வணங்கான் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

அருண் விஜய்,
ரோஷினி பிரகாஷ்,
சாயாதேவி, பாலா சிவாஜி, முனி சிவகுருநாத்,
நாராயணன், அருள்தாஸ்,
பிருந்தா சாரதி,
சண்முகராஜன்
,ரீத்தா
ஆகியோர் நடிப்பில் உருவான படம் “வணங்கான்”

வணங்கான் படத்தின்
நாயகன் கோட்டி அவன் தங்கை தேவி இருவரும் வசந்த மலர்களால் வாழ்த்தப்பட்டு வாழ்க்கை தொடங்கியவர்கள் அல்ல ,
சுனாமி என்னும் சூறைக்காற்றால் இருவரின் பெற்றோர்களும் சூறையாடப்பட்டு ஆதரவற்று அன்பால் இணைந்த அண்ணன் தங்கை

உனக்கு நீ எனக்கு நீ என்று இருவரும் அவ்வளவு பாசத்தோடு வாழ்கிறார்கள்

அண்ணன் கோட்டி முரட்டு சுபாவம் தப்பை கண்டால் தட்டி கேட்கும்
அல்ல அல்ல வெட்டி சாய்க்கும் குணம் உள்ளவன்

தங்கை தேவியோ நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று ஒதுங்கிப் போகும் சாந்தமான பாசமலர் தங்கச்சி இந்த இருவரையும் வைத்து ஒரு உன்னதமான மீண்டும் ஒரு பாசக் காவியத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா அவருக்கு வாழ்த்துக்கள்

மாற்றுத்திறனாளிக்கு தான் ஒரு மாற்றுத்திறனாளியின் வலி என்னவென்று தெரியும் என்பது தான் இரண்டு வரி கதை என்றாலும் அதை படம் முழுக்க மனிதத்தை பேச வைத்து கனத்த இதயத்தோடு நம்மை வீட்டுக்கு அனுப்புகிறார் அதில் வெற்றி அவருக்கே

‘வணங்கான்’ இந்தப் படத்தில் நாயகனாக. சமூகத்தின் கீழ் நிலையில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் வாழும் மனிதர்களின் வாழ்வை உயிர்ப்புமிக்க ஆவணமாகத் திரையில் பதிவுசெய்துள்ளார் இயக்குனர்

பாலாவை தவிர, வேறு யாரும் இப்படி ஒரு கதை கருவை சொல்ல முடியாது என்பது உண்மை.

‘சேது’ படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் பாலா. அவருடைய இரண்டாம் படமான ‘நந்தா’ அவருடைய மதிப்பை மேலும் அதிகரித்தது என்றால் மூன்றாம் படமான ‘பிதமாகன்’ பாலாவை இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப் படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தியது.

அந்த வரிசையில் வணங்கான் படமும்அவருக்கு
பெருமை சேர்க்கும்
படமாக அமைந்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க தனது
கனவு படைப்பு தைரியமாக சொல்லி இருக்கிறார் வென்று காட்டுவான் இந்த வளங்காண்

பாலாவின் முதல் படம் நடிகர் விக்ரமுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. இரண்டாம் படம் சூர்யாவைத் தனித்துக் கவனிக்க வைத்தது. மூன்றாம் படம் அபாரத் திறமை, அசாத்திய உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றைக் கொண்டிருந்த இந்த இரு நடிகர்களையும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைத்தது. இந்தப் படம் வெளியாகும்போது இருவரும் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டனர். அந்த வகையில் அருண் விஜய் சேருகிறார் .
தீர்க்கமான பார்வை, வெறித்தனமான செயல் ,தங்கை மீது பாசம் ,தவறு செய்பவர்களை வெட்டி சாய்க்கும் கொடூரம், பார்வையற்றவர்கள் மீது காட்டும் மனிதநேயம், என அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் அவரது நடிப்பு பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது பக்கம் பக்கமாக ஒரு கதாபாத்திரம் பேசித்தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பது இல்லை தன்னுடைய உடல் மொழியாலும், பார்வையாலும், நம்மை கவர்லாம் என்று அசத்தி இருக்கிறார்
சுனாமிகாட்டிலேயே பிறந்து வளர்ந்து நாகரிகச் சமூகத்துடன் ஒன்றுபட முடியாத, பேச முடியாத மனிதராக அழுக்கு உடம்பும் பரட்டைத் தலையும் காரைப் பற்களுமாகத் தோற்றத்தில் அதிர வைக்கும் அருண் விஜய். அதோடு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கோபம், ஆக்ரோஷம், பாசம், அழுகை என அனைத்து வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்தி அனைவரையும் அசரடிக்கும் நடிப்பு. அருமையாக இருக்கிறது நடிகருக்கான தேசிய விருதை அருண் விஜய் பெற வாய்ப்பு உள்ளது.

