உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்தி ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது.
இப்படம் மாபெரும் வெற்றி படமாக வந்துள்ளது
ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கால அகழ்வாராய்ச்சி நிபுணர் ஃபாங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கார்
மற்றும் முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம் வீரர் என இரண்டு முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் ஜாக்கி சான் தோன்றுகிறார்.
இரண்டு தோற்றமும் ரசிக்க வைக்கிறது ஃபாங் காமெடிக்கும் தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருக்கும் வீராங்கன் வீரத்திற்கும் பேசப்படுகிறார் எதிர்கால தொழில்நுட்பங்களில் இனி இது போன்ற படங்கள் நிறைய வரலாம்
தொல்லியல் நிபுணரான பேராசிரியர் ஃபாங்கைச் சுற்றி கதை சுழல்கிறது. பனிப்பாறை பயணத்தின் போது தனது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் அமைப்பு, கனவில் அவர் பார்த்த மரகத பதக்கத்தைப் போலவே இருப்பதை அவர் கவனிக்கிறார்.
கனவுகளை நிஜத்துடன் பதக்கம் இணைப்பது போல் அவருக்கு தோன்றுகிறது. ஆர்வத்தால் உந்தப்பட்ட பேராசிரியர் ஃபாங், தனது கனவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடி, பனிப்பாறை கோவிலுக்குள்ளான ஆழமான பயணத்தில் ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தி அற்புதமான சாகசத்தை மேற்கொள்கிறார்.
தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீரங்கான், மற்றும் பூங்குழலி ,
வீராங்கனுடன் வரும் சுந்தரர், மற்றும் வெள்ளை குதிரை ரிசிவர்தன்,
அஜமுகி, மற்றும் விஜயபுரி நாட்டில் தளபதி
வில்லனாக வரும் காலிபன், என எல்லோரும் நடிப்பும் அருமையாக இருக்கிறார்கள்
: இயக்குநர் ஸ்டான்லி டாங் அதிரடி திரைப்படங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். ஜாக்கி சானுடன் பலமுறை அவர் கைகோர்த்துள்ளார். 1992ம் ஆண்டிலேயே, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வசூல் சாதனைகளை முறியடித்த அவர் இயக்கிய ‘போலீஸ் ஸ்டோரி III: சூப்பர் காப்’ படம் அந்த வருடத்திற்கான கோல்டன் ஹார்ஸ் விருதுகளில் சிறந்த படமாக பரிந்துரைக்கப்பட்டது
அதைத் தொடர்ந்து, அவரது ‘ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்,’ ‘போலீஸ் ஸ்டோரி 4: ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்,’ ‘தி மித்,’ ‘குங் ஃபூ யோகா,’ மற்றும் இதர அதிரடித் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை குவித்தன. அவற்றில், ‘ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்’, 1996ல் ஹாங்காங் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த சீன மொழித் திரைப்படமாக சாதனை படைத்தது.
‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்திற்காக ஜாக்கி சானும் ஸ்டான்லி டாங்கும் மீண்டும் இணைந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் வெள்ளைக் குதிரை அந்த ஆற்றை கடக்கும் பொழுது மெய்சிலிர்க்க வைக்கிறது
விஜயபுரி நாட்டு மக்களை கபால முடி இளவரசன் கடத்தி வைத்துக்கொண்டு போர் தொடுக்கும் காட்சிகளில் சண்டை காட்சி அனல் பறக்கிறது
இடைவேளைக்குப்பின் வருகின்ற சண்டை காட்சி ஒரு 20 நிமிடம் செம பரபரப்பாக இருக்கிறது
காதலுக்கு மனோஜ், சிம் ,இருவரும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்
வில்லன் நடிப்பு செம கெத்தாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் தங்கம் எடுப்பதற்காக அவர் செய்யும் சூது, எதிர்பாராதது
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்
ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது
படத்தின் லொகேஷன் அவ்வளவு அருமையாக இருக்கிறது
ஆர்ட் டைரக்டர் பணி கிளைமாக்ஸ் கட்சியில் தத்துவமாக வடிவமைத்திருக்கிறார்
படத்தின் ஒப்பனை பெரிதும் பேசப்படும்
சண்டைக் காட்சிகள் அனல் தெரிக்கிறது ஜாக்கிசான் கடைசி போடும் சண்டை போது பழைய ஜாக்கிசானை பார்த்தது போல் இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கவித்துவமான காதலை காட்டி இயக்குனர் மனதில் இடம் பிடிக்கிறார் வீராங்கனுக்காக நண்பன் சுந்தரனும்
பூங்குழலியும்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வது மனதை வருடுகிறது
மொத்தத்தில் இந்த படம் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிக்கலாம்
