நேசிப்பாயா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

முழுப்படமும் காதலை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது காதலும், அதைதொடர்ந்து வரும் ஆக்ஷனும், பிரிவும், வெளிநாடு ஸ்டன்ட் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கிறது

மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார்
படம் முழுக்க துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார் காதலுக்காக உறுதி யாக இருக்கிறார் இந்த கதாபாத்திரம்
அவருக்கு பொருந்தி போகிறது
தமிழ் சினிமாவில் மேலும் ஒரு அழகான நடிக்க தெரிந்த நாயகன் இவரை வரவேற்கலாம்

தயாரிப்பாளர்

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்
மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது
தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்

.

கதைக்களம்

அதிதி ஷங்கரை பார்த்ததும்,
காதல் வயப்படுகிறார் நாயகன் ஆகாஷ் முரளி, அதீதியிடம் அதனை வெளிப்படுத்துகிறார். பின்னர் ஆகாஷ் காட்டும் அன்பு கண்டு
அதிதி பின்னர் சில காரணங்களை கூறி, ஒருவேளை அப்படி நடந்தால் உன்னை விட்டு போய்டுவேன் என்று கூறுகிறார்.

அதற்கு ஆகாஷும் சம்மதிக்க இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது
பிரேக் அப் ஆன பிறகு
அதிதி வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார்.

கார்த்திக் ஆதிநாராயணன்

கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் அதிதி சிறைக்கு செல்கிறார்
தன் மகனை அதிதி தான் கொலை செய்தார் என்று குஷ்பூ நம்புகிறார்

. 2 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர் காதலி சிறைக்கு சென்றதை அறிந்து ஆகாஷ் போர்ச்சுக்கல் செல்கிறார்.

அங்கு சென்று அதிதியை சந்தித்தாரா ஆகாஷ் ?

கார்த்திக் ஆதிநாராயணனை கொலை செய்தாரா அதிதி ?

அவருடைய வழக்கறிஞர் இந்திராணி சொன்னது என்ன?

அதிதியை சிக்க வைக்க வரதராஜன் (ராஜா )ஏன் ஆர்வம் காட்டுகிறார்?

தியாவை, கொலை செய்ய குஷ்பூ ஜெனி என்ற கூலிப்படைத்தலைவியை சிறைக்குள் அனுப்பி ஏன் ?

அதிதியை கொலை வழக்கில் சிக்க வைத்த சதிக்கும்பல் யார் என்ன நடந்தது?

இதை நாயகன் ஆகாஷ் கண்டுபிடித்தாரா? காதலியை கைப்பிடித்தாரா?
என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது
நேசிப்பாயா படம்

ஆகாஷ்

இரண்டு ஆண்டுக் கால காதல் பிரிவு, நாயகன் துயரம், காதலின் பிரிவு, மீண்டும் காதல், மீண்டும் பழைய காதலின் ஞாபகங்கள் எனப் பயணிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஆகாஷ் நடிப்பில் அதற்கான நியாயத்தைச் சொல்லி இருக்கிறார்
தன்னை மீட்டெடுக்கும் காதல், காதலி மீதான ‘அதீத’ காதல் என அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது
அவர் கதாபாத்திரம்
அழுது நடிப்பதில், ஆக்சன் காட்சிகளிலும், ரொமான்ஸ் கட்சியிலும் ஆகாஷ் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார் புதுமுகம் என்று உணர்வே ஏற்படாத அளவுக்கு நடிப்பை நன்றாக வாரி வழங்கி இருக்கிறார் வாழ்த்துக்கள்

அதீதி

தியா கதாபாத்திரம் ” அடம்பிடிக்கும் அதிதி
எதிர்காலத்தை மட்டும் சிந்திக்கும் அந்த கதாபாத்திரம் காதல் மட்டும் வாழ்க்கை இல்லை அதற்கு மேலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என கனவு காணும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது
அதிதி இந்த கதையில் அருமையாக பொருந்தி போகிறார்
காதலனை பிரேக் அப் செய்வதற்கு சரியான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் இடைவெளி வேண்டும் என்று அவர் சொல்லும் அந்த கதாபாத்திரம் பேசுவது படம் பார்ப்பவர்களுக்கு நியாயமாக தெரிகிறது நடிப்பில் அதிதி பாஸ் மார்க் வாங்கிவிட்டார்

ஆதிநாராயணாக வரும் சரத்குமார் கம்பீரம் ,
அவர் மனைவியாக வரும் வசுந்தரா கதாபாத்திரத்தில் குஷ்பூ தாய்மை ஸ்தானத்தில் . உயர்ந்து நிற்கிறார் .

