சீசா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கோவை செட்டிபட்டி காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நட்டி நடராஜ் ,
இவர் விடுமுறையில் இருக்கிறார். உயர் காவல்துறை அதிகாரியான நிழல்கள் ரவி,
நட்டி என்கிற முகிலனை அழைத்து. உடனே சார்ஜ் எடுக்க சொல்கிறார் காரணம்
அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு வீட்டில் ராஜண்ணா ,என்கிற வேலைக்காரர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கொலை செய்யப்படுகிறார் .

அதே வீட்டில் கணவன் மனைவியாக, இருக்கும் பாடலினியும், நாயகனும் காணாமல் போக அந்த இருவரையும் தேடிக் கொடுக்கும்படி நாயகியின் அப்பா காவல் நிலையத்தில் கம்பளைண்ட் கொடுக்கிறார் அந்த பொறுப்பு இப்போது நட்டி என்கிற முகிலனுக்கு வருகிறது.

விசாரணை ஆரம்பிக்கிறார் வேலைக்காரன், மூர்த்தி, வேலைக்காரி பார்வதி, ஆடிட்டர் பாண்டியராஜன், பேப்பர் பாய் உள்ளிட்டோர் அந்த வளையத்துக்குள் வருகிறார்கள். அதே சமயம் நாயகனின் நண்பன் செல்வா, அவரும் அந்த வளையத்துக்குள் வருகிறார் இவர்களில் யார்? அந்த கொலையை செய்தது , காணாமல் போன நாயகியும், நாயகனும் என்ன ஆனார்கள் ? என்பதை விறுவிறுப்போடு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

நட்டி நடராஜு

‘யூத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நட்டி நட்ராஜ். இவர் தற்போது நடிகராக வலம் வருகிறார். இவர் ‘கர்ணன்’, ‘மகாராஜா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘சீசா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக மிடுக்கோடு வருகிறார் குற்றவாளியை கண்டுபிடிப்பது, கவனமாக சிந்தித்து கண்டுபிடிக்கிறார். அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர்

விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கா.செந்தில் வேலன் தயாரித்துள்ளார்
இப்படத்தில்
மனநல மருத்துவராக நாயகனுக்கு சிகிச்சை அளிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார் தயாரிப்பாளர் எழுதிய கதை இந்த காலத்திற்கு மிகவும் தேவை
ஆன்லைன் கேம் மோசடியை முன் வைத்து எழுதி இருக்கிறார் நாட்டு மக்களுக்கு தேவையான கருத்து அவருக்கு வாழ்த்துக்கள்

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜிடம் பணிபுரிந்த சரண்குமார் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை பிரமாதமா இருக்கிறது
சிவன் பாடலும் பொங்கல் பாடலும் மெலோடி ஆன லவ் சாங் ரசிக்க வைக்கிறது

நிஷாந்த் ரூசோ

மனநலம் பாதிக்கப்பட்டவராக அதே சமயம் தனது காதலியை பிரிய முடியாமல் அவருக்காக உருகுவது சிவன் பக்தனாக வருவது என நெருப்பில்
எல்லாம் தன்னை வாட்டி கொண்டு
செமையாக மிரட்டி இருக்கிறார் நாயகன்

பாடினி குமார்

எதார்த்தமான நடிப்பால் நம்மை கவருகிறார் நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் வந்து நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்

இயக்குனர் அரவிந்தராஜ்

நாயகியின் அப்பாவாக வந்து உருக்கமாக நடித்திருக்கிறார்
,
மற்றும் ஜீவா ரவி, மற்றும் ஆதேஷ் பாலா, அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு, மற்றும் பிரபாகரன் அருமையாக செட் ஒர்க் செய்திருக்கிறார்கள்

ஒப்பனை ராமச்சந்திரன், பாடினி மற்றும் ரூஸோ, நட்டிக்கு நன்றாக ஒப்பனை செய்து இருக்கிறார்கள்

காஸ்ட்யூம் டிசைனராக முத்து சரியாக வடிவமைத்து இருக்கிறார்

நடனம் ஹேப்பி சன், ஜெயராஜ், மற்றும் இயக்குனர் குணா சுப்பிரமணியம், அருமையான பொங்கல் பாடலுக்கு நன்றாக நடனம் அமைத்திருக்கிறார்கள் சிவன் பாடலுக்கும் நன்றாக நடனம் அமைத்திருக்கிறார்கள்
இப்படத்திற்கு மக்கள்
தொடர்பாளராக ஜே. கார்த்திக்
பணி புரிந்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

மன அழுத்தம் மற்றும் உளவியல் திரில்லர் வகை உள்ளடக்கியது. இத்திரைப்படம்
இப்படத்தில்
எஸ்.ஆர். ஆனந்தா குமார் இணை இயக்குனராகவும், டாக்டர் கே.செந்தில்வேலன் தயாரிப்பாளராகவும், என். சுகுணா ராமு இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்

படத்தின் விறுவிறுப்பான காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள் மணிவண்ணன் மற்றும் பெருமாள் ஆகியோர் ஒளிப்பதிவைப்
சிறப்பாக கையாண்டுள்ளனர்

கதையை மேலும் சுவாரஸ்யமாக்க படத் தொகுப்புப் பணியை வில்சி ஜே. சாஸி மேற்கொண்டுள்ளார், படம் மிகவும் விறுவிறுப்பாக போவதற்கு படத்தொகுப்பு காரணம் இந்தத் திரைப்படம் உளவியல் திரில்லர் விரும்புவோருக்கான ஒரு பரபரப்பான அனுபவமாக இருக்கும்.

ஒரு கிரைம் திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதை அருமையாக கதை எழுதி இருக்கிறார் தயாரிப்பாளர் செந்தில் வேலவன் மேக்கிங் இல் அற்புதமாக அசத்தி இருக்கிறார்
இயக்குனர்.

சீசா நாட்டுக்கு தேவையான படம்