மலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந் து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, `கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்புகுட்டி, (பெருமாள்)
தீபா,(காளியம்மா) யாசர்(வேங்கை,) சம்பத் ராம்,(கஞ்சா வேலு)சேரன் ராஜ்,
(ஞான சம்பந்தன்)
மணிமாறன்,(மாறன் )
என்ற வேடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் மற்றும்
ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைக் கூறும் படம்.கலன்
ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன்,மகேஷ் மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர். பி.ஆர்.ஓவாக கார்த்திக் பணியாற்றியுள்ளார்
சிவபாலன் என்கிற அப்புக்குட்டி
அப்புகுட்டி,
பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் ஒரு காட்சி இடைவேளையில் ஒரு காட்சி படம் முடியும்போது ஒரு காட்சி என்று வந்து போகிறார் அவருக்கு அவ்வளவு வேலை இல்லை
நான்கு நாள்தான் கால் சீட் என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் அவரை என்கவுண்டர் செய்யும் பொழுது அவர் இரண்டு நிமிடம் என்று கேட்டுவிட்டு போலீஸ் அதிகாரிகள் பற்றி விளக்கமாக பேசும் இடம் கைதட்டல் பெறுகிறார்
காவல்துறை என்பது ஊரைக் காக்கும் கருப்பண்ணசாமி போல செயல்பட வேண்டும் எனக்கு பிறக்கும் மகன் நாளை இந்த ஊரை காப்பான் போலீஸ் வேலையில் சேருவான் என்று சொல்லிவிட்டு அவர் இப்பொழுது நெஞ்சை பார்த்து சுடுங்கள் என்று சொல்லும் கட்டம் சபாஷ் போட வைக்கிறது அப்பு குட்டிக்கு நிறைவான வேடம் நிறைவான நடிப்பு வாழ்த்துக்கள்
காளியம்மாவாக தீபா சங்கர்
: தீபா சங்கர் நடிப்பு நன்றாக இருக்கிறது இதுபோன்ற படங்களில் ஆண்கள்தான் கதாநாயகனாக மாஸ் டைலாக் எல்லாம் பேசுவார்கள் ஆனால், இந்தப் படத்தில்
தீபா சங்கர் அப்படி படம் முழுக்க மாஸ் டயலாக் பேசி இருக்கிறார் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜிடம் மிரட்டலாக பேசும் பொழுதும் மாவட்டச் செயலாளருக்கு சவால் விடும் பொழுது செம மாஸ் தீபா தான் இப்படத்தில் பாஸ்
பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார
இயக்குனர் ஒரு பெண் காளி அவதாரம் ஒரு பெண் லேடி தாதா அவதாரம் இரண்டு பேருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் கள்
பெண் அம்மாவாக, அக்காவாக, மனைவியாக என அமைதியின் சொரூபமாகவே இருப்பாள்.
ஆனால், எப்போது அதிகார வர்க்கம் பெண்கள் மீது அத்துமீறுமோ அப்போதுதான் பெண் அந்த விஸ்வரூபத்தை எடுப்பாள். அதுவும்
வெட்டுடையாள் காளி அவதாரம்
இந்தப் படத்தில் பெண்ணை அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் சாட்சியாக நிறுத்தியிருக்கிறார்கள். எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போது இயற்கையே அதைச் சமன் செய்துகொள்ளும். என்றைக்கும் தர்மம் வீழாது. அதற்கு அழிவே கிடையாது.
