Xtreme திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.

Human அப்படின்றதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான்.
அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம்.

சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் பண்ற சில சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்கு தீர்வு சொல்லுவதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர்

.
பெண்களுக்கான வன்முறை இன்று அதிகம் நடந்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது எனவே ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்துகிறது இந்த படம்
இளம் காதலர்கள் பொதுவெளியில் பழகும் பொழுது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதை சொல்லுகிறது

இந்த படம் எல்லா பெண்களும் அப்படியா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம் சில குறிப்பிட்ட பெண்களை தான் இந்த படம் சுட்டி காட்டுகிறது.
பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பா Accept பண்ணுவாங்க அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் சொல்லியிருக்கிறதுஇந்தபடம் :
முழுக்க முழுக்க பெண்களுக்கான படம் ” Xtreme ” எக்ஸ்டிரீம்

இந்த படத்தில்
” பிக்பாஸ் பிரபலம் ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் அயலி பிரபலம் அபி நட்சத்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

SIEGER PICTURES என்ற பட நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார். N ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக உருவாக்கி இருக்கிறார்கள்
இப்போது நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துள்ள கதையை தேர்வு செய்து தயாரித்தற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்

ரக்ஷிதா மஹாலஷ்மி

(ஸ்ரேயா) என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக
மிகவும் மிடுக்காக
நடித்திருக்கிறார் குற்றவாளிகளை தேடும் பொழுதும் அம்மாவிடம் திருமணம் செய்து கொள்கிறேன் வீட்டு மாப்பிள்ளை யாக பார் என்று சொல்லும் பொழுது அக்காவிடம் உரிமையாக பேசும் பொழுது அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இனி வரும் படங்களில் அவரை போலீஸ் அதிகாரியாக நிறைய படங்களில் பார்க்கலாம்
அந்த அளவுக்கு கேரக்டரோடு பொருந்தி போகிறார் ரக்ஸிதா

அபி நட்சத்திரா

அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா,
திவ்யா என்ற கதாபாத்திரத்தை அழகாக எல்லோரையும் கவரும்படி நடித்திருக்கிறார்

வீட்டு வேலை செய்யும் ஏழை பெண்ணாக ,தவறு செய்பவர்களை கண்டிக்கும் குணம் உள்ள திவ்யா நம்ம வீட்டு குழந்தை போல அருமையாக நடித்துள்ளார்

பணக்கார வீட்டில் வேலை செய்யும் பொழுது அந்தப் பெண் உடுத்தும் ஆடையை தன் மீது வைத்துப் பார்ப்பதும்,

பாரட்டியில் எல்லோரையும் கவரும் வண்ணம் அற்புதமாக நடனம் ஆடும் போதும்
நன்றாகவே நடித்திருக்கிறார்
படம் முழுக்க அவர் மீது தான் கதை நகருகிறது அழகாகவும் இருக்கிறார் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்

நேரம் படத்தை தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்பட சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
அவர்தான் கொலையாளியா? என்ற கோணத்தில் படம் திசை திரும்புகிறது! ஆனந்த் நன்றாக நடித்திருக்கிறார்

நாயகியாக அம்ரிதா ஷெல்டர்,
கவர்ச்சி பாவையாக
படம் முழுக்க இளமை குலுங்க அனைவரையும் வசீகரிக்கிறார் கதைக்கு தேவையான கதாபாத்திரம் கவர்ச்சி என்பதால் இவரை மன்னித்து விடலாம் அழகான இளம் வரவு கல்கத்தா வரவு

சிவம் வில்லனாக மிரட்டி இருக்கிறார் தூவல் படத்திலும்
வில்லனாக கலக்கியவர் இந்த படத்தில் திவ்யாவுக்கு அனுதாபம் கூறும் நல்ல கதாபாத்திரம் கிளைமாக்ஸ்சில் மிரட்டி இருக்கிறார் இவருடைய கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்கிறது

ஒளிப்பதிவு : D.J. பாலா
ஒளிப்பதிவு செம ரிச் ஆக இருக்கிறது

சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையத்திருக்கிறார்
பின்னணி இசை சூப்பர்.

சாமானியன் படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் கோபி இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார்.
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது
படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்

ஹிப்ஹாப் ஆதி நடித்த படங்களுக்கு நடனம் அமைத்த ராக் சங்கர் நடனம் அமைத்திருக்கிறார்
அந்த பார்ட்டி டான்ஸ் செம சூப்பர்

.
சண்டை பயிற்சியை சிவம் மேற்கொளள
சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம்

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
மக்களிடம் கொண்டு போய் சிறப்பாக சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்– ராஜவேல் கிருஷ்ணா.
இவரது முதல் படமான ” பிழை “சென்னை திடைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ” தூவல்” உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த படமாக சுமார் 40 விருதுகளுக்கு மேல் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதை போல
இந்த “எக்ஸ்ட்ரீம் “படம் மூலம் கமர்சியல் டைரக்டராக வலம் வருவார் என்பது உறுதி
இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் படம்
அதை கடைசி வரை விறுவிறுப்பாக இயக்குநர் கொடுத்துள்ளார்

கதை களம்

திரு முல்லை வாயில்
காவல்துறை அதிகாரியாக இருக்கும சத்ய சீலன் ஒரு கட்டிடத்தில் திவ்யா என்ற இளம் பெண் மர்மமான முறையில் கொலை செய்ய பட்டு கட்டடத்துக்கு பயன்படுத்தும் கான்கிரீட்டில் அவர் சின்னா பின்ன மாக்கி சீரழித்து கிடக்கிறார்

சத்தியசீலன்
விசாரணை நடத்துகின்றார்
அப்போது திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது

போதையில் சுற்றிய வடமாநில இளைஞர்கள்
அவர்கள் கொலை செய்தார்களா?

