இன்று சமூகத்தில் குடும்பஸ்தனாக வாழும்மிடில்கிளாஸ் மனிதர்கள் பிரச்சனைகளை கண் முன் கொண்டு வந்து திரைப்படமாக உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள் இயக்குனரும் &நக்கலைட் குழுவும்
மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை என்பதால் நம்மால் சீக்கிரம் ஒன்றி போக முடிகிறது
கொங்குத் தமிழ் பாஷையும் அந்த மனிதர்கள் சிறப்பும் படத்தை உச்சத்தில் கொண்டு போய் தூக்கி நிறுத்துகிறது
இதன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில்,
உருவாகியுள்ள இந்த குடும்பஸ்தன் வெற்றி படமாக வந்திருக்கிறது தயாரிப்பாளருக்கும்
இயக்குனருக்கும்
வாழ்த்துக்கள்
நடிகர் மணிகண்டன் நாயகனாக ,
சான்வே மேகனா,
நாயகியாக,
குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்
அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்
: ஃபேமிலி, சென்டிமென்ட், ஃப்ரெண்ட்லி, லைட் ஹார்டட் நிறைந்த ஃபேமிலி படம் தான்.
குடும்பஸ்தன்
இந்த ஆன்டின் தரமான வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லும் அளவுக்கு படம் ரசிக்க வைக்கிறது
இது நியூ ஜெனரேஷன் ஃபேமிலி காமெடி படம்.
என்பதை மறுக்க முடியாது
அதேசமயம் படத்தில் எமோஷனல் சரிவிகிதத்தில்
கலந்து கொடுத்து இருக்கிறார் டயலாக் ரெசிபி ரசிக்க வைக்கிறது நடிப்பு ருசிக்க வைக்கிறது
புதுசாக கல்யாணமான ஒருத்தனுக்கு நிறைய கடமைகள் இருக்கும். அந்தக் கல்யாணத்திற்குப் பிறகு அவன் அடைகிற மாற்றங்கள் என்ன
அவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவப்பட்டானா? அவதிப்பட்டானா ?
என்பதை காமெடியாக சொல்லி கலக்கி இருக்கிறார்கள்
மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு கடன் ஒரு இன்று தலையாய பிரச்சினை சின்னதாக வாங்கும் கடன் வட்டி போட்டு பெரிதாக வரும் பொழுது அதன் சுமை அறுத்துகிறது
இன்று வேலை சரியாக அமைய விட்டால் ஒருவன் வாழ்க்கை எப்படி ஆகும் அவன் குடும்பத்தை எப்படி நடத்த முடியும் என்பதையும் பக்குவமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.
அப்படி வேலை இல்லாதவனை இந்த சமூகமும் அவன் உறவுகளும் எப்படி ஏளனப்படுத்துகிறார்கள் என்பதையும் சொல்கிறது இந்த படம்
அதே சமயம் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் ஒரு கணவன் பொய் சொல்வதால் அந்த பெண்களுக்கு எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது என்பதையும் இந்த படம் சொல்கிறது
மணிகண்டன்
ஒரு கதை ஆசிரியர் என்பதால் மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை துல்லியமாக கணித்திருக்கிறார் அது அவரது வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறதுஅவருடன் இணைந்து
பிரசன்னா பாலச்சந்திரன், உதவி இயக்குனர் கிருஷ்ண காந்தி, மூவரும் சேர்ந்து
வசனத்தை எழுதி இருக்கிறார்கள்
வசனம் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது
இயக்குனர் ராஜேஷ் காளி சாமி
திரைக்கதையில் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார்
அதே நேரம் க்ளைமேக்ஸில் நம்மை உணர்ச்சிவசப் படவைக்கிறார் இன்றைய. தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் இயல்பான நடிப்பை மணிகண்டன் வெளிப்படுத்துகிறார் ‘ மணிகண்டன் தத்ரூபமான நடிப்பை வழங்கியுள்ளார். குரு சோமசுந்தரம், மலையாள நடிகர் குடசனாட் கனக்கம் ஆகியோரும் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளனர் “குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம். அனைத்து மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ம் இந்த படம் பிடிக்கும் மணிகண்டனும் நக்கலைட்ஸ் குழுவும் வேற லெவல்.உழைத்திருக்கிறார்கள் நிறைய காட்சிகள் குடும்பங்களை தியேட்டர்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
மிடில் கிளாஸ் பையனின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படையாக காட்டி இருக்கிறார் இயக்குனர். அதேபோல் அக்மார்க் குடும்பஸ்தனாக மாறியிருக்கிறார் மணிகண்டன்.
எதார்த்தமான கதையை அனைத்து தரப்பு ஆடியன்ஸும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கின்றனர். இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசித்து என்ஜாய் செய்யலாம்
தொழில் நுட்ப கலைஞர்கள்
: இயக்குனர் ராஜேஷ்வர் காளி சாமிஅவருடன்
இணைந்து
பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் கதை திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்
பிரசன்னா வசனம் எழுதி இருக்கிறார்
பேச்சுலராக இருக்கும் தனி மனிதன் குடும்பஸ்தனாக மாறிய பிறகு அவனுக்கு எத்தனை சுமைகள் என்பதை இயல்பான முறையில் வசனம் எழுதி திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்
ஒளிப்பதிவு சுஜித் என் சுப்பிரமணியன்
கோவை முழுவதும் ஷெட் போட்டு எடுத்தது போல ஆங்காங்கு ஒளிப்பதிவில் நம்மை கவருகிறார்
படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு படம் விறுவிறுப்பாக பாகவும் காமெடியாகவும் கலகலப்பாகவும் செல்வதற்கு படத்தொகுப்பாளர் பங்கு அதிகம்
அரங்கமைப்பு சுரேஷ்
அரங்கமைப்பு எந்த இடத்திலும் இயல்பை மீறவில்லை
காஸ்டியூமர் மீரா காஸ்ட்யூம் கச்சிதமாக இருக்கிறது இயல் பாக இருக்கிறது
தினேஷ் சுப்பிரமணியன் ஆக்சன் காட்சிகள் படத்திற்கும் பல ம்
வைஷாக்கும்
மோகனராஜன்
பாடல் கள்
எழுதி இருக்கிறார்கள் வரிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது
வைசாக் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது ஒரு வெற்றி படத்துக்கு இசை எவ்வளவு முக்கியம் பாடல் எவ்வளவு முக்கியம் என்பதை கலந்து கொடுத்திருக்கிறார்
PRO: திரு .சுரேஷ் சந்திரா அவர்கள் திரு . அப்துல் நாசர் அவர்கள்
Co-Producers: P. Kanagaraj
என இந்த படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த ஆண்டின் தரமான ஒரு வெற்றி படமாக குடும்பஸ்தன் வந்திருக்கிறது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் பேச்சுலர்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் வெற்றிக்கு உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