அவருக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடம்
இயக்குனர் மிஷ்கினுக்கும் போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனிக்கும்,
கதைக்கு ஜீவன் உள்ள கதாபாத்திரமாக இரண்டு பேரும் ஜொலிக்கிறார்கள் மனிதநேயம் உள்ள இப்படிப்பட்ட நீதிபதியும், காவல்துறை அதிகாரியும் ,இருந்து விட்டால் நாடு எப்படி இருக்கும் என்று மனசு கொஞ்சம் ஏங்குகிறது அப்படி இந்த இரண்டு கதாபாத்திரத்திற்கும் சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள் இருவரும்
வாழ்த்துக்கள் சார்
.

தேவியாக,
வரும் அருண் விஜய், தங்கையின் நடிப்பு அருமை தன் அண்ணன் கொலை குற்றவாளியாக தூக்கு தண்டனை பெற்று விடுவாரோ என்று அவர் எடுக்கும் விபரீத முடிவு கனத்த இதயத்தை தருகிறது சைகை மொழியால், தன் அண்ணனுடன் பேசும் பொழுதும் போலீஸிடம் விளக்கும் பொழுது நீதிமன்றத்தில் போராடும் பொழுது அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

அடுத்து அருண் விஜயை ஒருதலையாக காதலிக்கும் டீனா,
,டூரிஸ்ட் கைடு வாக அருண் விஜய் மீது அளவுகடந்த அன்பு செலுத்துபவராக உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி அனைவரையும் வியக்க வைக்கிறார் இந்தப் படத்தின் மூலம் . தொடர்ந்து பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்வதற்கு இந்தப் படம் தொடக்கப்புள்ளியாக அமையும்
இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டமும் துறுதுறுப்பும், நிறைந்த பெண்ணாக , அவர் வரும் காட்சிகளில் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் வில்லன்களாக தமிழுக்கு அறிமுகம் ஆகும்
மூவரும் ,
அருண் விஜயால், கொலை செய்யப்படும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல,
இயக்குனர் பாலாவின் ஒவ்வொரு படத்திலும் இப்படி வில்லன்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள்
இருந்து கொண்டே தான் இருக்கும்
ஆனால் மற்ற படங்களில் கொலையாளிகள் இறந்து போவதற்கும் இந்த படத்தில் கொலையாளிகள் இறந்து போவதற்கு வெகு நியாயமான காரணத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்
நிச்சயம் இப்படிப்பட்ட குற்றவாளிகள் சமூகத்தில் நடமாட விடக்கூடாது கொன்றே தீர வேண்டும் என்ற வெறியை படம் பார்ப்பவர்களுக்கு கடத்தி இருக்கிறார் அதுதான் இந்த படத்துக்கு, திரைக்கதைக்கு, கிடைத்த வெற்றி
சமுத்திரக்கனி, அருண் விஜயின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து மிஸ்கினிடம் பேசும் பொழுது அவர் கதாபாத்திரம் இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

நாயகி அப்பாவாக நடித்தவர் (சண்முக சுந்தரம்) முதற்கொண்டு (பால சிவாஜி )பாதிரியார் முதல்
ஒரு சில காட்சியில் வந்துபோகிறவர்கள் வரை அனைவரும் அந்த கன்னியாகுமரி வட்டாரத்து மனிதர்களாகவே வாழ்ந்து அசத்தியிருக்கிறார் கள்
அருள்தாஸ் ஒரு சண்டைக் காட்சிக்கு வந்து அடி வாங்கி போகிறார் மேலும் வந்து வில்ல தனத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்த்தோம் அது மிஸ் ஆனது

இந்தப் படத்தில் எளிய கதை, எளிய மனிதர்கள்,
ஐஸ் விற்பவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்கள் ,
திருநங்கைகள், சர்ச் ,
பார்வையற்ற பெண் குழந்தைகள்,
என சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை மையக் கதாபாத்திரங்களாக வைத்து படமெடுத்தது பாலாவின் அபாரத் துணிச்சலின் வெளிப்பாடு. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, காதல், நையாண்டி சிரிப்பு, கோபம், அறவுணர்வு, அப்பாவித்தனம், ஏக்கம், துக்கம், அழுகை, என அனைத்தையும் ஒரு மாலையாகக் கோத்து திரையில் ஒரு உணர்வுபூர்வமான காவியத்தைப் படைத்திருந்தார் பாலா.
படம் பார்க்கும் நமக்கும் அவர்களுக்கும் ஒரு நெருக்கமாக உணர்வு ஏற்படுகிறது என்பது உண்மை.