என்பதை காளி அம்மா வேடத்தில்
தீபா ஷங்கரின் நடிப்பு நன்றாக இருக்கிறது
போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கும் காட்சி
தன் மகன் வேங்கை
பிணமாக கிடக்கும் பொழுது அழும் காட்சிகள்
வெட்டுடை காளியம்மன் ஆக கர்ஜிக்கும் காட்சி என சிறப்பாகவே நடத்திருக்கிறார்
தீபா சங்கருக்கு விருதுகள் காத்திருக்கிறது இந்த படத்தின் மூலம்
கஞ்சாவிற்கும் பெண் தாதாவாக விஜயா என்ற கதாபாத்திரத்தில் காயத்ரி
மிரட்டி இருக்கிறார் அவர் வரும் காட்சிகள் எல்லாம் சுருட்டு பிடித்துக் கொண்டு ஸ்டைலாக பேசுவது தன்னை கொலை செய்ய வந்த நான்கு பேரிடம் நீங்கள் என்னடா கொலை செய்வது நானே என்னை கொலை செய்து கொள்கிறேன் என்று அவரே கழுத்தை அறுத்துக் கொள்வது தம்பி வேலுவாக நடித்திருக்கும் சம்பத்ராமிடம் கர்ஜிப்பது என எல்லா வகையிலும் இந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் காயத்ரி
வெல்டன் காயத்ரி மேம்
மிரட்டி இருக்கிறார் சம்பத் ராம்
கஞ்சா வேலு வாக நடித்திருக்கும் சம்பத் ராம், வில்லன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் பரட்டை தலையும், மிரட்டல் உருட்டல், விழிகளும் தனக்கு துரோகம் செய்துவிட்டு கஞ்சா விற்கும் சீதாவை அடித்து உதைப்பதும், அவர் தங்கையை மாணபங்க படுத்துவதும்
என வில்லன் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் சம்பத் ராமுக்கு வாழ்த்துக்கள்
கெட்ட போலீஸாக சேரன் ராஜ்
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சேரன்ராஜ் நயவஞ்சக புலியாக இந்த படத்தில் பணத்துக்காக எதையும் செய்யும் காவல்துறை அதிகாரியாக கண்ணியம் இல்லாத நடிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்
: ஏழைகள் மருத்துவமனைக்கு சென்று எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டால் அந்த நோயாளிகளை வைத்துக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிகள் பணத்தை பிடுங்கும் சுயநல மருத்துவர்கள் பற்றி இந்த படம் விரிவாக பேசியிருக்கிறது
இன்று நாட்டிலே நடக்கும் போதை பழக்கங்களான கஞ்சா எப்படி விற்கப்படுகிறது ஆந்திராவில் இருந்து எங்கிருந்து வருகிறது சிவகங்கை சீமையில் அது எப்படி விநியோகப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி இருக்கிறது இந்த படம்
அரசியல்வாதியான மாவட்டச் செயலாளர்கள் ஒருவர் எப்படி அதர்மத்துக்கு துணை போகிறார் அவர் முடிவு என்ன ஆகிறது என்பதையும் இந்த படம் திகிலாக சொல்கிறது
கதை களம்
சிவகங்கைச் சீமை ஆலங்குளம் பகுதியில் கோவில் திருவிழா
பாடலுடன், ஆரம்பமா
கிறது படம் அடடே இது சாமி படம் போல இருக்கு என்று பார்த்தால்
அதன்பின் வேங்கையின் கொலை,
வேங்கை ஏன் கொலை செய்யப்பட்டார்? அதன் பின்னணியில் யார் ?என்று துப்பறியும் பாணியில் போகிறது!
வேங்கை கொலை செய்யப்பட்டதற்கு கஞ்சா வேலுவும், பெண் தாதா விஜயாவும், எப்படி காரணமாகிறார்கள் அங்கு வேலை செய்யும் சீதா ராமன் எப்படி வேங்கைக்கு துரோகியாக மாறினார்
என்பதை பரபரப்பாக விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது இந்த கலன்
வேங்கை கொலை செய்யப்பட்ட பிறகு தீபாசங்கரும் ,அப்பு குட்டியும் ,இவர்களது கூட்டாளிகளும், விஜயாவையும், கஞ்சா வேலுவையும், மாவட்டச் செயலாளரையும் எப்படி போட்டு தள்ளுகிறார்கள் என்பதுதான் கதை
அதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்
இயக்குனர்
படம் அனல் போல பரபரப்பாக போகிறது
படத்தில் காதல் காமெடி என்று வளவள என்று எதுவும் இல்லாமல் தீப்பிடிக்கும் திரைக்கதையில் அனல் தெறிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வீரமுருகன்
வாழ்த்துக்கள் சார்!
இன்று கிராமங்களில் எப்படி இளைஞர்கள் போதையில் அதுவும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் இவர்கள் எல்லாம் திருந்த வேண்டும் என்பதற்காக இந்த படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் நிச்சயம் கிராம மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
அரசாங்கம் இந்த போதை பொருட்கள் எல்லாம் ஒழித்து இளைஞர்களுக்கு நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கலன் உருவாகி இருக்கிறது இது கொதிக்கலனா? அல்லது கொதியை இழந்த கலனா? என்பது தியேட்டரில் தெரியும்
ரசிகர்கள் முடிவு
செய்வார்கள்
ஆக்சன் கிரைம் பட
விருப்பமுள்ள வர்களுக்கு
இது ஒரு அற்புதமான படம் கண்டு களிக்கலாம்
