தருணம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜன் ஐயப்பா ,
பால சரவணன் ,கீதா கைலாசம் ,ஆகியோர் நடிப்பில் உருவான படம் “தருணம்”

இந்தப் படம் முதல் பாதி காதல் கதையாகவும், இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ், படமாகவும் வந்துள்ளது

Written and Directed by Arvindh Srinivasan, Produced by Pugaz & Eden of Zhen Studios.

இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

ஒரு கொலை,
அதை மூடி மறைக்க நினைக்கும் காதலர்கள்,
தன் காதலியை, காப்பாற்ற துடிக்கும் போலீஸ் மூளை, இதுதான் கதைக்களம்
இரண்டு மணி நேரம் செம விறுவிறுப்பு, செம டிவிஸ்ட், கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதது
:CRBF போலீஸ் அதிகாரியாக இருப்பவர் அர்ஜுன் (கிஷன் தாஸ்)
அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகள் அவரை திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள்

ஐடி கம்பெனியில் பணிபுரிவராக வருகிறார் மீரா (ஸ்மிருதி வெங்கட்)
இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போய் விடுகிறது
கிஷன் தாஸ்,
ஸ்மிருதி வெங்கட்
இருவரும் எப்படி மீண்டும் திருமணத்துக்கு தயாரானார்கள் என்பது சுவாரசியமான தணிக்கதை

நாயகி மீராவை அடையத் துடிக்கும் ஒரு தலை காதலராக காமத்தோடு அலையும் ராஜன் ஐயப்பா
இந்த மூவரையும் வைத்து ஒரு விறுவிறுப்பான இன்ட்ரஸ்டிங்கான லவ் & கிரைம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்

இடைவேளைக்கு பிறகு தான் படம் கதைக்குள் போகிறது அதுவரை காட்சிகள் காதலை மையப்படுத்தியே போகிறது

ஸ்ருதியை காப்பாற்ற கிஷன் தாஸ் எடுக்கும் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கிறது அதுவும் அந்த லிப்டில் இருந்து கிஷன் தாஸ் தப்பிக்கும் காட்சி செம பரபரப்பு

ஸ்மிருதி வெங்கட் ,
ராஜன் ஐயப்பாவிடம் நண்பராக பழக ராஜனோ காமத்தோடு பழகுவது இன்றைய இளைஞர்கள் எவ்வளவு தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை அணுகுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது இந்த படம்.

பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஆண்களுக்கு பெண்கள் தான்
தண்டனை தர வேண்டும் என்பது இல்லை அவளை மணமுடிக்கும் காதலனும் சேர்ந்து தண்டனை கொடுக்கலாம் என்று சொல்கிறது இந்த படம்
: அதேபோல கீதா கைலாசம் ,தன் மகனை தேடி வரும் பொழுது அங்கு நடக்கும் சம்பவங்கள் திரை க்கதை யில்
செம விறுவிறுப்பு
இப்படித்தான் போகும் என்று யூகிக்க முடியாத திரைக்கதை, மூளைக்கு செம வேலை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்
காதல் கதையாக ஆரம்பித்து ஒரு கிரைம் த்ரில்லர் நாவலை படித்த திருப்தி நமக்கு ஏற்படுகிறது அதுவும் இடைவேளைக்கு பிறகு செம பரபரப்பு, அடுத்து என்ன நடக்கும் என்று சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு திரைக்கதை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

: கிஷன் தாஸ், போலீஸ் அதிகாரியாக, புத்திக்கூர்மையையும் நிதானத்தையும் இள வயது முதிர்ச்சியையும் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார்
புன்னகைத் தவழ ,
ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்
ஸ்மிருதி வெங்கட் பதட்டப்பட இவர் பதட்டமே இல்லாமல் ஒவ்வொன்றையும் ஈசியாக செய்து முடித்து முடிவில் கைதட்டல் வாங்குகிறார்

. ஸ்மிருதி வெங்கட் சிறப்பாக நடித்திருக்கிறார்
மீரா என்ற கதாபாத்திரத்தில் அழகு பதுமையாக வந்து ஜம் என்று மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்

. ராஜன் ஐயப்பா ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
சரியான வில்லத்தனம் பெண்களை அடைய வேண்டும் என்ற போலி முகமூடிஅனிந்த மோசமான கதாபாத்திரத்தை முன்னிறுத்தி சபாஷ் வாங்குகிறார்

கீதா கைலாசம் சிறந்த கதாபாத்திரத்தில் அம்மாவாக மகனைத் தேடி ஏக்கத்தில் நடித்திருக்கிறார் பால சரவணன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

தேஜாவு படத்தைஇயக்கிய
‘இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் தேஜாவு படத்துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் தருணம்

