காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

இது ஒரு வித்தியாசமான காதல் கதை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு இயக்குனர் கதை எழுதி, இயக்கி, இருக்கிறார்
இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்கள் வரிசையில் இந்த படமும் சேருகிறது
புதுமையான இயக்குனர் என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி இனி பாராட்டப்படுவார்.
கதை திரைக்கதை

சித்தார்த்(ரவி மோகன்). அவருக்கு நிச்சயதார்த்தம்
நிருபமா உடன் நடக்கவிருக்கும் போது அது
நின்றுவிடுகிறது. காதலி செய்த துரோகத்தை நினைத்து வேதனையில் இருக்கிறார்.
இதனால் தொழிலில் ஒரு விரக்தியான சூழலுக்கு தள்ளப்படுகிறார்

இதையடுத்து திருமணம், குழந்தைகள் மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விடுகிறது

இந்நிலையில் சித்தார்த், அவரின் நண்பர்களான சேது(வினய்), கவுடா(யோகி பாபு) ஆகியோர் விந்தனுவை ஃப்ரீஸ் செய்வது குறித்து பேசுகிறார்கள். ஓரினச்சேர்க்கையாளரான சேதுவுக்கு தாயில்லாமல் குழந்தை பெற விருப்பம். தாயில்லாமல் குழந்தை எப்படி என கவுடா தயங்குகிறார். அவர்கள் மூன்று பேரும் பேசுவது இன்றைய நவீன காலத்தில் உச்சகட்ட புதுமை என்றே சொல்லலாம்
அடுத்து நாயகி
ஸ்ரேயா(நித்யா மேனன்) தனக்கு துரோகம் செய்த கணவரை பிரிகிறார். அதன் பிறகு விந்தனு தானம் பெற்று தாயாக முடிவு செய்கிறார். அவர் செயற்கை முறையில் தாயாக முடிவு செய்து விந்தனு தானம் பெற்று கர்ப்பமாகிறார். இந்நிலையில் வேலை விஷயமாக பெங்களூர் செல்லும் இடத்தில் சித்தார்த்தை சந்திக்கும் ஸ்ரேயாவுக்கு அவர் மீது ஃபீலிங்ஸ் வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது?

ரவி மோகனும்
நித்யா மேனனும்
இணைந்தார்களா ?

இருவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டதா ?

புதுமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் கனவு நனவானதா?

ஓரினச்சேர்க்கையாளரான வினய் தன் பார்ட்னரை கரம் பிடித்து வாழ்க்கைத் துணை ஆக்கினாரா?

திருமணத்திற்கு முன்பே டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நித்யா மேனனை அவரது அம்மா லட்சுமி கிருஷ்ணனும், பாடகர் மனோ, இருவரும் ஏற்றுக் கொண்டார்களா? இதையெல்லாம் பரபரப்பாக வித்தியாசமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் புதுமையான ஒரு காதல் கதையை வித்தியாசமாக சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்

ரவி மோகன் (சித்தார்த்)

சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி வாழ்ந்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜீவன் உள்ள காட்சிகளாக இருக்கிறது நித்யா மேனனுடன் கதைக்குத் தேவையான கெமிஸ்ட்ரியை அளவாகக் கொடுத்ததோடு, சிறுவன் பார்த்தீவுடன் உறவு பாராட்டும் காட்சிகளில் இயல்பான ஃபீல் குட் உணர்வைக் கொடுத்துள்ளார்
படம் முழுவதும் ஒரு வித ஏக்கம் அவர் முகத்தில் சோகம் நிழலாடுகிறது

பிரிந்துசென்ற காதலி திரும்ப வரும் இடத்தை அவர் தயக்கத்துடன் அணுகியதும் எதார்த்தமானதொரு நடிப்பு!