சரத்குமார் நண்பனாக வரும் வரதராஜன் கதாபாத்திரத்தை நண்பனுக்காக எதயும் செய்யும் வேடத்தில் (ராஜா) வெளுத்து து வாங்கி இருக்கிறார்
நல்ல பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மீண்டும் ராஜா

ஸ்பெஷல் ஆபிசர் கௌதமாக பிரபு ஒரு காட்சியில் வந்தாலும்
சிறப்பு

இயக்குனர் விஷ்ணுவர்தன்

இதுவரை எழுதிய கதைகளிலேயே காதல் கதையை கடைசியில் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் விதமாக முதலும் கடைசியுமாக பயன்படுத்திய உத்தி தான். வெற்றி
படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு கவித்துவமாக அமைந்ததோ அதை விட ஒரு படி மேலாக படத்தின் திரைக்கதை பர பரக்கிறது
ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெட்டு வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி ஒரு வெற்றிகரமான படத்தை கொடுத்திருக்கிறார் ஸ்டைலிசான இயக்குனர் என்று
பெயரெடுத்தவர் படமும் அதே போல ஸ்டைலிசான காதல் படமாக இருக்கிறது

Director of Photography : Cameron Eric Brison

படத்தின் ஒளிப்பதிவு ரிச் ஆக இருக்கிறது
வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட விதமும் பெங்களூரில் படமாக்கப்பட்ட காட்சிகள் சண்டை காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் கைவணத்தில், காதல் காட்சிகளிலும், ஒளிப்பதிவு பளிச் என்று இருக்கிறது

Editor :A Sreekar Prasad

படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது படத்தொகுப்பாளர் பங்கு மகத்தானது இடை வேளைக்கு பிறகு படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது

Action : Federico Cueva

சண்டை காட்சிகள் அனல் பறக்கிறது வெளி நாட்டில் நடக்கும் ரேஸிங் காட்சியும் சண்டை காட்சிகளும் படத்தை தூக்கி நிறுத்துகிறது

*Story : Vishnu Varadhan
Screenplay & Dialogue Writers : Neelan Sekar, Vishnu Varadhan*

ஒரு காதல் கதை எப்படி கொடுத்தாள் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு ஸ்டைலிஷ் ஆக படத்தை இயக்கி கதை வசனம் எழுதி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஸ்டைலிஷ் ஆன இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் காதல், சண்டை காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் கூடிய கிரைம் திரில்லர்
போன்ற எல்லா விதமான அம்சங்களும் கலந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்
இயக்குனர்

Costume designer : Anu Vardhan

அதிதியின் காஸ்ட்யூம் கவனம் பெறுகிறது ஆகாஷ் காஸ்டியூம் அழகாக இருக்கிறது குஷ்பூ சுந்தர் காஸ்டியூம் வித்தியாசமாக இருக்கிறது சரத்குமாருக்கு கம்பீரமான காஸ்டியூம் மான்டியாக வருபவரின் நடிப்பு அவருடைய காட்சி கவனம் பெறுகிறது காஸ்ட்யூம் டிசைனர் க்கு வாழ்த்துக்கள்

Lyricists : Pa Vijay, Vignesh Shivan, Adesh Krishna

நேசிப்பாயா, பாடல்
மற்றும் காதல் பாடல்கள் வரிகள் ரசிக்க வைக்கிறது

Choreography : Dinesh

நடனம் நன்றாக இருக்கிறது

Makeup & Hair : Serina Tixeira , Sabari Girison*

ஒப்பனை உறுத்தாத அளவில் உள்ளது பெரும்பாலும் இயல்பாக இருக்கிறது அனைத்து கலைஞர்கள் ஒப்பனையும்
கண்களை வசீகரிக்கும்

*மக்கள் தொடர்பாளர்

திரு.சுரேஷ்சந்த்ரா அவர்கள்
திரு.அப்துல் நாசர் அவர்கள்

மற்றும் படத்தில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நேசிப்பாயா உங்களை நேசிக்க வைக்கும் ரசிக்க வைக்கும் படத்தில் ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது நேசிப்பாயா வெற்றி பட்டியலில்