ஒரு கொலை, அதைச் சுற்றி பல மர்ம முடிச்சுகள், போலீஸ் அதிகாரிகளைக் குழப்பும் நிகழ்வுகள் என துப்பறியும் கதைக்கான அடிப்படை அம்சங்களை அழகாக நிறுவி, இடைவேளை க்கு பின்னர் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக கொலை நிகழ்ந்த வீட்டுக்குள்
ஒவ்வொருவராக உள்ளே வர அதை சமாளிக்கும் விதம் நன்றாக இருக்கிறது ஸ்ருதி வெங்கட்டின் அப்பா அம்மா ,
அந்த கட்டடத்தின் வாட்ச்மேன் ,
ரோகித்தை தேடி வரும் போலீஸ் அதிகாரிகள்,
நண்பனை தேடி வரும் பால சரவணன்,
மகனைத் தேடி வரும் அம்மா,
இப்படி எல்லா
கதாபாத்திரங்களும் படத்திற்கு விறுவிறுப்பை தருகின்றனர்
எல்லோரும்
கண்டறிய முடியாமல் இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் விசாரணைக் காட்சிகளை சுவாரசியமாக்குகின்றன.

சந்தேக வளையத்துக்குள் சிக்காமல் ஒரே சூழலை வெவ்வேறு காட்சிகளாக முன்வைப்பது ‘ரஷோமான்’, ‘அந்த நாள்’ உள்ளிட்டப் படங்களின் பாணியில் இருந்தாலும் புதுமையான காட்சி அமைப்பு மூலம் ரசிக்க முடிகிறது.

ஆபாசம் நிறைந்த
ரோஹித் கதை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லப்படுவது மர்ம முடிச்சுகளை அதிகரித்தாலும் ஒரு அவர் கெட்டவர் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு
குறிப்பாக ஆபாச வீடியோக்கள் தொடர்பான காட்சிகளை
கிஷன்தாஸ்
அதை கண்டுபிடித்து ரோஹித்தின் நண்பனிடம் மிரட்டும் காட்சி செம சூப்பர்

.
இசை தர்புகா ஷிவா
பின்னணி இசை
அஸ்வின் ஹேம் நாத்
“காற்றை கேட்டேன்” பாடல் செம சூப்பர் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது

ஒளிப்பதிவு பட்டாச்சாரியார்
ஆரம்பக் காட்சிகளில் வரும் சண்டைக் காட்சிகளிலும் அடுத்தடுத்து அந்த ரிச்சான வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளும் கேரளாவில் நடக்கும் கல்யாண நடன காட்சிகளும், ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் சிறப்பாக வந்திருக்கிறது.

எடிட்டர் அருள் இளங்கோ சித்தார்த் ,
இரண்டு மணி நேரம் 16 நிமிடம் படம் எந்த இடத்திலும் பிசுறு தட்டாமல் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் படத்தொகுப்பாளரின் பங்கு மகத்தானது எடிட்டிங் டேபிளில் உயிர் பெற்றிருக்கிறது இந்த தருணம்

ஆர்ட் டைரக்டர்
வர்ணால்யா ஜெகதீசன்,
ஸ்மிருதி வெங்கட் வீட்டுக்குள் இருக்கும் அந்த கடிகாரத்தில் இருந்து வீட்டுக்குள் அழகான பொருட்களில் இருந்து மற்றும் பல இடங்களில் ஆர்ட் டைரக்டரின் திறமை பளிச் என்று இருக்கிறது

சன்டை பயிற்சியாளர் டான் அசோக்,சி பிரபு
இருவரும் ஆரம்பக் காட்சியில் சண்டை காட்சி பரபரக்க வைக்கிறார்கள் கிஷன் தாஸை, ராஜன் ஐயப்பா, ஆள் வைத்துக் கொல்லும் இடம் அந்த சண்டை கட்சியும் ரசிக்க வைக்கிறது

காஸ்ட்யூம் டிசைனர் நேகா ஸ்ரீ ஹரி
காஸ்டியூமர்
ரங்கசாமி
காஸ்ட்யூம் இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தி போகிறது கிஷன் தாஸ், மற்றும் ஸ்மிருதிவெங்கட், இருவருக்கும் அழகான காஸ்டியூம் கொடுத்திருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் அண்ட் காஸ்டியூமர்

பாடல்கள் மதன் கார்க்கி
பாடல்கள் வரிகள் ரசிக்க வைக்கிறது

PRO : Sathish, Shiva

மொத்தத்தில் இந்த தருணம்” இன்றைய இளைஞர்களின் தவறான போக்கால் நல்ல வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது என்பதை சொல்கிறது இந்த படம்

நல்ல துணைவன் அமைந்துவிட்டால் எத்தகைய பிரச்சனையும் ஒரு பெண்ணால் சமாளிக்க முடியும் என்று சொல்கிறது இந்த “தருணம்”

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் நண்பர்கள் சேர்க்கையிலே என்ற தத்துவத்தையும் சொல்கிறது இந்த “தருணம்”

நிச்சயம் உங்களை இரண்டு மணி நேரம் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தோடு ரசிக்க வைக்கும் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளது தருணம்”