அந்த இடத்தில் டி .ஜே. பானுவையும் நித்யா மேனனையும் பேலன்ஸ் செய்யும் காட்சி சிறப்பாக இருக்கிறது
ரவி மோகன் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் காதல் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருக்கிறார்

சிறுவன் ரொஹான் சிங், வயதுக்குரிய குறும்புத்தனம், தந்தை இல்லாத வெறுமை, தேவையான அரவணைப்பு கிடைத்தவுடன் ஆனந்தம் எனச் சுட்டி பையனாக நடிப்பில் வெற்றிக்கான கோலினைப் பறக்கவிட்டுள்ளான்.
படத்திற்கு மிகப்பெரிய பலமாக ரெகான் வந்த பிறகு கதையில் சூடு பிடிக்கிறது

டி.ஜெ. பானு

ரவி மோகன் (சித்தார்த்)
முன்னாள் காதலியாக வரும் இவர் மீண்டும் காதலைத் தொடங்க வருகிற இடத்தில் இருக்கும் தயக்கம், பழைய காதலின் எதிர்பார்ப்பு, நினைவுகளால் அடையும் ஏமாற்றம் எனச் சிறிய திரை நேரத்தைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார் டி.ஜெ.பானு.
அந்த அகன்ற விழிகள் பேச தயங்கும் மொழிகள் காதலனை விட்டு பிரிந்து போய்விட்டோமோ என்ற குற்ற உணர்வு நடிப்பில் கலக்கி இருக்கிறார்

வினோதினி

நித்யா மேனனுக்குத் துணையாக வரும் வினோதினி ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைத்தும், உணர்வுபூர்வமான இடங்களில் எமோஷன்களில் ஸ்கோர் செய்தும் வலு சேர்க்கிறார்.
நித்யா மேனனுக்கு துணையாக இவர் வந்த பிறகு
கதையின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது தனிமையில் இருக்கும் நித்தியா மேனனையும்
அவர் குழந்தையும் பார்த்துக் கொள்ளும் சித்தியாக மனதில் பதிகிறார்

நித்யா மேனன்

மனதார விரும்பிய காதலன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று தூக்கி எறியும் நித்திய மேனன் செயற்கை
கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி மருத்துவமனை செல்லும் அவருடைய வயிற்றில் சித்தார்த்தின் உயிரணுவின் மூலம் குழந்தை உருவாகிறது.
இதனால் ஒரு குழந்தைக்கு தாயாகும் நித்தியா மேனன் நடிப்பு பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது
அழுகை, கோபம் ஏக்கம், தாய்மை என ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறார் நடிப்பு ராட்சசி நித்யா மேனன்

காதலின் ஏமாற்றம், தைரியமான முடிவுகள், நேர்மையான கோபம் என வாழ்வை இயல்பான கண்ணோட்டத்தோடு அணுகுகிற நவீனக் காலத்துப் பெண்ணாக நித்யா மேனன் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்

அந்த காலத்து சாவித்திரி பத்மினியை நடிப்பின் மூலம் ஞாபகப்படுத்துகிறார்

சிங்கிள் மதராக வருகிற இரண்டாம் பாதியில் கதையின் கருவுக்குத் தேவையான நடிப்பை அநாயாசமாக வழங்கி வலுவாக ஸ்கோர் செய்திருக்கிறார்

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய நிழல் நிஜமாகிறது

படத்தில் சோபா எப்படி மனதில் பதிந்தாரோ அதேபோல நித்தியாமேனன் ஜம்மென்று அமர்ந்து கொள்கிறார் தனது மகன் பார்த்தீவுடன் உறவு பாராட்டும்
போதும்

தான் எடுத்துக்கொண்ட கட்டிட தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்று போராடும் போதும் புதுமைப் பெண்ணாக சபாஷ் வாங்குகிறார் நித்யா மேனன்

யோகிபாபு சிரிக்க வைக்கிறார், ஓரினச் சேர்க்கையாளராக வினய் முக்கிய பாத்திரத்தில் வந்தாலும் பாதியில் காணாமல் போகிறார். அவரது கதாபாத்திரத்திரம்
தமிழ் சினிமாவில் புதுசு

லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்
இயக்குனர் கிருத்திகா உதயநிதி
“ஏம்மா.. நான் இன்னும் வெர்ஜினா இருக்கேன்னு நினைக்கிறியா?” தந்தை எதிரில் தாயிடம் கேட்கும் இளம் பெண்..

காதல் – திருமணத்தில் வெறுப்புகொண்டு, செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் இளைஞி..

