இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தை
தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே,சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ள இப்படம் எப்படி?
வாங்க பார்க்கலாம்
சில திரைப்படங்களை எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற பிரம்மிப்பையும் ஆச்சர்யத்தையும் நம்முள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் அத்திரைப்படத்தின் கதைக்களமாகவும் இருக்கலாம், அப்படத்தின் பிரமாண்டத்திற்காகவும் இருக்கலாம், படத்தின் தனித்தன்மை வாய்ந்த திரைக்கதைக்காக
வும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் சேர்த்து பார்க்க முடியுமானால் அது இயக்குநர் ஷங்கரின் திரைப்படம்தான்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரண்டு வேடங்களில் அசத்தியிருக்கிறார். ஹீரோயின் கியாரா அத்வானி. ஆனால் வயதான ராம் சரணின் ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலிக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் ஷங்கர். தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் அஞ்சலி.
வில்லனாக வேற லெவலில் மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
அவர் வரும் காட்சிகள் ரசிகர்கள் அவ்வளவு கைதட்டி மகிழ்கிறார்கள் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்
ஷங்கருக்கு ஏற்றதொரு கதை என்பதால், பிரமாண்டமாக தந்திருக்கின்றனர். திருவின் ஒளிப்பதிவும், பிரபுதேவா, ஜானி ஆகிய மாஸ்டர்களின் நடனமும், தமனின் இசை யும்
பின்னணி இசை தாறுமாறு தக்காளி சோறு
ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் (ராம் சரண்) தந்தை அப்பண்ணா (ராம் சரண்)
இரட்டை வேடத்தில் நடித்துள்ள ராம் சரண், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஸ்டைலிஷ் ஐஏஎஸ் அதிகாரியாகவும், எளிய கிராமத்து இளைஞனாகவும் தன்னை மாற்றிக்கொண்டு, இரண்டு வேடங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
அஞ்சலியின் சிறப்பான நடிப்பு
அப்பண்ணாவின் மனைவி பார்வதியாக நடித்துள்ள அஞ்சலி, தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது கண்களில் பேசும் உணர்ச்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கின்றன.
தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. குறிப்பாக ‘ஜருகண்டி’ பாடல் செம யாக ரசிக்க
கதை களம்
ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.
அதை எஸ் ஜே சூர்யா எதிர்க்கிறார்
ஐஏஎஸ் அதிகாரியான ராம்சரண், எஸ் ஜே சூர்யாவை தன் அலுவலகத்தில் வைத்து அவமானப்படுத்தி விடுகிறார்
இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை(அப்பா) பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.
ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் சமுத்திர கனி மூலம் ஒரு வீடியோவில் அடுத்த CM ராம்சரண் என்பதை வெளியிட, அதை பார்த்த எஸ். ஜே. சூர்யா ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் உச்சக்கட்டத்தை அடைகிறது அதன்பின் இருவரில் யார் ஜெயித்தார்கள்? என்பது கதை
ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார். அந்த கதாபாத்திரம் வரும் காட்சிகளில் மனதை நெகிழச் செய்கிறது
அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது.
இரண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசமாக வேறுபடுத்தி நடித்திருக்கிறார்
தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் செம மிரட்டலாக இருக்கிறது
ராம் சரண் மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். தேர்தல் ஆணையர் முக்கியத்துவத்தை மக்களுக்கு சொன்ன விதம்.
மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள
அரசியல் பிரமாண்டமான சமூக தீர்த்த உள்ள ஒரு ஜனரஞ்சகமான படத்தை கொடுத்து மீண்டும் தான் ஒரு வெற்றி இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கிறார்
படத்துக்காக உழைத்த ஆர்ட் டிபார்ட்மெண்ட்,
ஒளிப்பதிவு,
மற்றும் படத்தொகுப்பு,
ஒப்பனையாளர்கள்,
சண்டை பயிற்சியாளர்கள்,
என அனைவரும் இந்த வெற்றி படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்
தில் ராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார் ஆதித்ய ராம் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார்கள்
நிச்சயம் பொங்கல் பெஸ்டிவலுக்கு ஏற்ற படமாக கேம் சென்டர் வந்துள்ளது.
