இந்த காவியம் ஜப்பான்-இந்தியா இணைந்து தயாரித்த அனிமேஷன் திரைப்படமாகும். இந்த படத்தை யுகோ சாகோ தயாரித்துள்ளார். இப்படத்தை கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு வனராஜ் பாட்டியா இசையமைத்துள்ளார்.இந்தியாவின் ஆதிகால பாரம்பரிய புராணத்தின் மறுவடிவம், வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 450-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்திய -ஜப்பானியக் கலைஞர்கள் இணைந்து, 100,000 கையால் வரையப்பட்டன.
அனைத்தும் ரசிக்க வைக்கிறது பிரமிக்க வைக்கிறது
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத ஒரே காவியம் ராம காவியம் தான் அதுவும் அனிமேஷன் முறையில் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கிறது தமிழுக்கு குரல் கொடுத்தவர்கள் படத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்
இந்த காவியத்தை
கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் மூலம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 4கே தரத்தில் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராமாயணம் என்பது ஒரு பழங்கால சமஸ்கிருத காவியமாகும், இது இளவரசர் ராமர் தனது மனைவி சீதையை இராவணனின் பிடியிலிருந்து மீட்பதற்கு அனுமன் படையின் உதவியுடன் தன் தேடலைத் தொடங்கினார். இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது.இதனை பாரம்பரியமான முறையில் வால்மீகி முனிவர் இயற்றியுள்ளார்.
: இந்த காவியத்துக்கு ராமருக்கு செந்தில்குமார் தமிழ் வாய்ஸ் கொடுத்துள்ளார்
அருமையாக பொருந்தி இருக்கிறது
சீதா கதாபாத்திரத்துக்கு மகேஸ்வரி வாய்ஸ் கொடுத்துள்ளார்
அவ்வளவு சாந்தம் அவ்வளவு இனிமை
பிரவின் குமார்
ராவணாவுக்கு தமிழ் வாய்ஸ் கொடுத்துள்ளார்
கம்பீர கர்ஜனை
மிரட்டலாக இருக்கிறது
தியாகராஜன் லஷ்மண் கதாபாத்திரத்திற்கு வாய்ஸ்
கொடுத்துள்ளார் சிறப்பு
லோகேஷ் அனுமன் வாய்ஸ்
கொடுத்துள்ளனர் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது
தமிழுக்கு ஏற்றபடி தமிழ் வாய்ஸ் நன்றாக புரிந்து இருக்கிறது ராம பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
இயக்குனர்கள்
இயக்குநர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொயிச்சி சசகி ஆகியோர் இணைந்து இயக்கிய இப்படம், மக்கள் வரவேற்பு பெறும் என்பது உறுதி
மிகவும் சிரமப்பட்டு சிரத்தையோடு
ஈகி இருக்கிறார்கள் இயக்கம் சிறப்பாக இருக்கிறது
தயாரிப்பாளர்
இந்த காவிய படைப்பு
தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 4K ஃபார்மெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்
இந்த அனிமேஷன் ராமாயணம் 2000-ஆம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
கிரியேட்டிவ் டைரக்டர்
மேலும், ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற மிகச்சிறந்த வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த அனிமேஷன் ராமாயணம் திரைப்படத்திற்கும் பங்களித்துள்ளார்.
அவரின் பங்களிப்பு அற்புதமாக படத்துக்கு உயிரூட்டி இருக்கிறது
மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த டெக்னீசியன்கள் தொழில் நுட்ப கலைஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் எல்லோரும் காண வேண்டிய படைப்பு இந்த ராம காவியம்
: இளவரசர் ராமரின் புராணக்கதை 1993 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பானில் இணைந்து தயாரிக்கப்பட்ட “ராமாயணம் – தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” என்ற முழு நீள அனிமேஷன் திரைப்படம். படத்தின் முதல் பாதி முழு கதைக்கும் அடித்தளத்தை அமைத்து, ராமர் சீதையை எவ்வாறு சந்தித்தார் என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது. இது ராமரின் வனவாசப் பயணத்தையும் அதன் விளைவுகளையும் சித்தரிக்கிறது.
இந்தத் திரைப்படம் ராமரின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்கிறது. ராமரின் வாழ்க்கை, சீதாவை மணப்பதற்கு முன்பும், அவருக்கு அரியணை வழங்கப்படுவதற்கு முன்பும், அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் பரதனுக்கு அரியணையைப் பெற ராணி கைகேயி புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது வரை, ஆராயப்படுகிறது. ராமர் 14 ஆண்டுகள் நாடுகடத்தப்படுவதையும், இந்தப் படம், ராமரின் வாழ்க்கையில் சீதை, ராமரின் சகோதரர் லட்சுமணன், எதிரி ராவணன், அவரது நண்பர் ஹனுமான், மன்னர் தசரதர், ராணி கைகேயி, கும்பகர்ணன், பரதன் மற்றும் மண்டோதரி ஆகியோரின் பாத்திரங்களை அழகாக சித்தரிக்கிறது.
ராமரின் தந்தை மன்னர் தசரதர் வயதாகும்போது அவருக்கு அரியணை வழங்கப்படுவதிலிருந்து கதை தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து மிதிலாவின் இளவரசி சீதாவை ராமர் திருமணம் செய்து கொள்கிறார். ராமரிடம் அரியணை ஒப்படைக்கப்பட்டதை ராணி கைகேயி அறிந்ததும், அவள் மன்னர் தசரதரை ஏமாற்றி ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்கிறாள், இரண்டு சத்தியங்களை கேட்கிறாள்: அரியணை தனது மகன் பரதனுக்கு வழங்கப்பட வேண்டும், ராமரை 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்ப வேண்டும். இதை அறிந்ததும், சீதையும் ராமரின் சகோதரர் லட்சுமணனும் ராமருடன் காட்டிற்குச் செல்ல முடிவு செய்கிறார்கள். இதன் விளைவாக, தசரதரின் மறைவுக்குப் பிறகு பரதன் மன்னரின் வாரிசாக மாறுகிறார். கதையில் ஆழமாகச் சென்று, சீதையின் அழகைக் கேள்விப்பட்ட ராவணன், அவளைக் கடத்த முடிவு செய்கிறான். படத்தின் இரண்டாம் பகுதி, சீதையை மீட்க ராமருக்கும் ராவணனுக்கும் இடையே நடக்கும் காவியப் போரை சித்தரிக்கிறது. ராமர் சேதுவின் உருவாக்கத்தையும், படையின் காயங்களை குணப்படுத்த சஞ்சீவனி மூலிகையைப் பெற ராமரிடம் மலையைக் கொண்டு வரும் ஹனுமானின் பயணத்தையும் படம் விளக்குகிறது
: அனிமேஷன் மூலம் அருமையான ஒரு திரைக்காவியத்தை கண்டு களித்து மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது நிச்சயம்
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