குழந்தையுடன் தனியாக வாழும் பெண்ணை மனதார காதலிக்கும் ஆண்.

மன விலகல் என்றவுடன் ‘டேக் இட் ஈஸி’யாக விட்டு விலகும் காதலன் – காதலி.

ஓரினச் சேர்க்கையாளரை இயல்பாக நண்பனாக ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள்.

காதலித்து திருமணம் செய்துகொள்ளும் இரு ஆண்கள்; ஆசீர் வதிக்கும் பெரியவர்கள். வாழ்த்தும் நண்பர்கள். ..

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில்தான் இந்தக் காட்சிகள்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி

அவர்களின் துணிச்சலுக்கு பாராட்டுகள்!: இளம் தலைமுறையை ஈர்ப்பதற்கான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

இது போன்ற கதைகளை பெண் இயக்குனர்கள் கவனமாக கையாள வேண்டும் அந்த விதத்தில் மிகவும் தெளிவாக கத்தி மீது நடப்பது போல் சிரமப்பட்டு கையாண்டு இருக்கிறார் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் வினய், கதாபாத்திரம் நித்யா மேனன், கதாபாத்திரம் இப்படி எல்லா கதாபாத்திரங்களிலும் புதுமை நிரம்பி வழிகிறது

குறிப்பாக தமிழில் இதுவரை யாரும் தொடாத Gay Parenting குறித்து துணிச்சலாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது. விந்து தானம், தன்பாலின திருமணம் போன்ற விஷயங்களை துணிச்சலுடன் பேசியதையும்
வரவேற்கலாம்

இப்படி எல்லாம் ஒரு கதையை யோசிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும் என்று நிரூபித்த கிருத்திகா உதயநிதி அவருக்கு வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர்கள்

*Production House: Red Giant Movies Pvt Ltd
Co- Producer: M.Shenbaga Moorthy, R.Arjun Durai*

இசை ஏ ஆர் ரகுமான் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிறது கதையோடு ஒன்றி போய் பாடல்கள் வருவதால் பாடல்களில் இனிமையான இசையை கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்

Director of photography : Gavemic Ary

ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக இருக்கிறது பெங்களூரில் படமா க்கப்பட்ட காட்சிகளும் சென்னையில் படமாக்கப்பட்ட காட்சிகள் பாடல் காட்சிகளும் ரிச்சாக வந்திருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் கைவண்ணம் நன்றாக தெரிகிறது

Lyricist: Snekan, Vivek, Mashook Rahman, krithika Nelson

பாடல் வரிகள் படத்திற்கு பொருந்தி போகிறது அனைத்து பாடல்களிலும் கவிஞர்களின் கைவண்ணம் ஓங்கி இருக்கிறது

Editor : Lawrence Kishore

படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளர் பங்கு அதிகம் எந்த இடத்திலும் படம் லேக்ஆகாமல் சீராக கொண்டு சென்று இருக்கிறார் படத்தொகுப்பாளர்

choreography: Shobi Paulraj, Sandy

நடனம் நன்றாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது

Art Director: Shanmugaraja

நித்யா மேனன் வீடு, ரவி மோகன் வீடு, அலுவலகம், மற்றும் பாடல் காட்சிகள், கிளைமாக்ஸ் கட்சியில் வினய் திருமணம் இப்படி எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டரின் பங்கு மகத்தானது

Costume Designer : Kavitha J, Divya Lakshana

காஸ்ட்யூம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கிறது குறிப்பாக ரவி மோகன், நித்யா மேனன் காஸ்ட்யூம் கவருஙவண்ணம் இருந்தது

Makeup : Raj Kennedy

ஒப்பனை சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

Costumer : V. Moorthy

படத்தில் அனைவருக்கும் ஆடை வடிவமைப்பு கச்சிதமாக இருந்தது

PRO : AIM Sathish & shiva

மொத்தத்தில் இந்த காதலிக்க நேரமில்லை ஒரு புதுமையான படைப்பு இளைஞர்களை கவரும் வண்ண வித்தியாசமான கதையை தேர்வு செய்து எழுதி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி அவருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பட்டியலில்