அல்லது திவ்யா குடியிருக்கும் ஹவுசிங் யூனிட் சார்ந்த ஓட்டேரி நரி குரூப்பைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கொலை செய்தார்களா?

அல்லது ஆனந்த் கொலை செய்தாரா ?

பள்ளி தாளாளரின் தம்பி கொலை செய்தாரா?
என்ற பாணியில் படம் விறுவிறுப்பாக போக

அப்போது புதிதாக வரும் ரக்ஷிதா (ஸ்ரேயா), குற்றவாளியைப் பிடிப்பதற்காக இந்த வழக்கை சத்ய சீலன் உடன் உதவி யாளராக இருவரும் சேர்ந்து குற்றவாளியைக் கண்டறிந்தனரா? என்பதே இந்த `எக்ஸார்ஸிட்

சத்ய சீலன் எனும் காவல்துறை அதிகாரியாக கச்சிதமாக நம் மனத்தில் பதிகிறார் ராஜவேலு. தன் படத்தை நூறு சதவிகிதம் தாங்கி நிற்கவேண்டிய பொறுப்பும் அவரிடமே! அந்தப் பணியைக் குறைகள் இல்லாமல் செய்திருக்கிறார். வெல்டன் சார் இரண்டாம் நாயகி யாகவரும் ரக்ஷிதா நடிப்புக்கு
சபாஷ் போடலாம்

ஆரம்பத்தில் வரும் அந்த ‘கட்டிடத்தில் இளம் பெண் கொலை திகிலூட்டும் காட்சிகள் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இரண்டு மணி நேரம் படத்தின் வேகம் குறையாது பார்த்துக் கொள்கிறார். கிளைமாக்ஸ் பரீட்சார்த்த முயற்சி
இப்படி நடக்குமா என கேட்க வைக்கிறது!

இயக்குனர் ‘இதுதான் முடிவு’ என்று கணித்திட முடியாத சஸ்பென்ஸ் கதையைச் சொல்ல முயன்றிருக்கினறார்பரபரப்பான திரைக்கதை அமைப்பு ‘ என்பதை ஒவ்வொரு காட்சிக்கும்
வழி நெடுக ட்விஸ்ட்ஸ், பிளாஷ்பேக் போன்றவையும் கூடுதல் போனஸ் .

அதே சமயம், படத்தை முழுமையாகப் பார்க்க வைப்பதே திவ்யா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் அவரின் நேர்த்தியான நடிப்பும்தான். வசனங்களும் அவருக்கு மட்டுமே சிறப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது

திவ்யா வைமட்டுமே நம்பி, சுற்றிச் சுற்றி திரில்லர் கதையைச் சொல்லியிருக்கும் இந்த `எக்ஸ்டீரீம்’ சூப்பர் கிரைம் திரில்லர் கதை தான் பில்லர்

திவ்யாவின் அம்மாவாக (அலமேலு) நடித்திருக்கிறார்
சரிதா இவர் இளமையான அம்மா வாக
அழகான நடிப்பை கொடுத்து இருக்கிறார் வாழ்த்துக்கள்

படத்தில் நாயகி கவர்ச்சிக்கு
குறைவில்லை அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் கவர்ச்சி மழை பொழிந்து இருக்கிறார் இளமை புயலாய் இளைஞர்களின் கனவை தொலைக்க வைக்கும் அவர் நடிப்பு படத்துக்கு தேவை என்றாலும் கொஞ்சம் மிகை !

ரக்ஷிதா அக்கா நடிப்பு நன்றாக இருக்கிறது குழந்தையை பாதுகாக்க தவறிய அவரே தன் கணவர் சரியான நேரத்தில் வந்து சகானாவை காப்பாற்றவில்லை என்று கோபப்பட்டு பிரிவது இந்த காலத்து பெண்களின் மனநிலையை காட்டுகிறார்

இன்று வீதிக்கு வீதி கேமரா பொருத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பொழுது பெண்களுக்கு எல்லா வகையிலும் தொல்லைகளும் துன்பங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இதே கேமரா இல்லாமல் இருந்தால் இன்னும் நிறைய கொலைகளும் வன்முறைகளும் நடந்தேறி இருக்கும் எனவே பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை எக்ஸ்ட்ரீமாக சொல்லி இருக்கிறது இந்த படம்

நிச்சயம் வரவேற்க வேண்டிய படம் பெண்கள் தங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்
புதுமை என்ற பெயரில் கிழிந்த நவீன ஆடைகளை அணிந்து கொண்டு பிறர் கண்களை ஊடுருவிச் செல்லும் இளமை அங்கங்களை காட்டிக் கொண்டு திரியும் பெண்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடி!

குடும்ப குத்து விளக்காக நல்ல எண்ணத்தோடு தமிழ் பாரம்பரியத்தோடு வாழும் பெண்களுக்கு இந்த படம் ஒரு எக்ஸ்ட்ரீம் லெவல் மரியாதை கொடுக்கும்