சாம் சி .எஸ். பின்னணி இசையும்,
ஜீ வி பிரகாஷ் பாடல்களும் , ஒளிப்பதிவும், படத்திற்கு வெகு சிறப்பாகத் துணை புரிகிறது.

மனிதத்தை போற்றும் முதல் பாடல்
இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக அமையும்
சண்டைக் காட்சிகள் அனைத்தும் நாகரிகப் பசப்புகளை அறியாத முரட்டு மனிதன் எப்படி அடிப்பானோ அப்படியே இருக்கும்படியாக வெகு இயல்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது
.

சமூகத்தில் காமவெறி பிடித்த மனிதர்களின் சிலரின் பேராசையால், எளிய மனிதர்களின் வாழ்வு எப்படி எல்லாம் சிதைவுறுகிறது என்பதையும் யார் அசலான மனிதர்கள், யார் உண்மையிலேயே புறக்கணிக்கப்பட வேண்டிய கொடிய உயிரினங்கள் என்பதையும் பிரச்சார நெடி துளியும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்து ள்ளபடம் ‘வணங்கான்.

இதுபோன்ற தீவிரமான விஷயங்களைப் பேசும் படங்கள் மெதுவாக நகர்பவையாகக் கேளிக்கை அம்சங்களே இல்லாத படமாக இருக்கும் என்ற தலையெழுத்து மாற்றம் செய்து
இப்படிப்பட்ட படங்கள் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று இந்த படம் உணர்த்துகிறது
‘வணங்கான் காலத்தால் அழியாத புகழுடன் தலைமுறைகள் கடந்து ரசிகர்களில் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தொழில் நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
அவர்களுக்கு வாழ்த்துக்கள் தரமான படைப்பை தந்ததற்கு…

ஒளிப்பதிவாளர் ஆர்பி குருதேவ்
கன்னியாகுமரியின் இயற்கை அழகையும் கடலின் அழகான அலைகளையும் அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

எடிட்டர் சதீஷ் சூர்யா
படம் இரண்டு மணி நேரம்தான் படம் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் எடிட்டிங் டேபிளில் படம் வாழ்ந்து இருக்கிறது

ஆர்ட் டைரக்டர் ஆர். கே .நாகு
ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம்
ஆங்காங்கே வியக்க வைக்கிறது

சண்டை பயிற்சியாளர் சிவா
அடி என்றால் ஒவ்வொரு அடியும் இடியாக முரட்டுத்தனமான மனிதருக்கு ஏற்படும் வெறியை சண்டை பயிற்சியில் காட்டி இருக்கிறார் சண்டை பயிற்சியாளர் வெறித்தனமான உழைப்பு

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
மனிதத்தை விதைக்கும் பாடல் வரிகள் மனதை வருடுகிறது

காஸ்ட்யூம் டிசைனர்
பெருமாள் செல்வம்
எளிய மனிதர்களுக்கான அத்தனை ஆடை வடிவமைப்பும் கவனம் பெறுகிறது

என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான படத்தை கொடுக்க உதவி செய்திருக்கிறார்கள்

*மக்கள் தொடர்பு
A ஜான்
வணங்கான் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து இன்று பேசும் படமாக வெற்றி படமாக உருவாக்கிய பெருமை மக்கள் தொடர்பாளர்களுக்கும் சாரும்*

இந்த ஆண்டின் புதிய தொடக்கம், புதிய பயணம், புதிய வெற்றி, இந்த பட குழுவுக்கு கிடைத்திருக்கிறது இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,அருண் விஜய் ,மற்றும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
இது ஒரு வெற்றி படமாக வந்து தலை நிமிர வைத்து தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் ஊட்டி இருக்கிறது

வணங்கான் வணங்கலாம்🙏🙏