றி தந்திருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல் இடைவேளை வரை என்ன நடக்கிறது இது அமானுஷ்யமா? அல்லது யாராவது செய்யும் வேலையா? என்பதை மிரட்சியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் பங்கு மிகச் சிறப்பு.

Casting : Jiiva, Priya Bhavani Shankar, Vivek Prasanna, Yogi JP, SaaRaa, Swyam Sidha, Directed By : KG Balasubramani, Music By : Sam CS, Produced By : Potential Studios LLP – SR. Prakash Babu, SR. Prabhu, P.Gopinath and Thangka Prabhakaran.R.

படம் ஆரம்பிக்கும் போது ஒருவித திகிலோடு மனோகர் அதாவது விவேக் பிரசன்னா தன்னை காதலிக்காத ஒரு பெண்ணையும் அவள் காதலித்த காதலியையும் ,காரில் கூட்டி வருகிறார் வஞ்சகமாக அவர்களை கொள்ள நினைக்கும் பொழுது அவருக்கு முன்னால் காதலர்களை கொன்றுவிட்டு ஒருஉருவம் போகிறது . அந்த உருவம் யார்? என்று துரத்திக் கொண்டு போக திரும்பிப் பார்க்கிறது அதுவும் விவேக் பிரசன்னா தான் திகிலோடு படம் ஆரம்பிக்கிறது.

பின்னர் யாரும் குடியேறாத வில்லா வில், ஜீவா – பிரியா பவானி சங்கர் ஜோடி தங்களது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அங்கிருக்கும் வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு காவலாளி திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் இருவரும், நடப்பது கணவா? அல்லது நிஜமா? என்று குழப்பமடைகிறார்கள்.

படம் பார்ப்பவர்களுக்கு இது அமானுஷ்யமா? முன்னாள் இறந்து போன 1964 இறந்த ஜோடியான அந்த காதலர்களின் வேலையா ?என்ன நடந்திருக்கும் என்று ஒரே குழப்பம்!

ஏதோ ஒன்று நிகழப்போகிறது! என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியாமல் போவதோடு, தொடர்ந்து அவர்களை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. அதன் பின்னணி என்ன? என்பதை திகில், மர்மம், திரில்லர் என அனைத்துவிதமான உணர்வுகளோடு அறிவியலையும் சேர்த்து சொல்வது தான் ‘பிளாக்’.. இந்தப் படத்தை தனியாக உட்கார்ந்து பார்க்கும் காதல் ஜோடிகளுக்கு பயப்படாமல் இருந்தால் பரிசுத்தொகை . என்று பட குழு அறிவிக்கலாம் அந்த அளவுக்கு பயமுறுத்துகிறது.

வெகு நாள்களுக்குப் பிறகு சவாலான வேடத்தில் ஜீவா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற குழப்பம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைகிற இடம் என்று கதையின் மொத்த பாரத்தையும் தன்மேல் ஏற்றிக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல படம் பார்க்கும் நம்மையும் குழப்பத்தில் உச்சிக்கே கொண்டு செல்கிறார் ஜீவா அற்புதமான நடிப்பு.

இரண்டு நபர்களை மையப்படுத்திய கதை என்பதால் நாயகியாகக் கூடுதல் பொறுப்புடன் பிரியா பவானி சங்கர்! பல இடங்களில் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தாலும் பதற்றம், குழப்பம், கோபம் என தன் பங்குக்கு நன்றாக செய்திருக்கிறார் பிரியா பவானி சங்கர் ஜீவா மது அருந்தும் போது, மது அருந்தக்கூடாது என்று கண்டிஷன் போடுவதும், ஏதோ நடக்கப் போகிறது என்று தலையில் கை வைத்து கவலையில் அழும் பொழுதும் பிரியா பவானி சங்கர் உண்மையான ஒரு மனைவியின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்

ஜீவா தேவையற்றவருடன் சண்டைக்குப் போகும் பொழுது எந்நிலையை எண்ணிப் பார்த்தாயா? என்று அவர் கேட்கும் பொழுது எந்த மனைவியும் கேட்க தோன்றும் கேள்வி தான் ப்ரியா பவானி சங்கருக்கு மீண்டும் ஒரு வெற்றி படம்.

இளமையில் வில்லத்தனமான நடிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கும் விவேக் பிரசன்னா, வயதான தோற்றத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியாரை ஞாபகப்படுத்துகிறார்
வெல்டன்

நாயகனின் நண்பனாக ஷாராவுக்கு ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யோகி ஜேபி, சிந்தூரி ஆகியோரும் வந்துபோகிறார்கள்.

ஒரு அறிவியல் சார்ந்த கதையை இவ்வளவு திகிலோடு கொடுக்க முடியுமா என்ன? தயாரிப்பாளர்களின் திறமையான கதை தேர்வு இயக்குனரின் திறமையான பங்களிப்பும், ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளிப்பதிவும், இசையமைப்பாளரின் மிரட்டலான இசையும் ஜீவா, பிரியா பவானி சங்கரின் ,நடிப்பும் ஒருங்கே இணைந்து பிளாக்”படத்துக்கு நிறைய வெளிச்சத்தை கொடுக்கிறது.